(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - காதலான நேசமோ - 20 - தேவி

Kaathalana nesamo

மித்ரா தூக்கத்தில் தன் கைகளை ஷ்யாமின் மேல் போடவும், தன் யோசனையில் இருந்து வெளியில் வந்தவன் அவள் பக்கம் திரும்ப, அவள் இன்னும் வாகாக அவனோடு ஒட்டிக் கொண்டாள்.

மறுநாள் காலையும் முதலில் ஷ்யாமே எழுந்தான்.  அவளை எழுப்ப எண்ணியவன், பின் ஜாகிங் போய்விட்டு வந்து எழுப்பலாம் என்று விட்டு விட்டான்.

அவன் ஜாகிங் முடித்து வரும்போது அறையில் மித்ரா இல்லை. பாத் ரூம் எல்லாம் தேடித் பார்த்து விட்டு , கீழேயும் இல்லையே , எங்கே போயிருப்பாள் என்று எண்ணியபடி ஹாலிற்கு வர, அங்கே அவன் தாத்தாவோடு மித்ரா வந்து கொண்டு இருந்தாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன்,

“குட் மார்னிங் மித்ரா” என்று கூற, அவளும் மலர்ந்த முகத்தோடு “குட் மார்னிங் அத்தான்” என்றாள்.

வழக்கம் போல் ராம் குடும்பத்தினரின் காலை காபி நேரம் கலகலப்பாக முடிய எல்லோரும் தங்கள் வேலைகளுக்கு கிளம்ப தயாராகினர்.

மேலே வந்த ஷ்யாம் , மித்ராவிடம்

“மிது, நான் குளிக்க போறேன். என்னோட லேப்டாப், அடுத்த ரூம் டேபிளில் இருக்கிற பைல்ஸ் எல்லாம் பிரீப்லே எடுத்து வைச்சுடுரியா? அதோட என் பர்ஸ்லே கார்டு எல்லாம் இருக்கானு செக் பண்ணிடுமா” என்றுவிட்டு சென்றான்.

மித்ராவிற்கு சற்று தயக்கமாக இருந்தாலும், அவன் சொன்னதை செய்தாள். குளித்து விட்டு வந்தவன் , அவளை ரெடி ஆக சொல்ல, அவளும் குளித்து தயாராகி வந்தாள்.

“மிது , கீழே போகலாம்” என்று அழைத்தவன், அவளை தன் லேப்டாப் பாக் எடுக்க சொன்னவன், அவனின் பிரீப் எடுத்துக் கொண்டு வந்தான்.

“மிது, பர்ஸ்லே எல்லாம் இருந்தது. அந்த ரூம் டிராவில் எப்போதும் கொஞ்சம் காஷ் வைத்து இருப்பேன். அதில் இருந்து நூறு , இருநூறு, ஐநூறு, இரண்டாயிரம் என்று எல்லாவற்றிலும் ரெண்டு ரெண்டு எடுத்து வைத்து விடு. இன்றைக்கு நான் எடுத்துக் கொண்டேன். இனிமேல் பர்ஸ் செக் பண்ணும்போது பார்த்து எடுத்து வைத்து விடு. இதே போல் நீயும் உன் பர்ஸ்சில் வைத்துக் கொள். கார்டு யூஸ் பண்ண முடியாத சூழ்நிலை வந்தால் தவிக்க கூடாது. “ என்று கூறினான்.

“இது எல்லாம் நாந்தான் தினமும் செய்யனுமா? என்று சட்டென்று கேட்டு விட்டாள்.

ஆனால் கேட்டபின் சற்று வருத்தப்பட்டாள். இன்று வரை அவள் யாரையும் எதிர்த்து எந்த கேள்வியும் கேட்டதில்லை. அதிலும் ஷ்யாம் சொல்லி அவள் மறுத்ததே இல்லை. இப்போது எப்படி இப்படி பேசினோம் என்று எண்ணி வருந்தினாள்.

அவளைப் பார்த்து முறுவலித்த ஷ்யாம்,

“இது எல்லாம் நீ செஞ்சா, எனக்கு காலையில் கொஞ்சம் ரிலாக்ஸ்சா இருக்குமேன்னு பீல் பண்ணினேன். “ என்று கூறினான்.

“இதுக்கு முன்னாடி யார் பண்ணினாங்களாம்?” மித்ரா கேட்டாள்

“இப்போதானே நீ வந்துருக்க?

“பொண்டாட்டின்னா இந்த வேலை எல்லாம் செய்யனும்னு கட்டயாமா என்ன? “ என்று கொஞ்சம் கோபமாக கேட்க, அதைப் பார்த்து சிரித்தவன்,

“அப்படி ஒன்னும் கட்டாயம் இல்லை. ஆனால் எனக்கு கொஞ்சம் ஹெல்ப்பா இருக்குமே “ என்று ஷ்யாம் கூற, மித்ரா தலை அசைத்தாள். உண்மையில் இதே விஷயத்தை வேறு யாரவது சொல்லி இருந்தால், அவளால் இத்தனை தூரம் பதில் பேசியிருக்க முடியுமா என்று நினைத்தவுடன், பேசாமல் அமைதியானாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆனால் ஷ்யாமோ மகிழ்ச்சி அடைந்தான். அவள் இப்படி கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தான். அது உடனே நடக்கும் என்று நினைக்கவில்லை. இப்போதும் அவள் அதை மறுக்கவோ, எதிர்த்தோ கேட்கவில்லை. ஒரு தெளிவு படுத்திக் கொள்ளும் கேள்வியாகத்தான் இருந்தது. இருந்தாலும் கேட்கவேண்டும் என்று தோன்றியதே என்ற எண்ணம் தான் அவனுக்கு.

எதுவும் பேசாமல் இருவரும் கீழே இறங்கி வர, எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டு அவரவர் வேலைக்கு கிளம்பினார்கள்.

ஏற்கனவே பேசியது போல் மைதிலியும், மித்ராவும் ரிசெப்ஷனுக்கு உண்டான வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள்.

முதலில் அவர்கள் நிறுவனங்களில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பரிசு பொருள் வாங்க வேண்டும் என்று கூற, மைதிலியும், மித்ராவும் யோசித்துக் கொண்டு இருந்தார்கள்.

பிறகு மைதிலி, மித்ரா இருவருமாக அரை பவுன் தங்க காசு வாங்கிக் கொடுக்கலாம் என்று முடிவு செய்து, அது எத்தனை தேவை, ஒரே இடத்தில் கிடைக்குமா என்று எல்லாம் வெளியே சென்று விசாரித்து வந்தார்கள்.

அதே போல் அன்றே ஷ்யாம், மித்ரா இருவரையும்  ரிசப்ஷனுக்கு ஏற்ற உடை எடுக்க கடைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார்கள். மற்றவர்கள் எல்லோருக்கும் கல்யாணம் என்று முடிவான உடனே எடுத்துக் கொடுத்ததால் அவர்களுக்கு தேவை இல்லை என்று முடிவு செய்து இருந்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.