(Reading time: 12 - 23 minutes)

முதல் முறையாக அவனின் தொடுகை மித்ராவை ஏதோ செய்தது. இதற்கு முன் அவன் அவளை இத்தனை நெருக்கமாக தொட்டதில்லை. மிகவும் மனம் தடுமாறும் நேரத்தில், லேசாக தன்னோடு சேர்த்து அவளை அணைத்துக் கொள்வான் தான். ஆனால் இத்தனை நெருக்கமாய், உரிமையை இதற்கு முன் அவன் செய்ததுமில்லை. அவள் அப்படி உணர்ந்ததும் இல்லை.

ஏதோ தோன்ற அவள் நிமிர்ந்து அவனை பார்க்கும் முன், அவள் அம்மா அழைக்கும் குரல் கேட்க, அவனிடத்தில் இருந்து விடுபட்டு வேகமாக சென்று விட்டாள்.

அவளைத் தொடர்ந்து வந்த ஷ்யாமும் , அங்கே எல்லோரோடும் அமர்ந்து சாப்பிட்டு விட்டு கிளம்பு முன் வரவேற்பு வைத்து இருப்பதைப் பற்றிக் கூறி, முறைப்படி அப்பா, அம்மா வந்து அழைப்பார்கள் என்றும் கூறினான்.

அவர்கள் ஏற்பாடுகள் பற்றிக் கேட்க, ஷ்யாமோ

“எல்லாம் எங்க வீட்டு பிரதமர், முதல்வரை தான் கேட்கணும். “

“அது யாருடா? பிரதமர் , முதல்வர் எல்லாம்? என்று சபரி கேட்டார்.

“வேறே யாரு? உங்க அண்ணன் மனைவி மைதிலி மகாராணி பிரதமர். உங்க பொண்ணு மித்ரா முதல்வர். “

“அப்போ சுமிகுட்டி யாருடா?

“அவங்க தான் இளவரசியே? ஏற்கனவே என்னைத் தவிர யாரும் அவள கேள்வி கேட்க மாட்டாங்க? இப்போ இந்த மேடமும் சேர்ந்த பின்னாடி மூச் தான் “

“அப்போ எங்க அம்மா யாருடா?

“அவங்க தான் ப்ரெசிடென்ட். வெறும் ரப்பர் ஸ்டாம்ப் தான். ஆனால் திடீர்ன்னு அவங்க பவர அப்போ அப்போ பவர் ஸ்டார் மாதிரி காட்டிட்டு போயிட்டே இருப்பாங்க” என்று கேலி செய்து பேசிக் கொண்டே இருந்தான். மேலும் சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு தங்கள் வீட்டிற்கு திரும்பினார்கள் ஷ்யாம், மித்ரா இருவரும்.

இன்றைக்கு மித்ராவே அவளின் வின்னியை தேடி போகவில்லை. ஏனோ அலுப்பில் ஷ்யாம் வருவதற்கு முன்னே அவளும் அந்த கட்டிலிலேயே படுத்து உறங்கி விட்டு இருந்தாள்.

ஷ்யாம் பார்த்து விட்டு சிரித்தபடி  தன்னுடைய இடத்தில் சென்று படுத்துக் கொண்டான். நாட்கள் ஒருவாராக நகர்ந்தது.

ஷ்யாம், மித்ரா இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க பழகிக் கொண்டார்கள்.

வரவேற்பு நாளும் வர, காலையில் இவர்கள் சாப்பிட்டு விட்டு மண்டபத்திற்கு சென்றனர். மதிய சாப்பாடு தான் விருந்து என்பதால், இவர்கள் சென்று மண்டபத்தில் தயாராகவும், கம்பெனி பஸ் ஒவ்வொரு இடமாகச் சென்று தொழிலாளர்களை அவர்கள் குடும்பத்தோடு அழைத்து வந்து கொண்டு இருந்தது.

ஏற்கனவே மித்ராவின் யோசனைப்படியே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருக்க, மித்ராவும், ஷ்யாமும் ரெடியாகி வந்தனர். இவர்களின் உடைக்கு ஏற்ற வகையில் அந்த மண்டபமும் முழுக்க, முழுக்க நீலம் மற்றும் வெள்ளை பின்னணி கொண்டதாகவே அலங்கரிக்கப் பட்டு இருந்தது.

தொழிலாளர்கள் வரவும் எல்லோரோடும் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். ராம் அனைவரையும் வரவேற்றுப் பேசி, அவர்களை விருந்துண்ண செல்லுமாறு கூறினான்.

அதே போல் மித்ராவின் ஏற்பாட்டின் படி அங்கிருந்த ஓபன் ஸ்டேஜில் , சிறு சிறு குழந்தைகள் தங்களின் திறமையை வெளிபடுத்த, எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அத்தனை பேர் முகங்களிலும் தெரிந்த சந்தோஷத்தையும், பூரிப்பையும் பார்த்த ஷ்யாம், மற்றும் மித்ராவின் குடும்பத்தினர் அவளை மீண்டும் பாரட்டினார்கள்.

இந்த வரவேற்பிற்கு வந்த அஷ்வின் தன் மாமா மகனான ஷ்யாமின் மேல் அவனுக்கு ஒரு வித ஹீரோ வொர்ஷிப்பில் இருந்தவன், மித்ராவின் சந்தோஷ முகத்தைப் பார்த்த பிறகு அவனுக்கு அடிமையே ஆகி விட்டான்.

சந்தோஷ், ஸ்ருதி, சைந்தவி வந்து இருக்க, அவர்களும் மித்ராவின் யோசனையை பாராட்டினர்.

சைந்தவி சுமித்ராவிடம் “ஹேய்.. சும்மா.. எப்படியடி இந்த மத்து இம்புட்டு அறிவையும் இத்தனை நாள் பூட்டியே வச்சுருக்கா? நாளைக்கு முதல் வேலையா அந்த அறிவு களஞ்சியத்திலே, கொஞ்சம் கஞ்சிய காய்ச்சி ஊத்தறோம்” என்று கேலி செய்து கொண்டிருக்க, அதைக் கேட்டுக் கொண்டு இருந்த அஷ்வின்

“ஹேய். சந்து, இந்த சிந்து பாடற வேலை எல்லாம் இங்கே வச்சுக்காதே. என் தங்கச்சி புத்திசாலிதான். உன்னை மாதிரி சோதா கூட சேர்ந்து தான் அவள் சாதாவாகிட்டா. போய் வந்த வேலையை பாரு. அதான் சாபிடற வேலையைப் பாரு” என்று அவனும் கிண்டல் செய்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இதைக் கேட்ட சைந்தவி “ஹலோ மிஸ்டர் அச்சு. எங்க இன்டெர்னல் பொலிடிக்ஸ்லே தலையைக் கொடுத்தா சேதாரம் உங்களுக்கு தான் அதிகம் இருக்கும் பார்த்து பதவிசா நடந்துக்கோங்க.” என்று பதில் கொடுத்தாள்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த இளவட்டங்கள் சிரிக்க, மித்ராவும் சிரித்தாள் அப்போது ஒருவன் மேடையில் ஏறி வர , அவனைப் பார்த்து புன்னகைத்த ஷ்யாம்

“டேய். மச்சான். கரெக்ட் டைம்க்கு தான் வந்து இருக்கே” என்றவன், அவனை முதலில் சாப்பிட அனுப்பினான்.

ஷ்யாம் அவனைப் பார்த்த பார்வையில் , மித்ராவிற்கு எதோ சந்தேகம் தோன்றியது. அவன் சாப்பிட்டு வரவும், அவளிடத்தில் அறிமுகபடுத்தி வைத்தான் ஷ்யாம்.

“மித்ரா, இவர் டாக்டர் சேகர்.. “ என்று அறிமுகப் படுத்தி வைத்தான்.

பிறகு ஷ்யாம் தனியாக அவனிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டு இருக்க, சற்று நேரம் கழித்து அந்த சேகர் மண்டபத்தை விட்டு வெளியில் சென்றதைக் கவனித்தாள்.

அவனிடம் என்ன பேசினான் ஷ்யாம் என்பதை மித்ரா கேட்டு இருந்தால், பின்னாடி வரவிருக்கும் ப்ரசினைகளை தவிர்த்து இருக்கலாம்.

தொடரும்

Episode # 19

Episode # 21

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.