Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

கிழக்கு சூரியன் தன் மென்மையான கதிர்களை அனுப்பி பூமிக்கு விழிப்பை ஏற்படுத்தியிருந்த காலைநேரம்…

அந்த இடம்…. சென்னையின் புறநகர் ரயில் நிலையம்… பரபரப்பு இல்லாமல் இருந்தது. சாதாரணமாக கூட்டம் நிரம்பி வழியும் ஸ்டேசன்தான். அன்றைக்கு விடுமுறை நாளாகியதால் பயணிகள் அதிகம் இல்லை.

அங்கே நின்ற சிலரில் ஒரு குரூப்பாக நின்ற கல்லூரி மாணவியர் கவனத்தை கவர்ந்தனர். அவர்கள் யாருக்கோ காத்திருப்பது தெரிந்தது.  சுற்றுலா செல்லத் தயாராக இருப்பதுபோல தெரிந்தது. கடிகாரத்தை பார்ப்பதும் வாசலை பார்ப்பதுமாக இருந்தனர். மல்லிகை மொட்டுக்கள் நிரம்பி இருக்கும் பூக்காரியின் கூடையில் தாமரை மலர் தனித்து தெரிவதுபோல, அவர்களிலும் ஒரு பெண் தனித்து தெரிந்தாள்.

சரி… சரி.. அழகானவள்தான்… அவள் உடையும் அழகாக எடுப்பாக இருந்தது… ஜீன்ஸும் பிங்க் சர்ட்டும்.. அவளை தன்னம்பிக்கை மிக்கவளாக காட்டியது. அதிலும் அந்த ஒளி மிகுந்த கண்களும் மென்மையான சிரிப்பும் அவளை இன்னும் அழகாக்கின… கொஞ்சம் க்ளாஸா… இந்த இடத்திற்கு பொருத்தமில்லாமல் இருக்கிறாளே… யாராக இருக்கும்? என்று காண்போர் கவனிக்கும் வேளையில்,

அவள் அருகில் வந்த ஒருவன் அவளிடம் ஏதோ பேசத் தொடங்கினான். அவனுடைய உடல்மொழி கெஞ்சும் பாவனையை காட்ட, அவள் தலையை ஆட்டி மறுத்து பேசுவது தெரிந்தது. அவளுடன் இருந்த தோழிகளும் அவனுடன் ஏதோ பேச, அவள் அவர்களை தடுத்து அவனிடம் அமைதியாக விளக்க முற்படுவதும் தெரிந்தது.  கண்கள் குறிப்பின்றி அலைய… கைகள் நடுங்க… படபடப்பாக எதையோ அவன் பேசுவது தெளிவாக தெரிந்தது. என்ன பிரச்சினையாக இருக்கும்…?

அங்கிருந்த பார்வையாளர்கள் யோசித்துக் கொண்டிருக்க, ‘அரக்கோணம் வரை செல்லும் தொடர் வண்டி 12ம் எண் நடைமேடைக்குள் வந்து கொண்டிருக்கிறது’ என்ற அறிவிப்பும் வெளியாகியது. அங்கிருந்தோர் பரபரப்புற்று நடைமேடையில் கூட ஆரம்பித்தனர்.

 அந்த பெண்ணிடம் இருந்து அனைவர் கவனமும் சிதறிய அந்த நொடியில் என்ன சொன்னாள் என்று தெரியவில்லை… அவன் அதை எப்படி எடுத்துக் கொண்டான் என்றும் தெரியவில்லை…

‘நீ என்னை மறக்க முடியாது சதா!” என்று கத்தியபடி…

கண் இமைக்கும்  நேரத்தில்… நடைமேடைக்குள் வந்து கொண்டிருந்த ரயிலின் முன் குதித்தான். ரயிலின் முன்பகுதி சிவப்பு ரத்தம் பூசிக் கொள்ள… திடுக்கிட்ட சிலரின் அலறல் சத்தமும்… கடவுளே… என்று கதறிய குரல்களும் கிளம்பின….

திடீரென்று   நடந்த அந்த அதிர்ச்சி சம்பவத்தால் அந்த இடம் அலங்கோலமாகியது.  நிமிடத்தில் சுதாரித்து  திரும்பி அந்த பெண்ணை தேடினால்… அவள் அங்கில்லை… அவளுடன் வந்த பெண்களும் இல்லை…

யார் பெத்த பிள்ளையோ…?

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அந்த பொண்ணுகூட என்ன பிரச்சின…?

காதலிச்சிட்டு இல்லேன்னு சொல்லிட்டாளா?

அவன ஏமாத்திட்டாளா?

இந்த காலத்து பொண்ணுங்களே இப்படித்தான்… ஈஸியா கழட்டி விட்டிருவாள்கள்? 

ஒரு உசுரு போயிடுச்சே?

என்னன்னு எட்டிகூட பார்க்காம ஓடிட்டாள்! என்று பல  புலம்பல்கள் கேட்க ஆரம்பித்தன. 

அவன் யார்? அவள் யார் ? இருவருக்கும் இடையே என்ன தொடர்பு? உயிரை விடும் அளவிற்கு அவனை பாதித்தது என்ன? அது சட்டென்று அந்த நொடியில் ஏற்பட்ட உணர்வா அல்லது திட்டமிட்டு செய்ததா?

அங்கிருந்த அலைபேசிகள் காட்சிகளை பதிவு செய்து ஃபேஸ்புக்கில் அப்-லோட் செய்ய, மீடியாவினர் செய்தி சேகரிக்க ஆரம்பித்தனர். மதிய பதிப்பில் வந்த நாளிதழ்கள்  “வாலிபர் தற்கொலை… காதலி தப்பித்து ஓட்டம்” என்று செய்தி வெளியிட்டன.

இந்த விசயத்தில் என்ன நடந்தது என்றே தெரியாமல், அந்த பெண் குற்றவாளியாக்கபட்டாளா?  நடந்தது குற்றமா இல்லை தண்டனையா… இல்லை காரணமே இல்லாமல் வாழ்க்கைக்குள் நுழைந்து அத்தனையையும் புரட்டி போடும் தலைவிதியா? 

அந்த பையனின் முடிவும் சரியல்லதானே! சில சூழல்களில் நாம் எதிர்பார்த்தது நடைபெறாமல் போகும்போது தாங்க முடியாத ஏமாற்றத்தினால் மனம் நிலை தடுமாறி இது போன்று முடிவுகளை எடுப்பது உண்டு. சில சமயம் நம் உணர்வினை புரிந்து கொள்ளாமல் காயப்படுத்தியவர்களை தண்டிக்கும் பொருட்டு இது போன்ற முடிவினை எடுப்பதும் உண்டு. இது தெளிவாக திட்டமிட்டு செய்வது. எதுவானால் என்ன? இது போன்ற செயல்களை நியாயப்படுத்த முடியாதல்லவா?  

இந்த திடீர் சம்பவம் அப்படியே காற்றில் மறைந்து போய்விடவில்லை. சிசிடிவி கேமிராவில் பார்த்து சதா என்கிற சதாக்ஷியை தேடிக்கொண்டு அவள் வீட்டிற்கே போலீஸ் வந்தது. அவள் வீடு என்றால் அது ஐஜி விஸ்வநாதனின் வீடு!  இது தெரிந்த பின் விசாரணையின் போக்கே மாறிவிட்டது.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்saaru 2018-09-12 17:14
Nice start dear all da best
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்Tamilthendral 2018-09-10 17:32
Ninga sonnatha romba sari Sagambari :yes: etho oru loosu ippadi seithutta appadinu ninaichu othukkama ethu avanai ippadi seyya thundiyathu? Avanoda antha nerathukkana unarvugal enna? Manithargalin vithangalaiyum avargalukketravaru oru soozhnilaiyai kaiyala ithu migavum mukkiyam. Waiting for the next epi :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்sasi 2018-09-05 10:58
nice starting super :clap:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-09-08 17:10
Quoting sasi:
nice starting super :clap:
Thank you sasi.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்Indhusri 2018-09-04 22:48
தொடக்கமே அருமையான பதிவு
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-09-08 17:10
Quoting Indhusri:
தொடக்கமே அருமையான பதிவு

Thank you Indhusri
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்madhumathi9 2018-09-04 19:52
:GL: nalla thodakkam.kaaranam adutha vaarathil sollaporathaaga sonneergal.adhaithaan kelviyaaga ketkka ninaithen.so waiting 4 next epi. :thnkx: 4 this story & epi. :GL: (y)
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-09-08 17:10
Thank you Madhumathi. The message behind the incident will be slowly explained.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 01 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-09-04 17:51
ரொம்ப சூப்பர்... :clap: :clap:
நல்லதொடக்கம் மேம்.. :roll:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-09-08 17:08
Dear Thank you very much
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top