(Reading time: 7 - 13 minutes)

தொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 07 - சுபஸ்ரீ

idhaya siraiyil aayul kaithi

ஞ்சலாடும் சாருவின் மன சஞ்சலத்தை அவ்வப்பொழுது ஆகாஷ் குடும்பம் போக்கினாலும். மீண்டும் மீண்டும் உள்ளேன் ஐயா என சஞ்சலங்கள் மனதை சூழ்ந்துக் கொண்டுதான் இருந்தது. சாருவின் அகமாற்றத்தினால் உண்டான புறச் சோர்வை ஆகாஷ் கண்கள் கிளிக் செய்துக் கொண்டு இருந்தன.

அறியாத உணவு பதார்த்தங்கள், தட்டுகளுடன் ஸ்பூனும் போர்க்கும் யுத்தம் செய்யும் சத்தம், ருசியான வாசனை, கண்கூசாத வெளிச்சம், அமைதியான கூச்சல், புரியாத மாடர்ன் ஆர்ட் சித்திரங்கள், செயற்கை புன்னகை என ரெஸ்டாரண்டில் பருவ மாற்றங்கள் வியாபதிருக்க . .

கிண்டல் கலாட்டாவுடன்  டின்னர் செய்துக் கொண்டிருந்தனர் பத்மாவதியின் மொத்த குடும்பமும். சாருவும் அவர்களுடன் இணைந்திருந்தாள்.

சாரு மனதளவில் இனம்புரியாத நிம்மதியை சில தருணங்களில் உணர்ந்தாள். அது ஆகாஷின் மீதுள்ள நம்பிக்கையினால் வந்துள்ளதா? என குழப்பமாக இருந்தது. அதை முழுவதுமாய் ஏற்க தடுமாறியது மனது. அனைவரும் சாப்பிட்டு முடித்து கிளம்பினர்.

“நாளைக்கு உன் வீட்டுக்கு வரேன் சாரு குட் நைட்” என்ற ஆகாஷை   “வாங்க” என பற்கள் வெளியே தெரியாமல் உதட்டை அழகாய் அசைத்து புன்னகைப் பூத்தாள்.

சாருவிற்கு விரைவிலேயே அவள் பிரச்சனையில் இருந்து தீர்வு காண உதவ வேண்டும் என்கிற எண்ணம் ஆகாஷை இரவு தூங்க விடாமல் செய்தது. எனினும் இந்த போட்டோ பிரச்சனை முற்றுப் பெற்றதில் ஒரு நிம்மதி இருந்தது.

காலையில் லியா சில கேஸ் விஷயமாக பேச வந்துவிட்டாள். அதன்பிறகு மற்ற கேஸ்விஷயங்களை ஆராய நேரம் சென்றுவிட்டது. பெற்றோருடன் டெக்சாஸ்சிற்கு சில தினங்களில் கிளம்ப எண்ணமிட்டான்.

மற்ற அலுவல்களை முடித்து  மாலை ஏழு மணி அளவில் சாரு வீட்டை அடைந்தான். அவளும் அவனின் வருகைகாக காத்திருந்தாள்.

“சொல்லு சாரு வாட்ஸ் யூர் பிராப்ளம்?” சுற்றிவளைக்காமல் விஷயத்தை தொட்டான்.

இந்த வார்த்தை கேட்டதுமே அவள் கண்களில் லேசாக நீர் கோர்க்க “ஹே கமான் .  .” அவள் கைகளை இதமாக பிடித்தவன் “இப்ப சொல்ல இஷ்டமில்லன . .வேண்டா” ஆறுதலாக பேசினான்.

அவள் கண்ணீரை சிரமத்தோடு விழுங்கி “சொல்லிட்றேன் . .முடியல” என்றவள் கண்களை இருக மூடினாள்.

அவனும் அவளே தொடங்கட்டும் என விட்டுவிட்டான். சிறு மௌனத்திற்கு பிறகு “என் அக்காவபத்தின விஷயம் . .”

அவளை கூர்நது நோக்கியபடியே இருந்தான் . .“ம்” என்ற ஒற்றை எழுத்து பதிலாகியது.

“இரண்டு வருஷத்துக்கு முன்னாடி என் அக்கா ஒரு ஆசிரமத்துல போய் சேர்ந்துட்டா . . அவள வெளில கொண்டு வர நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணினோம் ஆன  எதுவுமே .  .” பலனில்லை என்பதாக உதட்டை சுழித்து தலையசைத்தாள்

“நாங்கனா யாரு?” ஆகாஷ் உன்னிப்பாக ஒவ்வொரு வார்த்தையும் உள்வாங்கினான்.

“அம்மா . . அப்பா . . நான்”

“உன் அக்காவ போர்சபிலா ஆசரமித்துல வெச்சிருக்காங்களா?”

“இல்ல . . அவளே இஷ்டப்பட்டு அங்க இருக்கிறதா சொல்றா”

“வாட் கைண்ட் ஆப் ஆஷ்ரம்? ஆன்மீகமா இல்ல ஆர்பனேஜ் ஹோமா?”

“அங்க ஆன்மீகமும் இருக்கு . . ஆதரவற்ற ஏழை குழந்தைங்க பெரியவங்க எல்லாருக்கும் அடைக்கலமும் தராங்க”

“இப்ப உனக்கு என்ன வேணும்?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“என் அக்கா எங்களுக்கு திரும்ப வேணும் ஆகாஷ். அவ என்னோட இருக்கணும். ஐ மிஸ் ஹெர் வெரி மச்” இந்த வார்த்தைகளை அவள் சொன்னதும் மனதில் பாரம் வடிந்ததைப் போல் ஓர் உணர்வு. கண்களில் வைர துளிகள் உருண்டன.

ஏக்கத்துடன் தன்னை நோக்கியவளை “உன் அக்காவுக்கு மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்றது இல்ல ஆன்மீகத்துல இன்ட்ரெஸ்ட் இருந்திருக்கலாமே . . அது தப்புனு சொல்ல முடியாது இல்லயா சாரு”

“அவளுக்கு ஆன்மீகத்துல இன்ட்ரெஸ்ட் இந்த லெவல்லாம் இல்ல . . சின்ன வயசுல அம்மா பூஜைக்கு இல்ல கோயிலுக்கு கூப்பிட்டகூட வரமாட்டா . . “நான் வரமாட்டேன் சாமிய என்னை வந்து பாக்க சொல்லுனு கிண்டல் பண்ணுவா” அப்படி இருக்கிறவ எப்படி ஆகாஷ்” கேள்வியாய் அவனை பார்த்தாள்.

“அப்படி இல்ல சாருமா எல்லாரும் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க . . கவிஞர் கண்ணதாசன் தன் லைப் ஸ்டார்டிங்ல எப்படி இருந்தார் அப்புறமா எத்தன பெரிய மாற்றத்தை சந்திச்சார் .  .அர்தமுள்ள இந்துமதம் எழுதலையா? சொல்லு”

அவன் சொன்ன விஷயங்களை அவள் ஏற்றதாக தெரியவில்லை. மௌனமாக ஆனால் அவள் வார்த்தைகளில் உறுதியாக இருந்தாள்.

“உனக்கு டான்ஸ்ல ஈடுபாடு மாதிரி அவங்களுக்கு ஆன்மீகத்துல . . அவ்வளவுதான் . . கண்டிப்பா மனசுக்கு கஷ்டமாதான் இருக்கும்  . . சரி உன் அக்காவுக்கு வேற எதாவது பிரச்சனை இருந்ததா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.