(Reading time: 9 - 18 minutes)

“என்னாது ப்ளாக் பெல்ட்டா.... இதெல்லாம் அநியாயம் செல்லக்குட்டி... உனக்கு எத்தனை பெல்ட் வேணும்ன்னு சொல்லு... வேணும்ன்னா தங்கத்துல கூட வாங்கித்தரேன்.... அதுக்காக கல்யாணத்தை தள்ளிப்போடறது கொஞ்சம் கூட நல்லா இல்லை...”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஹா ஹா ஹா... சாரங்கா உங்கப்பா சும்மா சொல்றார்... அடுத்த மாசம் பத்தாம்தேதி பாரதி கல்யாணம் பன்னிரெண்டாம் தேதி உன்னோட கல்யாணம்... நான்கூட ரெண்டு கல்யாணத்தையும் ஒரே மேடைல வச்சுக்கலாம்ன்னு சொன்னேன்... ஆனா உங்கம்மா தான் அது சரியா வராது... மொதல்ல பொண்ணு கல்யாணம்... அதுக்கு பிறகுதான் பையனுக்குன்னு சொல்லிட்டாங்க.....”

“ஆ என் வயத்துல பாலை வார்த்தீங்க.... அடுத்த ஜென்மத்துல இந்தப் பக்கி இல்லாம நல்ல குணமுள்ள மருமகள் உங்களுக்கு கிடைக்க இப்போலேர்ந்தே நான் ஆண்டவனை வேண்டிக்கறேன்....”, சாரங்கன் சொல்ல பாரதி அவனை அடிக்கத் துரத்தினாள்...

இன்று போல் என்றும் இவர்கள் சண்டையும், சந்தோஷமுமாக வாழ வாழ்த்தி விடைபெறுவோம்.....  

Hello Friends... எல்லாரும் எப்படி இருக்கீங்க.... Final அப்டேட் போட்டாச்சு... மிக நீண்ட காலம் எழுதிய கதை... கதை ஆரம்பித்தது பயந்த சுபாவம் உள்ள ஹீரோ, அதிரடியான ஹீரோயின் இவர்கள் நடுவில் நடக்கும் சம்பவங்கள் இதுதான்... ஆனால் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் கதையின் மொத்த போக்கையே மாற்றிவிட்டது....இந்த கருவும் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.... எப்பொழுதுமே நான் புதன் பதிவை செவ்வாய் இரவுதான் அடிப்பேன்... நேற்று என்னால் ஒரு வரிக்கூட அடிக்க முடியவில்லை.... இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து இரண்டு மணி வரை அடித்தது வெறும் எட்டு பக்கங்கள்தான்... கலைஞர் மறைவு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.... RIP கலைஞர்... டைப் செய்து முடித்து அப்படியே அனுப்பிவிட்டேன்... கண்டிப்பாக படித்தால் நிறைய பிழைகள் இருக்கும்... பிழைகளுக்கு மன்னிப்பை கோருகிறேன்.... 

இதுவரை இந்தக் கதைக்கு கமெண்ட்ஸ் கொடுத்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... குறிப்பாக என்னை நாட்டமை பதவிக்கு உயர்த்திய Adhravoj-க்கு ஸ்பெஷல் நன்றிகள்... சொம்பு வாங்கி ரெடியாக வைத்துவிட்டேன்... துண்டு மட்டும்தான் பாக்கி... எங்கேனும் நாட்டமை வேலை காலியாக இருந்தால் சொல்லவும்... 

அடுத்த கதை அறிவிப்புடன் விரைவில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.... நன்றி

முற்றும்

Episode 36

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.