(Reading time: 9 - 18 minutes)

இவர்கள் இருவரும் தங்கள் அன்னையிடம் வழக்காடிக் கொண்டிருக்கும்போது ராஜா பாரதியின் அன்னையின் அருகில் வந்தான்...

“அத்தை இன்னும் எவ்ளோ நேரத்துக்கு இப்படி கோவமா இருக்கறா மாதிரி act கொடுக்கப்போறீங்க... பாவம் என்னோட ரதி.... பாருங்க வாய் ஓயாம பேசற அவ இப்ப வாயைத் திறக்க முடியாம முழிச்சுட்டு உக்கார்ந்துட்டு இருக்கா...”

“என்னாது நடிச்சாங்களா....”

“பின்ன உன்னை மாதிரி ஒரு அடங்காப்பிடாரியை கல்யாணம் பண்ணிக்கறேன்னு துணிஞ்சு ஒருத்தர் வரும்போது நாங்க விட்டுடுவோமா....”

“அம்மா இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்...”

“மயிலு நீக்கூட மாமாக்கிட்ட சொல்லலையே... பாரு மாமா எப்படி உன்னோட அத்தைய பார்த்து பயந்துட்டேன்னு....”

“அது அது அவங்கதான் எதுவும்ம் சொல்லாதன்னு சொல்லிட்டாங்க...”

“அட நீ ஏம்மா இந்தப் பிள்ளைப்பூச்சிக்கெல்லாம் பயப்படற... தைரியமா அதல்லாம் சொல்ல முடியாதுன்னு சொல்லு.....”

“மம்மி இதெல்லாம் very bad... என்னோட மயிலை நீங்க எப்படி உங்கக்கூட துணை சேர்த்துக்கலாம்... இங்க பாரு மயிலு இங்க நிறைய அந்நிய சக்திகள் ஊடுருவல் இருக்கு.... நாம உடனடியா லொகேஷன் மாத்தறோம்...”

“பாரதி நீ எப்படி இருந்தாலும் எங்களுக்கு வரப்போற மருமகன் உனக்கும் சேர்த்து பொறுப்பா இருக்கார்....”

“என்ன சொல்றீங்கம்மா...”

“ஆமாம் பாரதி... நீ அவங்க வீட்டுக்கு போய் ராஜாவை லவ் பண்ற விஷயத்தை சொன்ன மறுநாளே ராஜாவும், அவரோட அம்மாவும் நம்ம வீட்டுக்கு வந்து எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாங்க......”

“ஏற்கனவே எக்ஸாம் பேப்பர் அவுட் ஆகிடுச்சா.... நாங்கதான் கடைசியா தெரிஞ்சுக்கறோமா.... மயிலு உங்க வீட்டுலயும் வந்து சொல்லிட்டீங்களா....”, சாரங்கன் கேட்க மயூரி வேக வேகமாக இல்லையென்று தலையசைத்தாள்....

“அப்போ எப்படி நம்ம மேட்டர் எல்லாருக்கும் தெரியும்....”

“மயூரி வீட்டுல இருந்து வந்தது உங்களுக்கு நன்றி சொல்ல...  ஆனா நம்ம பாரதி தவளை உன்னையும் சேர்த்து போட்டுக் கொடுத்துட்டா....”

“ஆவ்வ் அடியேய் பக்கி இப்படி பண்ணிட்டியே.....”

“சரி சரி ரெண்டு பேரும் சண்டைய நிறுத்துங்க... ராஜா மயூரி ரெண்டு பேரும் இந்த பெட்ரோமாக்சே வேணுமான்னு யோசிச்சுக்கோங்க....”

இருவரும் சிரித்தபடியே வேண்டும் என்று தலையாட்ட....

“கடவுள் உங்களை காப்பாற்றட்டும்....”

“அம்மா இப்படி எங்களை டேமேஜ் பண்றீங்களே... இன்னைக்கு எங்களுக்கு கோர்ட்ல எவ்ளோ பாராட்டு கிடைச்சுது தெரியுமா...”

“ஆமாம் சம்மந்தி.... நீங்க என்னோட மருமகளை ரொம்ப கிண்டல் பண்றீங்க... அவ எத்தனை அழகா வாதாடினா... பார்த்தீங்க இல்லை... அதுவும் இல்லாம, தன்னோட பாதுகாப்பை பற்றி கவலைப்படாம இந்த கேஸ்க்காக எத்தனை ரிஸ்க்கான வேலையெல்லாம் செஞ்சு இருக்கா.... பாரதி நீ மருமகளா எங்க வீட்டுக்கு வர்றது அவ்ளோ பெருமையா இருக்கும்மா.... அதுவும் அந்த நரேஷ் கேஸ்ல நீ வாதாடின விதம் அருமை...”

“நீங்க அங்க வந்திருந்தீங்களா அத்தை....”

“இல்லைம்மா அங்க வெளி ஆளுங்க யாரையும் உள்ள விடலையே... ராஜா வந்து எங்க எல்லாருக்கும் அங்க நடந்ததை அப்படியே லைவ்வா சொன்னான்...”

“தேங்க்ஸ் அத்தை அப்படியே மன்னிப்பும் கேட்டுக்கறேன்.... இந்தக் கேஸால ராஜா அடிபடும்படி ஆகிடுச்சு....”

“ச்சே ச்சே இதுக்கெல்லாம் மன்னிப்பு கேப்பியா.. இதுல உன்னோட தவறு எங்க வருது.... இன்னும் வருங்காலத்துல இதைப் போல எத்தனையோ பிரச்சனைகளை அவன் எதிர்கொள்ளணும்... அதுக்கு அவனைத் தயார்படுத்த வேண்டியது உன்னோட பொறுப்பு... கணவர்கள் இந்த மாதிரி வழக்கறிஞர்களாகவோ, போலிஸாகவோ இருக்கும்போது அவங்க மனைவிமார்கள் பயந்த சுபாவம் உள்ளவங்களா இருந்தாலும் தங்களை மாத்திக்கறதில்லையா... இப்போ மயூரி சாரங்கனுக்காக மாறப்போறா அந்த மாதிரிதான் இங்க ராஜா உனக்காக மாறட்டும்... அப்படி இல்லன்னா நீ அவனை மாத்திடு...”

“உங்களை மாதிரி ஒரு மாமியார் கிடைக்க என் பொண்ணு கொடுத்து வச்சிருக்கணும் சம்மந்தி... இவ கேஸ் எடுத்து வாதாடறது ஒரு பக்கம் பெருமையா இருந்தாலும், ஒரு அம்மாவா அவளோட கல்யாணத்தை பத்தி எப்பவுமே கவலைதான்... இவளைப் புரிஞ்சுட்டு இவளோட வேலைக்கு சப்போர்ட் பண்றா மாதிரி வரணுமேன்னு... அதே மாதிரி ராஜா கிடைச்சதுல பெரிய பாரம் இறங்கிடுச்சு....”

“சரி அடுத்து என்ன கல்யாணம்தானே....”

“ரொம்ப அவசரப்படாத மகனே...  ராஜாவும், மயூரியும் இப்போதான் கராத்தே கத்துக்க ஆரம்பிச்சு இருக்காங்க.... ப்ளாக் பெல்ட் வாங்காம கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.