(Reading time: 9 - 18 minutes)

சாருவும் யசோதயாய் தன் மகன் மேல் உள்ள அன்பு அக்கறை கண்டிப்பு போன்றவற்றை மென்மையான பாவணையில் வெளிக்காட்டினாள். உறவுகளை பிரியும் வேதனையை சாரு வெளிகாட்டியதை காண்கையில் அது அபினயமா அல்லது சுவாதியின் பிரிவால் உண்டான வேதனையா என ஆகாஷால் இனம்பிரிக்க இயலவில்லை.

பாடலின் இறுதியில் யசோதை கண்ணனை கேட்க . . .

“பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்

என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே ”

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

இதற்கு பதில் கண்ணன் கூற . .

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்

தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

“பந்தாடுறான்” என்ற வார்த்தை வரும் பொழுது தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டைப் போல குறும்பு முகத்துடன் விக்கி செய்ய அரங்கத்தில் சிலரின்  புன்னகையும் சிலரின் கைதட்டலும் அவனுக்கு சிக்ஸராய் கிடைத்தது.

அதன் பிறகு நிகழ்ச்சி முழுவதுமாய் முடிந்தது. காஞ்சனாவை ஆகாஷ் பெற்றோர் சந்தித்து நிகழ்ச்சிப் பற்றி பேச ஆரம்பித்தனர். ஆகாஷிற்கு அதை கேட்கும்  பொறுமை இல்லை. அவனுக்கு சாருவை சந்திக்க வேண்டும். அதையும்விட சூர்யாவை நேருக்கு நேர் சந்திக்க விரும்பினான்.

ஆகாஷ் மனமோ இனிமேதானே கச்சேரியே ஆரம்பம் என்பதைப் போல சாரு இருக்கும் கிரீன் ரூமை நோக்கி சென்றான்.

“ஹாய் சாரு . .குட் ஜாப்” என அவளை ஹக் செய்தான். அந்த அறையில் போகஸ் லைட் பொருத்தபட்ட பெரிய பெரிய கண்ணாடிகள், விதவிதமான மேக்அப் சாதனங்கள், வண்ண உடைகள் என அவனுக்கு துளியும் சம்பந்தமில்லாத விஷயங்களாய் இருந்தது. நிறைய பேர் இருந்தார்கள். அதனால் வெளியேற நினைத்தவனை சாரு அருகில் வேறு ஒரு அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அந்த அறையும் கிட்டதட்ட இதே மாதிரி இருந்தது. ஆனால் ஆட்கள் குறைவாக இருந்தனர். “நீ வரமாட்டேனு நினைச்சேன் . .” என ஆச்சரியமாய் பார்த்தாள்.

“உனக்காக வந்தேன் . . ” என்றான்

“தேங்க்ஸ்” அவள் கண்கள் அவன் கூற்றை நம்பவில்லை

“எங்க அந்த குட்டி கிருஷ்ணா?”

அடுத்த அறைக்கு சென்று விக்கி என அழைக்க இரெண்டொரு நொடிகளில் விக்கி வந்தான். மேடையில் பார்த்ததைவிட அருகில் கியூட்டாக இருந்தான். அவனை அப்படியே அள்ளி தூக்கிக் கொண்டவன் “ஹே சேம்ப் யூ டிட் எ கிரேட் ஜாப்” என சொல்லி சாக்லெட் பட்டையை கொடுத்தான்.

“சாருவ விட நீதான் அழகா ஆடின” என ஆங்கிலத்தில் அவன் கூற விக்கி முகம் மலர்ந்தது. விக்கி என குரல் கேட்க ஓடிவிட்டான் சிருங்கார கண்ணன்.

வெளியே  மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. கண்ணாடி ஜன்னலில் நீர் கோலம் போட்டது. அதைப் பார்த்து ரசித்த சாருவை ஆகாஷ் ரசித்தான்.

“இன்னிக்கு நாள் ரொம்ப அழகா இருக்கில்லயா?“ மழையை பார்த்தவண்ணம் கேட்டாள்.

“அப்படியா?” என்றான்

“ஏன் உனக்கு இன்னிக்கு நாள் எப்படி போச்சு? யார மீட் பண்ண?” ஆவலாய் அவன் கண்களை நோக்கினாள்.

“ஒரு கொலைகாரன் மூணு ரேப்பிஸ்ட்  தென் டெட் பாடி நாக்கு லேசா வெளில தள்ளி கண்ணு . .” என சொல்லிக் கொண்டிருந்த ஆகாஷை அவசரமாய் சாரு நிறுத்து என கையசைத்தாள்.

“லவ்வர்கிட்ட சொல்ல வேண்டிய விஷயமாடா இதெல்லாம் . . யூவர் ஹானர் இவனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என அவனின் மனம் குற்றம் சாட்டியது.

“உன்கிட்ட கேட்டனே” என்பதைப் போல முறைத்தாள். சாரு தன்னை பற்றி எதாவது கூறுவான் என எதிர்பார்த்தவள் முகம் வாடியது. சொதப்பிதை மறைக்க மழையை ரசிப்பதைப் போல நடித்தான். அவன் கண்கள் சூர்யாவை காண காத்திருந்தது.

“நாம இண்டியா போகணும் சாரு” மௌனமாய் இருக்க முடியவில்லை

“எப்ப போலாம்?”

“நெக்ஸ்ட் வீக்குக் . .பிளைட்க்கு டிகெட்ஸ் பலாக் பண்ணி வெச்சிருக்கிகேன் . . நீ ஓகே சொன்னா புக் பண்ணிடறேன்”

“காஞ்சனா மேம்கிட்ட கேட்டுக்கணும் . . ”

“சரி ரெண்டு நாள்ல சொல்லு” என்றதுக்கு

தலையாட்டினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.