(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 37 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

சாரங்கனும் பாரதியும் உள்நுழைந்த உடன் பார்த்தது கோவத்துடன் அமர்ந்திருந்த தங்கள் அன்னையரைத்தான்.... எச்சரிக்கை எண் எட்டு ஏற்றுவதற்கான அனைத்து அறிகுறிகளும் அன்னையரின் முகத்தில் தெரிந்தது....

“ஏண்டா சப்பாணி... where is the party-ன்னு குத்தாட்டம் போடலாம்ன்னு வந்தா, மம்மீஸ் ரெண்டு பேரும் நம்மளை குந்த வச்சு குமுறிடுவாங்க போலயே..... வாஸ்து பிரகாரம் உக்கார்ந்து இருக்கற போஸே சரியில்லையே.....”

“ஆமாண்டி பக்கி எனக்கு கூட பயமாத்தான் இருக்கு... சமீபத்துல குண்டக்க மண்டக்க ஏதானும் நாம பண்ணினோம்... எனக்கு எதுவும் ஞாபகம் இல்லையே....”

“தினம்தான் ஏதோ ஒரு வம்பை இழுத்துட்டு வரோம்... இந்த உக்ர ஸ்வரூபம் எதுக்குன்னு தெரியலையே.....”

அவர்கள் அன்னியரிடம் இருந்து கவனத்தை திருப்ப அங்கு மொத்த குடும்பமும் நின்றிருந்தது.... ராஜா மற்றும் மயூரியின் குடும்பத்தையும் சேர்த்து....

“ஆஹா ஆப்பு நம்ம ஆளுங்க வடிவத்துல வந்திருக்குடா சப்பாணி....”

“அச்சோ மொத்த குடும்பமும் வந்திருக்கறதை பார்த்தா எதுவும் நல்லதா தோணலையே....”, இருவரும் மிக நல்ல பிள்ளைகளாக அவர்களின் அன்னையர் அருகே சென்றனர்...

“ஹலோம்மா என்ன அட்மாஸ்பியரே ரொம்ப சூடா இருக்கு... எனக்கு சில்லுன்னு ஏதானும் தாங்களேன்....”, சாரங்கன் கேட்க...

“ஆமாம்மா எனக்கும் அப்படித்தான் இருக்கு.... அதனால எனக்கும் சேர்த்து எடுத்துட்டு வாங்க....”

“ஜில்லுன்னு எதுவும் இல்லை.... சூடா அடுப்புக்கரிதான் இருக்கு எடுத்துட்டு வந்து வாய்ல போடவா.... வெளி சூட்டுக்கும் உள் சூட்டுக்கும் சரியா போய்டும்...”

சாரங்கனின் அம்மா சொல்ல, பாரதியும் சாரங்கனும் திரு திருவென முழித்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்....

“Why மம்மி... எதுக்கு இத்தனை கோவம்....”

“ஏன்னு உங்க ரெண்டு பேத்துக்கும் தெரியலை... இதை நாங்க நம்பணும்....”

“yes மம்மி... எங்களை மாதிரி two innocents மேல எதுக்கு கோவமா இருக்கீங்கன்னு எங்களுக்குத் தெரிஞ்சே ஆகணும்....”

“மம்மி கிம்மின்னே அம்மியைத் தூக்கி தலைல போட்டுடுவேன் பார்த்துக்க.... அங்க நிக்கறாங்களே அவங்க யாருன்னு தெரியுதாடா....”

“அது நம்ம அப்பாம்மா, அவரையா உங்களுக்குத் தெரியலை... what a pity.... அப்பா அம்மாக்கு உங்களைத் தெரியாம போகற அளவுக்கு என்ன தப்பு பண்ணினீங்க.....”

“மகனே ஏற்கனவே நீ சிக்கன் 65 ஆகா மாறுவதற்கான பிரகாசமான ஒளி தெரியுது... இதுல உன் வாயைக் கட்டாம பேசி மொத்தமா கைமா ஆகிடாத....”, சாரங்கனின் தந்தை சொல்ல அவன் தன் திருவாயை மூடிக் கொண்டான்....

“இப்போ நீங்க சொல்றீங்களா பாரதி மேடம் அங்க நிக்கறது யாருன்னு..... தெளிவாவே கேக்கறேன்... உங்க அப்பா பக்கத்துல வெள்ளை சட்டை போட்டுட்டு நிக்கறாரே அவர் யாரு....”

“அது ராஜாம்மா.....”, பாரதியின் பதில் அவளுக்கே கேட்டதா என்று தெரியவில்லை... அத்தனை பம்மல் அந்த பதிலில்...

“ஓ... சரி அவரை உனக்கு எப்படி தெரியும்.....”

“அதும்மா அது....”, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பாரதி மென்று முழுங்கினாள்....

“நேரடியா பையன் வீட்டுக்கே போய் சம்மந்தம் பேசற அளவுக்கு தைரியம் இருக்கற உனக்கு இப்போ ஏன் வாய் குளறுது....”

“அம்மா இப்போ என்னாச்சு ஆமாம் நான் ராஜாவை லவ் பண்றேன்... அதே மாதிரி சப்பாணி மயிலை விரும்பறான்....”, பாரதி சொல்ல நங்கென்று அவள் மண்டையில் கொட்டினான் சாரங்கன்...

“ஏய் பக்கி... உன் மேட்டர் மட்டும் சொல்லுடி... எதுக்கு என்னையும் சேர்த்து கோர்த்து விடற....”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அப்பறம் என்னை மட்டும் அம்மா கொத்து பரோட்டா போடவா... சின்னாபின்னமா ஆகருதுன்னா அது ரெண்டு பேரும்தான்....”

“நல்லா வருவம்மா நல்லா வருவ... இப்படியே எனக்கு எல்லா சைடுல இருந்தும் சங்கூது... உருப்படும்....”

“அங்க என்ன குசுகுசுன்னு பேச்சு... ரெண்டு பேரும் எங்களுக்கு பதில் சொல்லுங்க...”

“பாரதி நீ காதலிக்கற விஷயத்தை ஏன் எங்கக்கிட்ட சொல்லலை...”

“அம்மா என்னம்மா தமிழ் நாவலோட மரபையே மாத்தற.... எப்பவுமே தன்னோட பொண்ணோ, பையனோ லவ் பண்றது அவங்க அம்மா, அப்பாக்கு தெரியவே தெரியாது... யாராவது மூணாவது மனுஷங்கதான் வந்து சொல்வாங்க.... அந்த மரபை நாங்க எப்படி மீறுறது... அப்பறம் எங்களை நாவல் உலகம் தள்ளி வச்சுடாது....”

“அதே உலகத்துல இன்னொரு மரபு இருக்கு, அது உனக்கு தெரியுமா... எப்பவுமே பையன்தான் லவ் சொல்லுவான்... பொண்ணு இல்லை... அந்த மரபை மட்டும் நீ மீறலாமா...”

“கரெக்ட்ம்மா அதனாலதான் என்னோட மயிலுக்கிட்ட நானே லவ் சொல்லிட்டேன்... பாருங்க நான் மீறவேயில்லை....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.