(Reading time: 9 - 17 minutes)

“டாக்டர்ன்னா இம்புட்டு படிக்கணும்ன்னு முன்னாடியே யாரானும் சொல்லி இருந்தா அப்படிக்கா இறங்கி இப்டிக்கா ஓடி இருப்பேன்... எதையுமே சொல்லாம ஒரு சின்னப் பொண்ணை கடத்தி கூட்டிட்டு வந்து விட்டுட்டாங்க....”

“என்ன சொல்ற சந்தியா... உன்னை கடத்திட்டு வந்து விட்டுட்டாங்களா... அச்சோ யாரு அப்படி பண்ணினது... நீ பேசாம எங்க வீட்டுக்கு தப்பிச்சு வந்துடறியா... அங்க இருந்துட்டு உங்கம்மா அப்பாக்கு போன் பண்ணி சொல்லிடலாம்....”, காயத்ரி பேச லூசாப்பா நீ என்பது போலவே அவளைப் பார்த்தாள் சந்தியா...

“காயத்ரி நீ  எப்பவுமே இப்படியா.... இல்லை இப்படித்தான் எப்பவுமேவா...”

“என்ன சொல்ற சந்தியா... எனக்கு ஒண்ணுமே புரியலையே....”

“இப்படி எதை பேசினாலும் அப்படியே நம்பறியே.... உன்னை வெச்சுட்டு நான் எப்படி காலேஜ் கட் அடிச்சுட்டு ஊரை சுத்துறது....”

“என்னது காலேஜ் கட் அடிக்கறதா....”

“அப்பறம்... அதெல்லாம் பண்ணாம என்னத்தை படிச்சு நீ சாதிக்க போற... காலேஜ் கட் அடிக்கணும்... சினிமா, மால்ன்னு சுத்தணும்.... சைட் அடிக்கணும்... சைட் அடிக்கும்போது எதாச்சும் பிக் அப் ஆச்சுன்னா அப்படியே அவன் செலவுல ரீ-சார்ஜ் பண்ணிட்டு ஹாயா இருக்கணும்... இந்த மாதிரி எம்புட்டு வேலை இருக்கு...”, சந்தியா சொல்ல காயத்ரி இவளுடன் சேர்ந்தால் நாம் உருப்படுவோமா என்பதுபோல் பார்த்தாள்...

அதிரடி சந்தியாவுடன் அமைதிப்படை காயத்ரி எவ்வாறு காலம் தள்ளப் போகிறாள்... போகப் போக பார்க்கலாம்.....

க்திவேல் தன் அல்லக்கைகளுடன் கில்லி விளையாடிக்கொண்டிருக்க அவனின் கைப்பேசி, ‘காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொடும் தேவதை அம்மா...’, என்று பாட ஆரம்பித்தது...

“டேய் அல்லக்கைகளா... அம்மா பேசறாங்க... விளையாட்டை நிறுத்துங்கடா... நான் இப்போ என்னோட காலேஜ் கான்டீன்ல இருக்கேன்... அதால அதுக்கேத்தா மாதிரி ஆக்ட் கொடுங்க... புரியுதா....”, அவர்களை தயார்படுத்தியபடியே கைப்பேசியை எடுத்தான்....

“மகனே எப்படி ராசா இருக்க... கிளாஸ் நடக்குதா... பேசலாமா...”

“நைனா  நீங்களா... அம்மா போன்ல இருந்து பேசறீங்க... உங்க போன் என்னாச்சு.... இப்போ காலேஜ் கான்டீன்ல இருக்கேன் நைனா....”

“என் போன்ல சார்ஜ் தீர்ந்துடுச்சு தம்பி...”, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நடுநடுவில் ‘இட்லி, வடை, பொங்கலேய்’, என்று சென்ட்ரல் ஸ்டேஷனில் சாப்பாடு விற்கும் குரல்கள் கேட்டன....

“தம்பி நீ எங்க இருக்க... நிஜமாவே காலேஜ்ல தானா....”, தந்தை கேட்க தன் அல்லக்கைகளை முறைத்தான் சக்திவேல்....

“அடேய் அப்ரன்டிஸ்களா... சிங்கமுத்து லெவல்ல perform பண்ணுங்கன்னா எதுக்குடா சிவாஜி லெவல்க்கு நடிக்கறீங்க.... கொஞ்ச நேரம் பொத்திட்டு கூவாம இருங்கடா...”,சக்திவேல் கத்த அல்லக்கைகள் அமைதியானார்கள்....

“அது ரிங் டோன் நைனா... சரி எதுக்கு கால் பண்ணினீங்க சொல்லுங்க... அம்மா எப்படி இருக்காங்க....”

“இப்படி எல்லாமா ரிங் டோன் வைப்பாங்க... சரி அதை விடு.... பாவம்ப்பா அந்த  பாலமுருகன்.... அவனுக்கு ஏம்ப்பா இப்படி செலவு வச்ச...”

“நைனா அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசாதீங்க.... போன வாரம் என்ன பண்ணினான் தெரியுமா... எங்க காலேஜ் பொண்ணுங்க ரெண்டு பேர் ரோட்ல நடந்து போய்ட்டு இருக்கும்போது இந்தாள் அந்தப் புள்ளைங்களை பார்த்து ‘மச்சினிச்சி வர்ற நேரம் மனம் பறக்குதுன்னு....’ பாட்டு பாடி இருக்கான்.... அதுங்க என்கிட்டே வந்து உன் கட்சி ஆள் பண்ணின வேலையைப் பாருன்னு கேவலமா திட்டிட்டு போகுதுங்க... காலேஜ்ல ஒரே அசிங்கமாப் போச்சு... அதுதான் எல்லாத்துக்கும் சேர்த்து ஆப்பு வச்சேன்....”,தன் கணவரிடமிருந்து செல்லை பிடிங்கிய சக்தியின் அம்மா

“எலேய் சத்தி, நீ பாட்டுக்கு அவனை பழி வாங்கறேன்னு மாட்டி விட்டுட்ட... அவன் இங்க உங்கப்பாக்கிட்ட ஓ-ன்னு ஒப்பாரி வைக்கறேன்... இவரும் எப்பவும் போல பரிதாபப்பட்டு, ‘கவலைப்படாத நான் பார்த்துக்கறேன்... உனக்கு வர்ற பில் எல்லாத்தையும் எனக்கு அனுப்பி வை... நானே கொடுத்துடறேன்’, அப்படின்னு சொல்லிட்டாரு...”

“நைனா எதுக்கு நைனா இப்படி சொன்னீங்க ..... அந்தாள் பண்ணின வேலைக்கு அனுபவிக்கறான்.... உங்களை யாரு நடுல பூர சொன்னது....”

“பாவம் புள்ளக்குட்டிங்க வச்சிருக்கறான்  தம்பி... பொழச்சு போகட்டும் விடு....”

“குட்டிங்களை வச்சிருக்கான்னு வேணா சொல்லுங்க ஒத்துக்கறேன்... புள்ளைங்கன்னு சொல்லாதீங்க... புள்ளைங்க இருக்கறவன் பாடற பாட்டா அது...”

“சரி போகட்டும் தம்பி... மேலத்தெரு சிங்காரம் விஷயம் என்னாச்சு, மாமா ஏதானும் சொன்னாங்களா....”

“இல்லை நைனா.... நான் எப்படியும் நைட் மாமா வீட்டுக்கு போக போறேன் அப்போ கேட்டுக்கறேன்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.