(Reading time: 11 - 21 minutes)

“உன்னால் சற்று பரபரப்பான ஆபீஸ் சூழ்நிலையில் வேலை செய்வது கஷ்டம். அதற்கு பதில் அம்மாவோடு அவர்களின் ஈவென்ட் அர்கனைசிங் அலுவலகம் சென்றால், கொஞ்சம் மெதுவாக வேலை செய்யலாம். உன்னுடைய படிப்போடும் அது சம்பந்தப்பட்டு இருக்கும். கொஞ்ச நாள் கழித்து மேலே படிக்க வேண்டும் என்றாலும் கூட இதை சார்ந்தே ஏதாவது கோர்ஸ் சேரலாம்”

“ஏன் அத்தான். என் பாட்டி, கௌசல்யா பாட்டி எல்லாம் வீட்டில் தானே இருக்கிறார்கள். நானும் அதே போல் இருந்து கொள்கிறேனே?

“நம் பாட்டி காலத்தில் வீட்டை பார்க்க என்று அவர்கள் வீட்டில் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் கூட்டுக் குடும்பத்தில் இருந்ததால், எல்லோருக்கும் சமைக்க, வீட்டைப் பராமரிக்க, குழந்தைகளை பார்க்க என்று அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. இப்போது போல் எல்லாவற்றிற்கும் மெஷின் கிடையாதே. அந்த வாழ்க்கை முறையில் அவர்களுக்கு வெளியில் வர நேரமும் கிடையாது. என் அம்மா, உன் அம்மா எல்லாமே வெளியில் வந்து விட்டார்கள். எல்லாவற்றிற்கும் மெஷின் வந்த பிறகு, வீட்டில் வேலையாட்கள் எல்லாம் வந்த பிறகு பாட்டிக்கே வேலை குறைந்து விட்டது. அந்த இடத்தில் அம்மாவும் வீட்டில் இருந்தால் யார் எந்த வேலை பார்ப்பது? யார் சொல்வதை யார் கேட்பது என்று எல்லாம் பிரச்சினைகள் வந்து இருக்கும். படித்த படிப்பும் வீணாகாமல் அம்மா அந்த நிறுவனத்தில் வேலை செய்து, இப்போது அதற்கு உரிமையாளராகவும் மாறி விட்டார்கள். இப்போது பாட்டிக்கு ஓய்வு தேவை என்ற நிலைமை வந்தவுடன் வீட்டுப் பொறுப்பை அம்மா ஏற்றுக் கொண்டார்கள். “

மித்ராவிற்கும் புரிந்தது தான். ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம் இன்னும் மிச்சம் இருந்தது.

அவளின் தயக்கத்தைப் புரிந்து கொண்டவனாக, மெதுவாக அவளைத் தன் தோளோடு அணைத்து அவளிடம் கேட்டான்.

“மிதுமா, நீ என்ன நினைக்கிற? அதை சொல்லு?

“இல்லை ஒருவேளை என்னால் இந்த வேலை சரியாக செய்ய முடியவில்லை என்றால், எல்லோரும் என்னை மட்டமாகதானே நினைப்பார்கள்.

“யார் அப்படி நினைப்பார்கள்?

“நம் வீட்டில், மாமா, அத்தை, சுமி , பாட்டி, தாத்தா எல்லோரும் தான்”

“இவர்கள் யாருக்குமே உன் நிலைமை தெரியாதா? இதுவரை உன்னை அப்படி பேசி இருக்கிறார்களா?

“இல்லை தான். ஆனால் என்னிடம் பொறுப்பு என்று கொடுக்கும் போது , அதை சரியாக செய்யவேண்டும் இல்லையா?

“அது தான் உனக்கே தெரிகிறதே. பிறகு எப்படி தவறாக செய்வாய். அதோடு எடுத்த உடனே பொறுப்பும் கொடுக்க மாட்டார்கள். அம்மா அலுவலகத்தில் எல்லா செக்ஷன் வேலைகளும் கற்றுக் கொள். பிறகு அம்மாவே சின்ன சின்ன வேலைகளாக உன் பொறுப்பில் ஒப்படைத்து அதை நீ செய்வதை பார்த்த பின் தான் உன்னை தனியாக ஹன்ட்ல் செய்ய விடுவார்கள். அப்போதும் நீ என்ன செய்தாலும் அம்மாவும், நம் குடும்பமும், முக்கியமாக நானும் உனக்கு முழு சப்போர்ட் கொடுப்போம். சோ எதற்கும் பயப்படாமல் தைர்யமாக இரு. சரியா?

இப்போது கொஞ்சம் தெளிவானவள், சரி என்றாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அப்படின்னா, நீ நாளையில் இருந்து அம்மாவோடு அலுவலகம் போ. காலையில் நாம காபி டைம்லே அம்மா கிட்டே சொல்லிடலாம். ஓகேவா?

“ஓகே “ என்று அவள் தலையாட்டவும், அவளை தன் நெஞ்சோடு அனைத்து விடுவித்தான் ஷ்யாம்.

பிறகு “சரி, சரி வா உள்ளே போய் படுக்கலாம்” என, தங்கள் அறைக்குள் சென்று படுத்தார்கள்.

இப்போது எல்லாம் மித்ரா தானாகவே அவன் அருகில் நெருங்கி படுத்துக் கொள்கிறாள். எப்போதும் போல் அன்றும் அவளை அணைத்தவாறு படுத்தான் ஷ்யாம்.

மறுநாள் காலையில் காபி நேரத்தில், ஷ்யாம் தன் அன்னையிடம் மித்ராவை அன்றிலிருந்து அவரோடு அழைத்துப் போக சொன்னான்.

அதைக் கேட்டவுடன், மைதிலியும் மித்ராவிடம் நேரடியாக கேட்டு உறுதிப் படுத்திக் கொள்ள, வீட்டில் மற்றவர்கள் எல்லோரும் வாழ்த்தினார்கள். ஆண்கள் எல்லோரும் காலையில் வேலைக்கு கிளம்பிவிட, சுமித்ராவும் காலேஜ் கிளம்பிவிட்டாள்.

அதற்கு பிறகு மைதிலி மதிய சாப்பாடு பற்றி வேலைக்காரர்களிடம் சொல்லி விட்டு, மித்ராவை ரெடியாகி வர சொல்ல, இருவரும் கௌசல்யா, ஜனார்த்தநிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர்,

மைதிலியின் அலுவலகத்தில் அன்று முழுதும் அவர்கள் கம்பெனி ப்ரோபியில் படிக்கச் சொன்னாள். மறுநாள் மித்ராவை முதல் முதலில் வரவேற்பு மற்றும் டெலிபோன் வேலைகளை மூன்று நாட்கள பார்க்க சொன்னாள்

மித்ராவிற்கு ஒரே வியப்பு. ஏன் அப்படி செய்கிறார்கள் என? மித்ராவின் படிப்பைப் பொறுத்து அவளை மெனு அல்லது இன்டீரியர் பிரிவில் போடுவார் என்று எண்ணியிருக்க, டெலிபோன் பிரிவில் வேலையா என்று நினைத்தாள்.

முதலில் யோசித்தாலும், அவளும் அந்த இரண்டு நாட்கள் அந்த ரிசெப்ஷன் பெண்ணோடு இருந்து வேலைகளை கற்றுக் கொண்டாள்.

தொடரும்

Episode # 20

Episode # 22

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.