“என்ன?” புருவத்தை சுறுக்கியபடி கேட்டாள்
“என்ன சொல்ல . . ம்ம் லவ் பெயிலியர் . . இல்ல படிப்பு வேலைல பிராப்ளம் இந்த மாதிரி?” என கேட்டவனிடம்
“ஆமா லவ் பெயிலியர் . . ” தயக்கமாய் ஆமோதித்தாள்
“யார லவ் பண்ணாங்க?”
“சூர்யா . . எங்க டூரூப்ல இருக்கான்” எனச் சொல்லி . . புகைப்படங்களை காற்றினாள். ஏற்கனவே பாத்தவைதான் இருந்தும் மீண்டும் அவைகளை ஆகாஷ் கண்கள் ஆராய்ந்தன.
“ஆனா சூர்யா அவளை லவ் பண்ணல . . என்னைதான் லவ் பண்றான்” என்றாள் சாரு.
இந்த பதில் ஆகாஷை உலுக்கிவிட்டது. “டேய் அப்ப நீ வில்லனா எனக்கு” மனதில் நினைத்தவன் சற்றும் யோசிக்காமல் “நீ அவனை லவ் பண்றியா?” என கேட்டுவிட்டான். அவள் ஆம் என சொல்லிவிடுவாளோ என மனம் பதறியது.
“ச்சே இல்ல” என்றாள்
“அப்பாடா எங்க லவ் பண்றனு சொல்லிடுவியோனு பயந்துட்டேன்” என உளறி வைக்க
“நீ எதுக்கு பயப்படணும்” சந்தேகமாய் அவள் கேட்க
“இல்ல அப்புறம் உன் அக்கா லைப் என்ன ஆகும் பாவம் . . டிரையேங்கல் லவ் ஸ்டோரி ஆகிட்டா?” என உளறியதற்கு ஈடுகட்டினான்.
“அந்த ஆசிரமத்துல எதோ இல்லீகலா நடக்குதோனு எனக்கு சந்தேகமா இருக்கு ஆகாஷ்”
“என்ன இல்லீகலா?”
“சரியா சொல்ல தெரியல ஆனா எதோ . .எதோ . . .”
அதே சமயம் இந்தியா . . தமிழ்நாடு . . சதுரகிரி மலை.
சதுரகிரி மலை அடிவாரத்தில் இருந்த ஆசிரமம். சுவாமிஜி என்று அனைவராலும் அன்போடு அழைக்கபடுபவர் சிறிய மேடையில் அமர்ந்திருந்தார். இரு புஜங்களை தொட்டு விளையாடும் பட்டு போன்று வெண்ணிற மயிர்ச்சுருள். நீண்ட தாடி கூர்மையான நாசியும் வட்ட முகம். பார்க்கவே அமைதியாக தெய்வாம்சமாக இருந்தார். அவர் பஞ்சகச்சமும் அங்கவஸ்திரம் அணிந்திருந்தார். துளசி மாலையும் ஸ்படிக கல் மாலையும் கழுத்தை அலங்கரித்த வண்ணம் இருந்தது.
கீழே மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தனர் அவர்களுக்கு பின்னே சுவாமிஜியின் சிஷியர்கள் மற்றும் சில வெளிநாட்டினர் அமர்ந்திருந்தனர். சுற்றிலும் இயற்கை அன்னை தன் பாசகரத்தால் அணைத்திருந்தாள். சில்லென்ற காற்று அவ்வப்பொழுது வருடிச் சென்றது.
சுவாமிஜி பத்மாசனத்தில் இருந்தார். சுவாமிஜி கணீரென்ற வெண்கல குரலில் பேசிக் கொண்டிருந்தார் “பழங்காலத்தில் ராணிகள், செல்வந்தனர்கள் அல்லது பிரபுகளை பல்லாக்கில் தூக்கி செல்வார்கள். சுமை தூக்குபவர்கள் “ராமா ராம்மையா !!! கண்ணா கண்ணையா !!! இப்படி எதையாவது அனைவரும் ஒரே மாதிரி சொல்வார்கள் இது எதற்கு தெரியுமா?” அவர் கேட்க
அனைவரும் கண்டிப்பாக அதற்கு தக்க பதில் தம்மிடம் இல்லை என்பதை உணர்ந்தோ என்னவோ மௌனமாக இருந்தனர்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
“கிராமத்தில் ஏற்றம் இறைப்பவர்கள், ஓடகாரர், வயலுக்கு தண்ணீர் பாய்சுபவர், நாத்து நடுபவர் என சிலர் குழுவாக பாடுவார்கள் இல்லையெனில் “ஏலேலோ ஐலசா” என்பதைப் போன்ற சொற்டொற்கள் பயன்படுத்துவார்கள்.
இந்த கோஷங்கள் எதற்கு? ஓடும்போதும் உழைக்கும் போதும் அதிகமான அளவு மூச்சு உள்ளிழுக்கப் படுகிறது. ஆனால் அதை வெளியிட அவகாசம் போதாமல் மீண்டும் மூச்சு உள்ளிழுக்கப்படுகிறது. இதனால் பெருமூச்சு மூச்சுதிணறல் வருகிறது.
ஆனால் இந்த கோஷங்கள் உள்ளே சென்ற மூச்சு காற்றை வேகமாகவும் ஒரே சீராகவும் திணறல் இல்லாமலும் வெளியேற்ற உதவுகின்றன.
இதன் உட்பொருள் தெரிந்தோ தெரியாமலோ மிகச் சரியாக செய்தார்கள்.
இதன் பெயர்தான் பிராணாயாமம். பிராணா என்றால் சுவாசம். ஆயாமம் என்றால் தீர்க்கமாக சுவாசத்தை வெளியிடுதல்.
இதை தன்னையும் மறந்த நிலையில் கவனித்துக் கொண்டிருந்தாள் சாருவின் மூத்த சகோதரி சுவாதி.
தொடரும் . .
{kunena_discuss:1199}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.