Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகா

Nodikkoru tharam ennai ninaikka vaithaai

ன்று 2017

சித்தார்த்தின் கம்பெனிக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்ய பல வாரங்களே பிடித்தது, காலையில் நேரத்தோடு கம்பெனிக்குச் செல்ல சித்தார்த், விக்ரம், வினோத் 3 பேரும் வேகமாக ரெடியானார்கள். தன் அறையில் வேகமாக ரெடியாகிக் கொண்டிருந்த சித்தார்த்திடம் லதா வந்தாள்.

”ஹாய் சித்” என அவன் உடம்பை தடவிக்கொண்டே சொல்ல

அவளை எரிப்பதை போல் பார்த்தவன் அவளை தரதரவென இழுத்துக்கொண்டு வீட்டின் ஹாலுக்கு வந்தவன் சத்தமாக

”அம்மா அப்பா” என கத்தவும் வீட்டில் இருந்த அனைவரும் பரபரப்பாக ஹாலுக்கு ஓடிவந்தனர்

முதலில் வந்த சக்கரவர்த்தி அவனையும் லதாவையும் பார்த்துவிட்டு அமைதியாக நின்றார். சுசீலா வந்ததும் அவர்களைப் பார்த்துவிட்டு

”என்னாச்சி சித்து”

”அம்மா இன்னிக்கே நீங்க முடிவு பண்ணுங்க உங்களுக்கு நான் வேணுமா இல்லை உங்க அண்ணன் குடும்பம் வேணுமான்னு”

”ஏன்பா என்னாச்சி” என சுசிலா பதட்டமுடன் கேட்க அதற்கு சித்

”கேட்டதுக்கு பதில் நான் வேணுமா கருணாகரன் குடும்பம் வேணுமா” என கேட்க

சுசீலாவும்

”எனக்கு நீதான்பா வேணும்”

”அப்ப சரி இனிமே உங்க அண்ணன் குடும்பம் இங்க வரக்கூடாது, இந்த லதா என்கிட்ட வரவே கூடாது”

”இல்லப்பா உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு”

”அம்மா அப்படியே நான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சாலும் இந்த லதாவை நான் செஞ்சிக்க மாட்டேன், ஏற்கனவே சொல்லியிருக்கேன் உங்க கிட்ட நீங்கதான் கேட்கல இன்னொரு முறை அண்ணன் மேல பாசம் அது இதுன்னு என்னை சமாதானம் பண்ண வந்தீங்கன்னா நான் இந்த வீட்டை விட்டு நிரந்தரமா போயிடுவேன்” என கூறவும் சுசீலாவிற்கு பயம் வந்தது.

சித்தார்த்தின் பேச்சைத் தொடர்ந்து மற்ற 4 புதல்வர்களும் தங்கள் தாயிடம்

”ஆமாம் அம்மா, அண்ணன் சொன்னமாதிரிதான் நீங்க திரும்பவும் எங்களை அந்த 5 பிசாசுங்களை கல்யாணம் செஞ்சிக்க சொல்லி சொன்னீங்கன்னா நாங்களும் அண்ணாவோட இந்த வீட்டை விட்டு போயிடுவோம்” என கூறவும் சுசீலா சக்கரவர்த்தியை பார்க்க

”இங்க பாரு சுசீ, என் காலம் முடிஞ்சி போச்சி நீ சொன்னதெல்லாம் நான் கேட்டேன் ஆனா இப்ப நம்ம பையன்கள் காலம் வந்திடுச்சி இனிமே என்னை பார்க்காத நீயே முடிவெடு இல்லையா பசங்க சொல்படி நட அண்ணன் குடும்பத்துக்காக என்னையும் இழந்திடாத சுசீ” என கூறவும் அவருக்கு அதிர்ச்சியே வந்தது

”என்னங்க நீங்க இப்படி பேசறீங்க உங்களை விட நம்ம பசங்கள விட எனக்கு அண்ணன் குடும்பம் ஒண்ணும் பெரிசில்லை இப்பவே நான் விட்டுடறேன் ஏய் லதா எங்க மத்த பொண்ணுங்க வாங்க உங்களை உங்க வீட்ல விட்டுடறேன்” என கூறவும்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”ஏன் நீங்க தான் அவங்களை கூட்டிட்டு வந்தீங்களா, வந்தவங்களுக்கு போகத்தெரியாது நீங்க அண்ணன் வீட்டுக்குப் போனா அந்தாளு ஏதாவது பேசி கீசி உங்களை ஏமாத்துவாரு. ஒண்ணும் வேணாம் கம்பெனியில ஆயிரம் பிரச்சனை இதுல வீட்லயும் பிரச்சனைன்னா எப்படி ஏதாவது ஒரு இடத்திலயாவது என்னை நிம்மதியா இருக்க விடுங்க ஏய் லதா கிளம்பு நிக்காத போ, அம்மா நீங்களும் கம்பெனிக்கு வரனும் முக்கியமான மீட்டிங் இருக்கு வாங்க” என சித் கத்தவும் அவள் தன் மற்ற தங்கைகளை தேடி ஓடினாள்.

அவள் சென்றதும் 7 பேரும் முதலில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு வந்தார்கள், அந்தக் கம்பெனியின் கீழ்தளத்தில் 3000 பேர் அமரும் அளவிற்கு பெரிய ஆடிட்டோரியம் இருந்தது. அங்கு ஒரு பெரிய மீட்டிங் அரேன்ஜ் செய்ய சொன்னான். அதில் அவனது 5 கம்பெனிகளிலும் பணிபுரியும் அனைவரையும் கலந்து கொள்ள வைத்தான்.

இன்று ஒரு நாள் மட்டும் அவனுடைய 5 தொழில்களான கம்ப்யூட்டர் ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிக்கும் நிறுவனம், லாரி டிரான்ஸ்போர்ட், கன்ஸ்ட்ரக்ஷன், ரியல் எஸ்டேட் மற்றும் கார்மெண்ட்ஸ்  என அனைத்து இடங்களுக்கும் லீவு தந்தவன் ஒரே நாளில் 5 தொழில் நிறுவனங்களில் வேலை செய்த மொத்த பணியாட்களையும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஆடிடோரியத்திற்கு வரவழைத்திருந்தான்.

மொத்த பணியாட்களையும் சேர்த்து மொத்தம் 5 கம்பெனிகளில் 2000 பேர் வந்திருந்தனர்.

அனைவரையும் அமர வைத்தவன் மேடையில் தன் தந்தை, தாய், தன் தம்பிகளுடன் சித்துவும் அமர்ந்திருந்தான். ஆடிட்டோரியம் வெளியே யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பிற்காக போலீசையும் வரவழைத்து அந்த ஒரு நாளுக்காக டிஜிபியையும் தன்னுடைய மீட்டிங்குக்கு அழைத்திருந்தான்.

இப்போது மேடையில் சக்கரவர்த்தி நடுநிலைமையாக அமர்ந்து இருக்க அவர் இடதுபுறம் டிஜிபி, வக்கீல், சுசீலா, நமச்சிவாயம் இருக்க வலதுபுறம் சித்தார்த், வினோத், விக்ரம், ஆதி இருந்தனர். சித்தார்த்தின் கண்கள் அந்த கூட்டத்தில் திலோவை தேட அதை கவனித்த வினோத் மெதுவாக அவனிடம்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாShali 2020-07-28 16:32
Super marakamudiyaadha story
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாsaaru 2018-09-10 08:54
Hi sasi final epi late tan padichen knjam busy
Arumaiyana story.. sid thilo :clap: ovoru epi padikumbodum oru edirparpoda ve padika vachirukeenga (y)
Susi seidadu thaveru endralum chakravarthi adai thaduthrukalam :yes:
Epdiyo kadicila sid oda doll kidachita :thnkx:
Sid edutha mudivu perfect
Enjoy da story lod tquuu
All da best
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாsasi 2018-09-10 09:30
Quoting saaru:
Hi sasi final epi late tan padichen knjam busy
Arumaiyana story.. sid thilo :clap: ovoru epi padikumbodum oru edirparpoda ve padika vachirukeenga (y)
Susi seidadu thaveru endralum chakravarthi adai thaduthrukalam :yes:
Epdiyo kadicila sid oda doll kidachita :thnkx:
Sid edutha mudivu perfect
Enjoy da story lod tquuu
All da best

:thnkx: :hatsoff:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாsasi 2018-08-17 12:20
சித்துவின் பெற்றவர்கள் செய்த தவறை உணர்த்தவே சித்து இவ்வாறு முடிவு எடுததானே தவிர இது நிலையான முடிவு இல்லை. பாட்டியின் சாபம் கூட அவனது எண்ணங்களை மாற்றி இப்படி முடிவு எடுத்திருக்க வைத்திருக்கலாம் சித்துவுக்காக சக்ரவர்த்தி செய்தார் என்பது சரியே ஆனால் சித்துவின் தாத்தா பாட்டி பாவம் இல்லையா அவர்களை ஏன் மறந்தீர்கள். இதில் சித்துவை யாரும் கோபித்துக் கொள்ளாதீர்கள் சித்து பழிவாங்கவோ தந்தை செய்ததை அப்படியே செய்து காட்டவோ நினைக்கவில்லை. தன் தந்தை செய்த அதையே அவன் எடுத்ததற்காக காரணம் அவனது தாத்தா பாட்டி பட்ட வேதனையை தன் பெற்றோரும் சில நாள் தனிமையில் இருந்து உணர வேண்டும் என்பதற்காகவே
கதையின் இந்த முடிவு தங்களுக்கு கோபத்தை அளித்தமைக்கு சாரி என் கண்ணோட்டத்தில் அனைவருக்கும் நியாயம் வழங்கிவிட்டேன். அவ்வளவே நன்றி அனைத்து வாசகர்களுக்கும் எனக்கு வாய்ப்பளித்த சில்சி குழுமத்திற்கும் நன்றி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாsasi 2018-08-17 12:15
ஆதர்வ், மகி நாகராஜ் மற்றும் sriviகாக
சித்தார்த் சொததுக்களையும் கம்பெனிகளையும் தம்பிகளுக்கு பிரித்து கொடுத்து விட்டதால் சுசீலாவிடம் பொறுப்போ சொத்தோ இல்லாமல் போனதால் இனி கருணாகரன் வரப்போவதில்லை. வழிவழியா வர்ற குடும்ப வழக்கங்களால் ஏற்பட்ட விளைவுகளால் கருணாகரன் வந்து அந்த வீட்டையையும் தங்கை சுசிலாவையும் ஆட்டி படைத்தான். இதனால் சித்து மற்றும் அவனது தாத்தா பாட்டி மூவரும் தனிமைப்படுத்தப்பட்டது சித்துவின் மனதில் சக்ரவர்த்தி சுசீலா செய்தது நிலையாக நின்றுவிட்டது. குட்டி சித்துவிற்கு பெற்றோரின் பாசம் மறுக்கப்பட்டது. சித்துவின் தம்பிகளை சுசிலா தன்னுடன் வைத்துக் கொண்டு சி்த்துவிற்கு மட்டும் தாய்பாசத்தை அளிக்கவில்லை பின் லண்டனில் சித்து இருந்த போது அவனது தாத்தா பாட்டி இறந்ததைக்கூட சொல்லாமல் விட்டது அவர்கள் தவறு அது அனைத்தும் சேர்ந்து சித்துவின் மனதில் ரணமாக மாறிவிட்டது. இதில் தன்னுடைய டால் இறந்துவிட்டதாகவே தனிமைப்படுத்தப்பட்டு சோகமாக விரக்தியில் இருந்தான் அப்போதும் அவனை பெற்றோர்கள் கவனிக்க தவறிவிட்டார்கள்.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாsasi 2018-08-17 11:56
ஆதர்வ், மகிநாகராஜ் மதுமதி மற்றும் அனைத்து வாசகர்களுக்கும்
மிக்க நன்றி கதையை தொடர்ந்து படித்து ஆதரவு அளித்து கமெண்ட் அளித்தமைக்கும் நன்றி.
தாங்கள் குறையாக சொன்னதை படித்தேன். சக்ரவர்த்தியின் தாய் ஒரு எபியில் கொடுத்த சாபம் இப்போது சித்து டால் மூலம் பலித்தது. சக்ரவர்த்தியும் தன் தாய் பட்ட கஷ்டத்தை உணரவே அப்படி எழுதினேன் மத்தபடி அவர்களை ஒரேடியாக ஒதுக்கவில்லையே கருணாகரன் இனி வரப்போவதில்லை ஒரே ஊரில் இருந்து அடிக்கடி பார்த்துக் கொள்வார்கள். 5 மருமகள்களும் ஒற்றுமையாக ஒரே வீட்டில் இருப்பார்கள் இல்லை சண்டையும் வரலாம் வராமலும் போகலாம் வரும் 5 மருமகள்களின் சண்டையால் ஒருவேளை அந்த வீடு பிரிந்து விட்டால் இதற்காக இந்தக் கதைக்கு இரண்டாம் பாகம் எழுத முடியாதே அதனால் அனைத்தையும் யோசித்து இப்படி ஒரு க்ளைமேகஸ் எழுதி வைத்தேன். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்காகவே சக்ரவர்த்திக்கு இப்படி ஒரு நிலைமை சிறிது நாட்களில் அனைத்தும் மாறும் சித்துக்கு குட்டி பேபி பிறந்தால் அனைவரும் ஒன்றாகிவிடுவார்கள் . :cool:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாVindhya 2018-08-17 10:50
nalla oru kathai Sasirekha madam.

Unga vegam and aatral aacharya padavaikirahu. Vazhthukkal madam.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாsasi 2018-08-17 11:43
Quoting Vindhya:
nalla oru kathai Sasirekha madam.

Unga vegam and aatral aacharya padavaikirahu. Vazhthukkal madam.

நன்றி தங்களை போல விமர்சகர்களின் ஆதரவுதான் எனக்கு ஆற்றலை அளிக்கிறது நன்றி :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாmahinagaraj 2018-08-17 10:47
சக்கரவர்த்தி இதை எல்லாம் முன்னாடியே சொல்லியிருந்தா சுசீலா இதை தொடர்ந்து பன்னிருக்கமாட்டாங்க... சக்கரவர்த்தி பன்ன அதே தப்பைத்தான் டாலும் பன்னராங்க.. டால் தானே சித்துக்கு எடுத்து சொல்லனும்.. இல்லைன்னா பின்னாடி சுசீலா போல வருத்தப்படனும்....
எப்படியோ தங்களுடை எண்ணங்களை கொஞ்சம் மறுபடியும் யோசிச்சா நல்லாயிருக்கும்.....
அவங்க வாழ்க்கையில்ல இனி ரொம்ப சந்தோஷமாயிருக்கனும்.... :lol: :GL:
:thnkx: இப்படி ஒரு அழகான காதல் கதை கொடுத்ததுக்கு :clap: :hatsoff: :thnkx: :P :cool:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாmahinagaraj 2018-08-17 10:40
ரொம்ப நல்லகதை.. எனக்கு ரொம்ப பிடிச்ச கதை இது....
எனக்கு பெரிய சித்துவ விட சின்ன சித்துதான் ரொம்ப ஷ்சம்.... ;-)
சித்துவின் கம்பெனி சீர்திருத்தம் சூப்பர்... :clap: :clap:
ஆனா எனக்கு சித்துவின் கடைசி முடிவு அவ்வளவு சரின்னு தோணலா.. வழிவழியா பின்பற்றிவர பழக்க வழக்கங்களை மாத்தரது கொஞ்சம் பிடிக்கல..
சக்கரவர்த்தி பன்னுனதை சித்துவும் பன்னி அவர் பையன்தான்னு நிருபிச்சுட்டாரு.. அப்பா பன்ன நல்லத பன்னலாம் ஆனா இது சரியில்ல...
எல்லாரும் ஒன்னாயிருந்தாத்தான் குடும்பம்.. தனித்தனியா அவங்க அவங்க ஷ்டத்திற்கு வாழ்தா எப்படி அது குடும்பம் ஆகும்....
மனைவி அப்படிங்கரவங்க கணவன்மார்கள் தப்பு பன்னா எடுத்து சொல்லனும்,அதை சரிசெய்யனும்.. டால் சித்து சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டினா அப்பரம் சக்கவர்த்தி,சுசீலா போல தான் அவங்க பின்னாடி வருத்தபடுவாங்க..
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாSaranya Mohan 2018-08-16 22:34
Nice ending I like it
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாsasi 2018-08-17 11:44
Quoting Saranya Mohan:
Nice ending I like it

நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாrspreethi 2018-08-16 22:23
super ending... Story interesting ah pochu...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாsasi 2018-08-17 11:44
Quoting rspreethi:
super ending... Story interesting ah pochu...

மிக்க நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாAdharvJo 2018-08-16 20:29
Congrats on successful finish of your 2nd series ma'am :clap: :clap: Yappa kadaisi epi-layavdhu kandu pidichiye sandhosham Mr Sidharathu :D :D Adhi-k thaan thanks solanum :yes: Mathen po-n sonninga avalodhan :D that was a cute touch to the finale....apro indha "nga" mannerism :D (y)

Like father Like Son Sid en ninga unga appa pana thappai thati kettu ningalum adhaiye follow panuringa olunga unga parents serunga boss..Sid, ungaloda future nala irukanumn thaan uncle appadi seitharu..yes, u wer yearning for ur parents love adhukun ippo avangala thandipadhu wrong….indha midhi 4 pasangala unga parents thana parthu kitanga...u can say ingayum karunakaran atchi thannu however without the support of parents ninga 5 perum onnum sadhichi irukamatinga….I really feel bad for the old couples :sad: Don't let the history to repeat boss :yes:
Cool finish sasi ma'am...thank you and :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாmadhumathi9 2018-08-16 19:47
:Q: kadaisi epi seekkiram muditha maathiri irukku.nice epi.arumaiyaana mudivu. :clap: (y) :thnkx: 4 this epi & this story. :GL: 4 next story.
See you. & we'll meet in next week by new story. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாsasi 2018-08-17 11:45
Quoting madhumathi9:
:Q: kadaisi epi seekkiram muditha maathiri irukku.nice epi.arumaiyaana mudivu. :clap: (y) :thnkx: 4 this epi & this story. :GL: 4 next story.
See you. & we'll meet in next week by new story. :clap:

நன்றி மதுமதி அவர்களே :clap:
Reply | Reply with quote | Quote
+1 # NUNVPriyashakti 2018-08-16 19:28
wow super and happy ending kalakitenga arumaiyana viru virupana kadaiku nandrii
Reply | Reply with quote | Quote
# RE: NUNVsasi 2018-08-17 11:45
Quoting Priyashakti:
wow super and happy ending kalakitenga arumaiyana viru virupana kadaiku nandrii

நன்றி நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 20 - சசிரேகாSrivi 2018-08-16 17:51
Arumaiyana story sis.. nalla kadha.. enakku oru kurai ennana amma appava thaniya vidaradhu than..paavam .. avanga thappu pannina aravanaichu kondu. Poga vendama.. idhu mattum enakku pidikkala.. mathapadi nalla enjoy panninen.
Waiting for the next story
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top