(Reading time: 17 - 33 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 07 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

காலேஜ் பஸ்ஸ்டாப்பிற்கு எப்பொழுதும் பஸ் வரும் நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்பே கிளம்பி வந்து நின்றுவிடும் யாழிசை, நேற்று தோழி சந்தியா வீட்டில் ஏற்பட்ட அனுபவத்தால் மனஉளைச்சலில் இரவு தாமதமாக தூங்கி தாமதமாக காலையில் எழுந்து அரக்க பறக்க கிளம்பினாள்.

இருந்தபோதிலும் சற்று தாமதமானதால், வேகமாக வந்து கொண்டிருந்த யாழிசை பாதையில் நின்றுகொண்டிருந்த அந்த கருப்பு நிற காரை கடக்க முயலும் போது அந்த காரின் கதவு படீர் என்று திறந்தது.

அந்த காரை அவள் கடந்துவிட்டாளென்றால் அவள் அந்த மண் பாதையை விட்டு தார் ரோட்டை அடைய, நான்கு எட்டு வைத்தாலே போதும்.

ரோட்டிற்கு போய் விட்டால், தனது காலேஜ் பஸ்ஸை பிடித்துவிடலாம் என்று வந்துகொண்டிருந்தவளின் பாதையை அந்த காரின் கதவு திறந்ததனால் அடைபட்டது. எனவே அவள் முன்னேறி போக முடியவில்லை.

அவள் தூர வரும் போதே அந்த காரை கவனித்தவள் லூசுக, இந்த பாதையில் போய் காரை கொண்டு வருகிறார்கள் இது கார் போவதர்க்கு ஏற்ற பாதையில்லை என்பதை பார்த்தாலே இந்த கார் காரனுக்கு புரியலையா? என்று எண்ணியபடிவந்தவளின் பாதை அந்த காரினாலேயே மறிக்கப்படவும் எரிச்சலுடன் வைவதற்கு ஏறிட்டுப் பார்பதற்கும்.. காரில் இருந்து தீரன் இறங்க்குவதற்கும், சரியாக இருந்தது.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அது கார் போவதற்கு ஏற்ற பாதையல்ல அந்த பாதையில் கார் ஒன்று நுழைந்தால் எதிரில் ஒரு சைக்கில் மட்டுமே உருட்டிக்கொண்டு போவதற்கு வழிவிட முடியும். மேலும் அது மலை பிரதேசமாதலால் வீடுகளில் சரிவாக இருக்கும் அந்த பகுதியில், சமன்படுத்திய பகுதியில் கட்டப்பட்டிருக்கும் ஒரு வீட்டிற்கும் மற்ற வீட்டிற்கும் அதிக இடைவெளி இருக்கும் மேலும் வீட்டில் இருந்து தார்ரோட்டிற்கு வரும் பாதை சரிவாக ஒரு சிறு கார் போகும் அளவு பாதை மட்டுமே இருக்கும்.

அக்கம் பக்கத்தில் ஆள் யாரும் இல்லாத அந்த நிலையில் தீரனை கண்டதும் அவள் மூளை அவளுக்கு ஓடிடு... யாழி என்ற உத்தரவிட்டது. ஹாய் பேபி, “டோன்ட் கோ.. ஐ வான்ட் ஸ்பீக் வித் யூ” என்று டோர் கதவில் கை வைத்து அதை வேகமாக மூடுமாறு இழுத்து தான் போக கொஞ்சம் வழி ஏற்படுத்தி முன்னேற பார்த்த யாழிசையின் முகத்தில் தோன்றிய அச்சத்தையும் அதன் காரணமாக தன்னை வில்லனை கண்டு மருண்ட பூவாய் தப்பித்து ஓட முயன்ற அவளை தடுக்க யாழிசையின் கை பற்றி நிறுத்தியவன் கூறினான்.

தீரன் அவள் கை பற்றியதுமே பதட்டமடைந்த யாழி. ப்ளீஸ் என்னை விடுங்க என்று கூறியபடி யாராவது தெரிந்தவர்கள் அந்தவழியே வந்து தன்னை காப்பாத்தமாட்டார்களா! என்று ரோட்டை திரும்பி பார்த்தபடி கத்தினாள்.

அப்பொழுது அவளுடன் பஸ் ஸ்டாப்பில் ஏற ரோட்டில் வந்துகொண்டிருந்த கல்லூரி பெண்ணை பார்த்து அவளின் பெயர் சொல்லி கூப்பிட முயன்ற அவளின் வாயை தீரன் தனது கரம் கொண்டு மூடி இழுத்து காருக்குள் அவளுடன் ஏறியவன் மாதவ் லெட்ஸ் வீ கோ. என்றதும் பயம் மற்றும் யோசனையுடன் காரை இயக்கிய மாதவன் திரும்பி துள்ளிக்கொண்டிருந்த யாழிசையும் அடக்கி பிடித்துகொண்டிருந்த தீரனையும் பார்த்து பாஸ் என்று தயங்கினான்.

தீரன் கோபமாக அவனை முறைத்துபார்க்கவும் தானாக கரை செலுத்த ஆரம்பித்தது அவனது கை.

டேய் விடுடா... என்னை என்று கூறி துள்ளியவளை அடக்க வழிதெரியாது தீரன் அவளை தன்னுடன் சேர்த்து அனைத்து பிடித்துக்கொண்டான்.

தன்னை யாழிசை அவனின் அணைப்பில் இருந்து விடுவித்து கொள்ள முயன்றபடி கண்டபடி அவனை திட்ட ஆரம்பித்தாள்.

அவன் அவளிடம் பேசவும் அவளை அமைதிபடுத்தி தான் அவளிடம் கூறவந்ததை சொல்லமுயன்றவனின் வார்த்தைகளை கேட்கும் நிலையில் அவள் இல்லாததை கண்டவன் அவளின் கூச்சலை நிறுத்துவதற்கு வழிதெரியாமல் திணறியவன், அவளின் முகத்தாடையை தனது ஒருகையால் பற்றி அவள்தலையை நிமிர்த்தி என்னை விடு விடுடா என்று கத்தி கொண்டிருந்த அவளின் உதட்டின் மீது தனது உதடுகளை பதித்தான்.

அவனின் அந்த செயலில் அதிர்ந்தது யாழிசை மட்டுமல்ல மாதவனும் தான்.அதிர்ச்சியில் மாதவன் காரை கிரீச் என்று பிரேக் போட்டு நிறுத்தினான்.யாழிசை துள்ளமுடியாமல் பேசமுடியாமல் அவனின் அதிரடி முத்தத்தில் அவனின் கைகளுக்குள் அடக்கப்பட்ட யாழியின் விழிகள் கண்ணீரை சொரிந்தது.

கார்நின்றதுகூட உறைக்காமல் அவனின் கைவலைவில் அடங்கியிருந்த யாழிசையின் கண்களின் கண்ணீர் உதட்டில் வலிந்து உப்புகரிக்கவும் தன்னிலை அடைந்த தீரன் அவளின் முகத்திலிருந்து தன் உதடுகளை அகற்றியவன், சாரி பேபி... நீ ஸ்ட்ரகில் செய்வதை ஸ்டாப்செய்ய எனக்கு வேறு வழிதெரியவில்லை என்று அவன் பேச ஆரம்பித்ததும் மாதவன் தான் நிறுத்தியிருந்த காரை மறுபடி ஓட்ட ஆரம்பித்திருந்தான்.

மாதவனுக்கு மனம் முழுவதுவும் பாரமாக இருந்தது. நேற்று தீரனிடம் ப்ராஜெக்ட் ரிசல்ட் கொடுப்பதற்கு முன்பே இமாமியின் உத்தரவின் பேரில் அன்று காலையில் கோயம்புத்தூர் கார் ஷோ ரூம் சென்று டெலிவரிக்கு காத்திருக்கும் பிலாக் வால்வோவை தீரனுக்காக எடுத்துகொண்டுவந்தான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.