(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 02 - ஜெய்

Gayathri manthirathai

வாண்ணா.... அம்மா ரகுண்ணா வந்தாச்சு...”, உள்ளறையிலிருந்த அன்னையிடம் கூறியபடியே தன் அண்ணனுக்கு கதவைத் திறந்தாள் காயத்ரி...

“வாடா ரகு... என்னடா இத்தனை நாழி... ஏழு மணிக்கே வருவேன்னு நினைச்சேன்....”

“flight அரை மணி லேட்மா....”

“சரி இரு நோக்கு டிபனும், காபியும் எடுத்துண்டு வரேன்....”

“அம்மா காபி மட்டும் கொண்டு வா... நான் காயத்திரியை காலேஜ்ல விட்டுட்டு வந்து சாப்பிட்டுக்கறேன்.... காயத்ரி எல்லாம் எடுத்து வச்சுட்டியா.... எதையும் மறக்கலையே....”

“அட்மிஷன் ஸ்லிப் மட்டும்தாண்ணா... மத்தபடி எதுவும் இல்லை....”

“சரி ஸ்வாமிக்கு, அப்பாக்கு நமஸ்காரம் பண்ணு.... நாம கிளம்பலாம்...”, ரகு சொல்ல, ஒரு ஒரு சுவாமிக்கும் தனித்தனியாக தான் போகும் கல்லூரியில் ராக்கிங் இருந்தால் அதிலிருந்து காப்பாற்றுமாறு பிரைவேட் மெசேஜ் பாஸ் செய்து நமஸ்கரித்து கிளம்பினாள்....

ரகுவும், காயத்ரியும் கல்லூரி வாயிலுக்கு வர, அங்கு மாணவர்களைத் தவிர வேறு யாரையும் உள்ளே விடமாட்டோம் என்று காவலாளி சொல்லியதால், காயத்ரி மட்டும் பலியாடுபோல் உள்ளே நுழைந்தாள்...

ஆனால் அவள் இவ்வளவு பயப்படுவதற்கு அவசியமே இல்லை... இன்று முதல் வருட மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரி திறக்கிறது... பிற மாணவர்களுக்கு அடுத்த வாரத்திலிருந்துதான் கல்லூரி ஆரம்பம்....  இந்த ஒரு வாரத்தில் பேராசியர்களுடன் முதல் வருட மாணவர்களும் ஓரளவு பழகி இருப்பார்கள்... பின்னாளில் ஏதேனும் பிரச்சனை வந்தாலும் பயப்படாமல் சென்று புகார் அளிக்க முடியும்...  ராக்கிங்கை தடுப்பதற்காக கல்லூரி நிர்வாகம் செய்த ஏற்பாடு இது... ஆனால் நம் மாணவர்கள் ஆசிரியர்களை விட புத்திசாலிகள் இல்லையா... ஆகவே அவர்களும் தங்கள் ராக்கிங்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி போட்டு விட்டார்கள்... So நம் காயத்ரிக்கு ஒரு வாரத்திற்கு பின் தான் கடின நாட்கள் ஆரம்பம் ஆக இருக்கின்றது...

காயத்ரி தன் வகுப்பறை தேடி ஒரு வழியாக கண்டுபிடித்து உள் நுழைந்து இரண்டாவது பெஞ்சில் சென்று அமர்ந்தாள்.... அருகில் இருந்த பெண் காயத்ரியை பார்த்து சிரிக்க... காயத்ரி பயந்த லுக்குடன் சிறியதாக சிரித்து வைத்தாள்....

“ஹலோ என் பேரு சந்தியா.... உங்க பேரு காயத்ரிதானே.... ஸ்டேட் ரேங்க் வாங்கி இருந்தீங்க இல்லை.... NEET-ல வேற கலக்கி இருந்தீங்க... டிவி-ல பார்த்தேன்.... Congrats....”

“Thanks..... நீங்க எங்க படிச்சீங்க...”, இவ்வாறாக இருவரும் மரியாதைப் பன்மையில் பேச ஆரம்பித்து ஒருமையில் பேசுவது வரை முன்னேறி இருந்தனர்.... இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்... அவளை பார்த்தவுடன் சந்தியா தன் தலையில் கை வைத்துக்கொண்டு, ‘ஐயோ இங்கயும் இந்த இம்சை வந்துடுச்சா...’ என்று முணுமுணுத்தாள்.....

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சந்தியா ஐயோன்னு சொல்லக்கூடாது.... அது நல்லதில்லை... உனக்கு அப்படி சொல்லனும்ன்னா அச்சோன்னு சொல்லு... அவங்க யாரு.... உனக்குத் தெரிஞ்சவங்களா...”

“ஆவ், நான் ஐயோ சொன்னதுக்கே பாட்டியம்மா மாதிரி கதை சொல்றியே... இன்னும் நான் பேசற மத்த வார்த்தையெல்லாம் கேட்டா என்ன பண்ணுவ... ரொம்ப குஷ்டமப்பா உன்னோட.... அவ ஆளுங்கட்சி MLAவோட தம்பி பொண்ணு... நான் படிச்ச அதே ஸ்கூல்லதான் படிச்சா.... அவரு வட்ட செயலாளரா இருக்கும்போதே இவளோட அல்டாப்பு தாங்காது.... என்னமோ அவங்க பெரியப்பா தமிழ் நாட்டு முதல் மந்திரியா இருக்கறா மாதிரி film காட்டுவா.... இப்போ அவர் அந்தக் கட்சித்தலைவருக்கு ஏகப்பட்ட ஜால்ரா அடிச்சு MLA ஆகிட்டார்.... இப்போ எப்படி எல்லாம் ஆடப்போறாளோ....  காலக்கொடுமை அவ ஆடுற கெரகத்தை நாம வேற பார்க்கணும்...”

“ஓ அவங்க கரகம் டான்ஸ் ஆடறவங்களா.... எனக்கு அந்த டான்ஸ் பார்க்க ரொம்ப பிடிக்கும்... எப்படி அந்த கரகம் விழாம பாலன்ஸ் பண்ணி ஆடறாங்க அப்படின்னு ஒரே ஆச்சர்யமா இருக்கும்....”, காயத்ரி சந்தியா பேசிய மொத்த வாக்கியத்தையும் விட்டுவிட்டு கடைசியாக கூறிய கரகத்தை பிடித்துக் கொண்டாள்...

“அடியேய் அது ஒரு flow-ல சொன்னது.... அப்படியே மீனிங் எடுக்காத.... இவள்லாம் ஆடினா.... அவ்ளோதான்.... சுனாமி, பூகம்பம் எல்லாம் ஒண்ணா வந்து நம்மளத் தாக்கும்....”

“ச்சே பாவம் கிண்டல் பண்ணாத....”, காயத்ரியும், சந்தியாவும் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களை, ‘நீ எல்லாம் ஒரு ஆளா...’,என்ற  மிதப்பான பார்வை பார்த்தபடியே கடந்தாள் அப்பெண்....

“பார்த்தியா எப்படி தெனாவெட்டா பார்த்துட்டு போறா பாரு... நீ என்னன்னா அவளுக்கு பாவம் பார்க்கற...”,சந்தியா காயத்ரியை வம்பிழுக்க ஆரம்பிக்க வகுப்பறைக்குள் அவர்களின் பேராசிரியர் நுழைந்தார்....

முதல் வருடம் அவர்கள் படிக்க வேண்டிய பாடங்கள், மற்றும் தேர்வு முறைகள் என்று அனைத்தையும் விளக்கி முடிக்க, பின் அவர்களுக்கு பாடம் எடுக்கப் போகும் ஆசிரியர்கள் ஒருஒருவராக வந்து தங்களை அறிமுகம் செய்துகொண்டு தாங்கள் எடுக்கப்போகும் பாடப்பிரிவை விளக்கி முடிக்க, சந்தியா தலை சுற்றி உட்கார்ந்தாள்...

“என்னாச்சு சந்தியா... ஏன் திடீர்ன்னு ஒரு மாதிரி ஆயிட்ட....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.