(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 21 - தேவி

Kaathalana nesamo

மித்ராவின் யோசனைகளோடு , மைதிலியின் திட்டமிடலிலும் சேர்ந்து எல்லோரும் எதிர்பார்த்ததை விட அமர்க்களமாக நடந்து கொண்டு இருந்தது ஷ்யாமின் வரவேற்பு.

சூர்யா குரூப் நிறுவனத்தில் இருந்து வந்த அனைத்து நபர்களுக்கும் அத்தனை மகிழ்ச்சி. தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட முறையில் அனைவரும் மனதார ஷ்யாம், மித்ராவை வாழ்த்தினார்கள்.

சேகர் அஷ்வினின் பள்ளி தோழன். திருமணத்தன்று அவன் ஒரு கான்பரென்ஸ்க்காக மும்பை சென்று இருந்தான். ஊரில் இருந்து வந்ததும் விஷயம் கேள்விப்பட்டு ஷ்யாமிற்கு போன் செய்ய, அவன் தான் இந்த வரவேற்பிற்கு வர சொன்னான்.

சேகர் வந்தபோது சேகரை சாப்பிட வைக்கும் பொறுப்பை ஷ்யாம் அஷ்வினிடம் கொடுத்து இருந்தான்.

சேகரிடம் “வாங்க சீனியர்” என்று வரவேற்று டைனிங் ஹாலுக்கு அழைத்து சென்றான் அஷ்வின். ஏற்கனவே அஷ்வின் படித்த கல்லூரியில் தான் சேகரும் படித்து இருந்தான்.

“அஷ்வின் , ஹையர் ஸ்டடிஸ் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?

“சூப்பர் பாஸ். “

“எப்போ முடியுது? எங்கே ப்ராக்டிஸ் பண்ணப் போறே?

“இது கடைசி செமஸ்டர். முடிஞ்சதும் இங்கேயே வந்துடுவேன் பாஸ்”

“குட். அப்போ முடிச்சதும் எனக்கு ரெஸ்யும் அனுப்பு. வில் பார்வர்ட் & சஜெஸ்ட் குட் ஹாஸ்பிடல்ஸ்.”

“ஸ்யூர். சீனியர்”

இவர்கள் பேசிக் கொண்டே சாப்பிட இடம் தேடி அமர,  வேகமாக ஓடி வந்தாள் சுமித்ரா.

“அச்சு.. “ என்று அழைக்க,

“ஹேய். சுமி ஒழுங்க பேர் சொல்லு. “

“அதுவா முக்கியம்? நம்ம அண்ணாத்தே பிரெண்ட் வசூல் ராஜா ஒருத்தர் வந்து இருக்காராமே. என்னை அவர் கிட்டே கூட்டிட்டு போங்களேன்?

“என்னது வசூல் ராஜாவா? அப்படின்னா யார்?

“அடக் கடவுளே. உங்களுக்கு இப்போ நான் விம் லிக்விட் போட்டு விளக்கனுமா? அதான்பா அவர் டாக்டர் பிரெண்ட் யாரோ இருக்காங்களாமே?அவர்தான் சொல்றேன்”

அவளின் பதிலில் திகைத்த அஷ்வின், சேகரின் முகம் பார்க்க அவனோ கண் ஜாடையில் அவனைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மேலே பேசுமாறு சொன்னான்.

“இப்போ எதுக்கு அவரைத் தேடுற?

“எனக்கு இந்த செமஸ்டர்லே இன்ப்லான்ட் ட்ரைனிங் ஒன்னு இருக்கு. அத பத்தி நம்ம ஹீரோ சார் கிட்டே சொல்லிருந்தேன். அவர்தான் அவரோட பிரெண்ட் ஹாஸ்பிடல் பத்தி பக்கம் பக்கமா சொற்பொழிவு ஆத்தி அவர் கிட்டே பேச சொன்னார். உங்க கிட்டே கேட்டுக்க சொன்னார்”

“அது சரி. அதுக்காக இப்படி நிக் நேம் எல்லாம் வச்சி பேசுவியா? ராம் மாமாக்கு தெரிஞ்சா நீ காலி பார்த்துக்கோ?

“அச்சு.. அச்சு. சும்மா ஜாலிக்கு தான் சொன்னேன். ப்ளீஸ் இதப் பத்தி எல்லாம் ரூல்ஸ் கிட்டே மட்டும் சொல்லிடாதே. “

“அது அந்த பயம் இருக்கட்டும்.” என்ற அஷ்வின் , சேகர் பக்கம் திரும்பி “சுமி, இவர்தான் டாக்டர் சேகர். ஷ்யாம் மச்சான் பிரெண்ட். எனக்கு சீனியர்” என்று அறிமுகபடுத்த , தான் பேசியதை கேட்டு இருப்பாரே என்று சற்று வெட்கத்தோடு “ஹலோ” சொன்னாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவள் மனசாட்சியோ “அடியே..சுமி.. உனக்கு வர வர வாய் ஜாஸ்தி ஆயிடுச்சி. ஐயோ இவர் ஹீரோ கிட்டே சொல்லிட்டா, அவன் வேறே அட்வைஸ்ன்ற பேரில் உனக்கு கத்தியின்றி, ரத்தமின்றி ஒரு ஆபரேஷன் பண்ணிடுவானே. எப்படியாவது சமாளி” என்று அதட்டியது.

“என்னைப் பார்த்தா வசூல் ராஜா மாதிரியா இருக்கு.”

“ஹி. ஹி” என்று வழிந்த படி  “சாரி. சும்மா விளயாட்டுக்கு சொன்னேன். ப்ளீஸ் அதை மறந்துடுங்க.“

“சரி. இன்டர்ன்ஷிப் எல்லாம் இப்போ கொடுக்கறாங்களா என்ன?

இப்போது அஷ்வினும் “ஆமாம் சீனியர். நான் படிக்கறப்பவே ஆரம்பிச்சுட்டாங்க.”

“அப்படியா? இதோ என் கார்டு. என்னோட கன்சல்டேஷன் ஹௌர்ஸ் இதிலே இருக்கும். அந்த டைம் இல்லாமே வேறே டைம்லே கால் பண்ணிட்டு வாங்க”

“தேங்க்ஸ் சார். நீங்க சாப்பிடுங்க. அச்சு பார்த்துக்கோங்க”  என்று கூறி மண்டபத்தினுள் சென்று விட்டாள்

அவள் செல்வதை சுவாரசியமாக பார்த்தவன் , அஷ்வினிடம் திரும்பி “ஹ்ம்ம். ஷ்யாம் சிஸ்டர் ரொம்ப பேசுவாங்களோ?” என்று கேட்டான்.

“அப்படி எல்லாம் இல்லை சீனியர். எங்களுக்குள் கேலியும், கிண்டலுமாக பேசிக் கொள்வோம். மற்றபடி வெளி இடங்களில் பொறுப்பாக நடந்து கொள்வாள்” என்று அவளை விட்டுக் கொடுக்காமல் பேசினான் அஸ்வின்.

சற்று யோசனையோடு அஷ்வினைப் பார்த்துவிட்டு “இட்ஸ் ஓகே. இன்டர்ன்ஷிப் வேணும் எனும்போது அவங்களை கால் பண்ண சொல்லு” என்று சொல்லி, சாப்பிட அமர்ந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.