(Reading time: 11 - 21 minutes)

சாப்பிட்டதும், ஷ்யாமைப் பார்த்து பேசிவிட்டு , அஷ்வினிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பியவனின் கண்கள் மண்டபத்தை அலசியது. அவனின் கண்கள் சுமித்ராவைத் தேடி, அவள் யாருடனோ சுவாரசியமாக பேசுவதைப் பார்த்துவிட்டு, “இண்டரெஸ்டிங் கேர்ள்” என்று எண்ணியபடி தன் வழியே சென்றான்.

வரவேற்பு முடிந்து மண்டபத்தை காலி செய்ய மாலை ஆகிவிட்டது. விருந்தினர் எல்லோரும் சென்றபின் ஷ்யாம், மித்ரா இருவரும் மண்டபத்திலியே உடை மாற்றி இருந்தார்கள்.

எல்லோரும் ஷ்யாம் வீட்டிற்கு வந்து அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அன்றைய இரவு உணவு முடித்து விட்டு எல்லோரும் தங்கள் அறைகளுக்கு சென்றனர்.

ஷ்யாம் முதலில் உடை மாற்றி விட்டு வந்தவன், மித்ராவும் சென்று உடை மாற்றி விட்டு வந்தாள்.

ஷ்யாம் மனதிற்குள் சில பல யோசனைகள். அதன் வெளிப்பாடாக, மித்ரா வரவும், அவளை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றான்.

அந்த பால்கனி அளவில் பெரிது. அவன் பெட்ரூம், ஆபீஸ் ரூம் இரண்டிற்கும் பொதுவாக இருந்தது. அதில் அழகான கம்பிகளோடு மர ஊஞ்சல் ஒன்று வீற்று இருந்தது.

அதில் அவளை அமர வைத்தவன், தானும் அவள் அருகில் அமர்ந்து கொண்டு மெதுவாக ஊஞ்சலை ஆட்டினான்.

அதில் ஆடியவாறே

“மித்ரா, நீ அம்மாவோடு அவர்கள் ஈவென்ட் மேனேஜ்மென்ட் ஆபீஸ்க்கு எப்போதில் இருந்து போகப் போகிறாய்?

“அத்தான். என்னாலே முடியுமா? நான் ஏதாவது தப்பா பண்ணிட்டா, அத்தைக்கு கெட்ட பெயர் ஆகிடுமே?

“ஹ்ம்ம். அப்படின்னா, நீ நாள் பூரா வீட்டில் இருந்து என்ன செய்யப் போறே சொல்லு?

அவள் பதில் தெரியாமல் முழிக்கவும்

“மேலே படிக்கறியா? “ என்று வினவினான்.

“ஹ்ம்ம். நானும் அதான் நினைச்சேன். ஆனால் இப்போ என்ன படிக்க அப்படின்னு தெரியலை. அதோட.. .” என்று இழுத்து நிறுத்தினாள்.

“சொல்லுமா. “

“இல்லை. என்னோட ஸ்கூல்லிங்க் முழுதும் கிட்ட தட்ட ஸ்பெஷல் ஸ்கூல்லில் போச்சு. அதனால் என்னோட ஸ்லொவ் அக்டிவிட்டி அங்கே பெரிசா தெரியலை. ஆனால் அதே காலேஜ்லே சேர்ந்தப்போ நிறைய பேர் அதை வேறே மாதிரி பார்த்தாங்க. நம்ம வீட்டிலே உள்ளவங்க சப்போர்ட்லேயும், உங்க அட்வைஸ்லும் அது எல்லாம் கடந்து வந்தேன். இப்போ நான் மேலே படிக்கனும்னா கூட, இந்த ஹோம் சயின்ஸ் தவிர வேறே எதுவும் பெரிசா பண்ண முடியாது. அதான் என்ன செய்யன்னு யோசிக்கறேன்”

“அடேங்கப்பா.. மிது இவ்வளவு நீளமா பேசிட்டாளே” என்று ஷ்யாம் கேலி செய்யவும், ஊஞ்சலில் வைத்து இருந்தா திண்டால் அவனை அடித்தாள் மித்ரா.

“சரி. நீ ஹோம் சயின்ஸ் இல்லாமே வேறே ஏதாவது படிக்கலாமே?

“மத்தது எல்லாம் ரொம்ப கஷ்டம் அத்தான். தினமும் படிச்சா கூட என்னாலே பாஸ் பண்ண முடியுமான்னு தெரியாது. எதுக்கு தேவை இல்லாமல் ரிஸ்க் எடுக்கணும்”

“அப்படின்னா அம்மா கூட வேலைக்குப் போ”

“ஏன் அத்தான்? கண்டிப்பா போயே ஆகணுமா?

“போனா தான்மா உனக்கு தைர்யம் வரும். அப்போ தான் உனக்கு ஒன்னுமில்லைன்னு நம்பிக்கை உனக்கே வரும்”

“ஏன் அத்தான் ? எனக்கு பிரச்சினை இருக்கிறது உண்மைதானே. அதை அப்படியே அச்செப்ட் பண்ணிகிட்டா நல்லது தானே”

“அச்ச்பெட் பண்றது நல்லது தான்மா. ஆனால் அதிலயே நீ இருந்திடக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன். உனக்கு கற்றுக் கொள்வதில் பிரச்சினை. மெதுவாக கற்றுக் கொள்வாய். மற்றவர்கள் எல்.கே.ஜியில் எழுத்துக்கள் படிக்கும் போது, நீ முதலாவது படிக்கும் போது கற்றுக் கொள்கிறாய். அவ்வளவு தான் உன் பிரச்சினை. இதற்காக நீ எதற்குமே லாயக்கு கிடையாது என்ற எண்ணம் வளரவிடக் கூடாது. அதோடு இப்படியே இருந்தால், உனக்கு எந்த ஒரு பிரச்சினையிலும் முடிவெடுக்கக் கூடிய தன்மை இருக்காது. யாரவது ஒருவர் உனக்கு எடுத்து சொன்னால் அதை தான் செய்வாய்”

“அதனால் என்ன பிரச்சினை அத்தான்.? நான் எல்லோர் சொல்வதையும் கேட்பதில்லையே. அம்மா, அப்பா , நீங்கள் , நம் குடும்பம் இவர்கள் சொல்வதை மட்டும் தானே கேட்கிறேன். அப்படியே இருந்து விட்டு போகிறேனே”

“அப்படி நாங்கள் சொல்வதை நீ கேட்டால், அது எங்கள் விருப்பத்தை ஏதோ ஒரு வகையில் உன்னிடம் திணிப்பது போலதான். நீ அப்படி இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். உனக்கு நல்லது, கெட்டது எது என்பதை நீயே ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். “

“சரி. இப்போ நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்.?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.