(Reading time: 17 - 33 minutes)

பேபி நீ நான் சொல்வதை நம்பித்தான் ஆகவேண்டும் என்றவன் மாதவா அந்த டேஸ்போர்டில் ஒரு புளூ பைல் இருக்கும் அதை எடுத்துகொடு என்று கூறினான்.

கார் ஓட்டியபடியே ஒருகையால் டேஸ் போட்டைதிறந்து அதில் இருந்த புளூ பைலை எடுத்துகொடுத்தான் மாதவன்.

இதை பார்த்தால், நீ நான் சொல்வது ட்ரூ என்று அச்செப்ட் செய்வாய் என்றவன், அந்த பைலில் முதல் பக்கத்தில் ஜோடியாக பத்மினியும் வானவராயனும் இருந்த போட்டோவை அவளிடம் காண்பித்தான் மேலும் பத்மினியின் டைரியில் ஒட்டப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் போட்டோசையும் அவர்களின் விவரத்தையும் அம்புக்குறியிட்டு தீரனுக்கு விளங்குமாறு எழுதிவைத்திருந்த குறிப்புகளை போட்டோவுடன் காட்டினான்.

அதில் பிருந்தா பிறந்த வருடம் வெள்ளையம்மாளின் அம்மா என்று அவர்களின் வீட்டில் இருந்த பாட்டி வீரலட்சுமியின் போட்டோவும் அதில் இருந்தது . மேலும் தாவணி பாவாடையுடன் வெள்ளையம்மாளும் அதில் இருந்ததையும் கண்டாள். ஆனால் அவள் வானவராயருக்கு அருகில் ஜோடியாக இல்லாமல் பத்மினியின் பக்கம் நின்றிருந்தாள் வானவராயரின் அருகில் ஜோடியாக அந்த போட்டோவிலேயே நாகரீகமான தோற்றத்தில் மிக அழகாக பத்மினி நின்றிருந்ததை அவள் விழிவிரிய பார்ப்பதை பார்த்த தீரன், ஷி இஸ் மை மாம்.என்று ஒற்றை விரலில் வறுடிக்கொடுத்தான் .

வானவராயன் மற்றும் பத்மினி ஜோடி நின்றிருக்க அவர்களின் முன்பு இரண்டு சேர்போட்டு அமர்ந்திருந்த வானவராயரின் பெற்றோரும் அதில் இருந்தனர்.

வானவராயரின் வீட்டு ஹாலில் அவரது பெற்றோர் படம் பெரிதாக பிரேமிடப்பட்டு இருக்கும். வெள்ளையம்மாள் தினமும் அதில் மாலையிட்டு வணங்குவதை யாழிசை பார்த்திருந்திருக்கிறாள். எனவே அது தனது அய்யாவின் பெற்றோர் என்று அறிந்துகொண்டாள்.

அன்று தனது தோழி சந்தியாவின் வீட்டில் முதலில் தீரனை பார்த்த நொடி அவள் தீரனை வியந்துபார்த்தது அவளின் அய்யா போன்ற தோற்றத்தில் தீரன் இருப்பதைத்தான். ஆனால் அதன்பின் அவன் அவளிடம் நடந்துகொண்ட விதத்தை கண்டு தனது கண்ணியமான அய்யா சாயலில் இருப்பதனால் ஒன்றும் இவனும் என் அய்யாவும் ஒன்றாகிவிட முடியாது என்று அந்த என்னத்தில் வானவராயருடன் அவனை ஒப்பிட்டுப்பார்பதை தவிர்த்துவிட்டாள்.

மேலும் இப்பொழுது அவன் காமித்த ஆதாரத்தில் இருந்து அவன் கூறுவது உண்மைதான் என்பது தெளிவாக அவளுக்கு உரைத்ததால் அவள் படபடப்புடன் நீங்க எங்க அய்யாவின் மகனா? வாணவராயன் அய்யாவின் மகனாக இருந்துகொண்டா.. என்னிடம் இப்படி நடந்துகொண்டீர்கள்! என்று கேட்டாள்

ஏய்! பேபி... உன்னிடத்தில் வேறுயாரும் இருந்திருந்தால் நான் அவளின் வாயை சட் செய்ய ஸ்லாப் செய்வேன், நீ என்பதால்தான் அடித்தால் உனக்கு ஹர்ட் ஆகும் என்று கிஸ் பண்ணினேன் என்று ஏற்கனவே உன்னிடம் சொல்லிவிட்டேன். உன்னை பார்த்த நொடியில் இருந்து யூ ஆர் மைய்ன் என்று எனக்குள் ஒரு ஸ்பார்க் வந்துவிட்டது.

மேலும் என் அம்மா எனக்கு வரும் வொய்ப் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்று நினைத்தார்களோ அதுமாதிரி நீ இருப்பாய் என்று மை ஹார்ட் சொல்லுது.

என் மாம் என்னிடம் வெஸ்டர்ன் கலாச்சாரத்தில் முதலில் டேட்டிங் செய்து ஒருவருக்கொருவர் பழகி பார்த்து புரிதல் ஏற்பட்ட பிறகு செய்யும் மேரேஜ் கூட அதிகம் டைவர்சில் முடியும் .

ஆனால் தமிழியன்ஸ் டிரெடீசனலில் கல்யாணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் பழக அனுமதிக்கப்படுவதில்லை. இருந்தாலும் அங்கு கல்யாணத்திற்கு பிறகு விவாகரத்து என்பது மிகவும் குறைவு என்றார்கள்.

அவர்கள் அவ்வாறு கூறும்போது கூட அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ஆனால் உன்னை பார்த்தபின் உன்னுடன் பழகிப் பார்க்காவிட்டாலும் உன்னுடன் வாழும் வாழ்க்கையை என் மனம் ஆசை படுகிறது. என் வாழ்வின் என் அம்மா இல்லாத வெற்றிடத்தை உன்னால் நிரப்பமுடியும் என்று தோன்றுகிறது.

ஐ வான்ட் டூ மேரி யூ. நீ என்னுடைய இந்த மேரேஜ் ப்ரொபோஸ்சை அக்சப்ட் செய்யாததற்கு முன், உன்னை கிஸ் செய்தது மை மிஸ்டேக் தான். இனி நீ என்னை ஏற்றுக்கொண்ட பின்புதான் உன்னிடம் அட்வான்டேஜ் எடுத்துகொள்வேன் இது என்னுடைய ப்ராமிஸ் என்று கூறினான் தீரன்.

அவனின் வார்த்தைகளை கேட்டு அதிர்ந்தவள் ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும், என்ன பேசவேண்டும் என்ற நாகரீகம் கூட தெரியாதவரை நான் ஏற்பேன் என்று கனவு காணாதீங்க என்று கூறினாள்.

அவளின் கோபத்தை கூட ரசித்தபடியே கூலாகவே அவளிடம் பதில் கூறினான், பேபி என்னை சுற்றி வெஸ்டர்ன் கல்ச்சர் சூழ்ந்து இருந்தாலும் என் அம்மாவின் வளர்ப்பால் நான் கண்டபடி நடந்துகொள்ளாமல் கட்டுப்பாட்டுடன்தான் இதுவரை நடந்திருக்கிறேன்.

நான் உன்னிடம் பிகேவ் செய்ததை வைத்து, என்னை நீ வேறுமாதிரி நினைக்கிறாய். நான் என் கன்ட்ரோலை இழந்து சலனப்பட்டது (உன்னிடம் மட்டும்தான் என்று கூற வார்த்தை வாய்வரை வந்தவனின் மனத்திரையில் மற்றொரு பெண்ணின் பிம்பம் வந்து போனது) என்றவன் ஒருநிமிட இடைவெளிக்குபின் நான் மேரேஜ் செய்ய விரும்பியவளிடம் மட்டும்தான் என்று கூறிமுடித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.