(Reading time: 17 - 33 minutes)

ஏனோ அவ்வளவுநேரம் அவனின் செயலில் கொதித்துகொண்டிருந்த அவளின் மனம் கொஞ்சம் தனது வெம்மையை தனித்திருந்தது. அது அவனின் பேச்சாலோ அல்லது வானவராயர் குடும்பத்தின் மீது இருந்த விசுவாசத்தினாலேயா என்பதை அவளாலேயே உணரமுடியவில்லை. இருந்தாலும் தனக்கு அவனின் மேல் இருந்த கொலைவெறி குறைத்ததை அவனிடம் வெளிக்காட்டிகொள்ள யாழி விரும்பவில்லை.

அதனால் யாழிசை இறுக்கமாகவே முகத்தை வைத்துகொண்டு என் அய்யாவின் மகன் நீங்கள் என்பது உண்மையென்றால் நேராகவே பண்ணை வீட்டிற்கு வந்து பேசவேண்டியதுதானே அதைவிட்டுவிட்டு என் மூலம் ஏன் வானவராயர் அய்யாவை அணுக நீங்க நினைகிறீர்கள் என்று கேட்டாள்.

அவள் அவ்வாறு கூறவும் அவளிடம் வெளிப்படையாக இப்பொழுது தான் இந்தியாவில் செய்ய ஒத்துக்கொண்ட பணியைப்பற்றி கூறமுடியாது. அதனை பற்றி தெரிந்தால் ஏற்கனவே என்மீது கோபத்தில் இருக்கும் அவளை மேலும் டெம்ட் செய்ததுபோல் ஆகிவிடும் என்பதை உணர்ந்தவன் அவளிடம்.

மை பாமிலி இங்கே இருப்பது யாருக்கும் தெரியக்கூடாது, அவ்வாறு தெரிந்தால் மை டாட் பாமிலிக்கு , என்னை பாயின்ட்அவுட் செய்பவர்களால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றான்.

அவன் அவ்வாறு அவளிடம் கூறிகொண்டிருகும் போதே மாதவன் யாழிசையின் கல்லூரி முன்பு காரை நிறுத்தினான்.

யாழிசை, அவ்வளவுநேரம் தீரனுடன் பேசிகொண்டிருந்தவள் கார்நின்றது.. தனது கல்லூரியின் முன்பு, என்பதை உணர்ந்ததும் கேள்வியுடன் தீரனின் முகம் பார்த்தாள்.

உடனே தீரன் யாழிசையிடம், நீ என்னிடம் ஸ்ட்ரகில் செய்ததால் எனக்கு உன்னை கிஸ் செய்து உன்னை கண்ரோல் செய்ய சான்ஸ் கிடைத்தது. அதுக்கு தாங்க்ஸ் பேபி... உனக்கு எப்படியோ எனக்கு அது ஸ்வீட் மெமோரிஸ் தான் என்று கூறினான்.

அவன் தனக்கு அளித்த முத்தத்தை ஸ்வீட் மெமோரிஸ் என்று கூறியதும் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் ஜன்னலின் புறம் திரும்பி வெளியே பார்பதுபோல் அவனை பார்ப்பதை தவிர்த்தாள்.

யாழிசையின் சங்கடத்தை புரிந்துகொண்ட தீரன் வேறு பேசினான். நான் இன்னும் உன்னிடம் பேச நினைத்ததை பேசிமுடிக்கவில்லை. நீ நான் சொல்வது உண்மை என்று நினைத்தால் எனக்கு உதவிசெய்ய நீ சம்மதிப்பாய் என்றால்... என்றவன், ஒரு பிளைன் கார்டில் மொபைல் நம்பர் எழுதி அவளிடம் கொடுத்தவன் இந்த நம்பருக்கு கால் செய்து என்னுடன் பேசவேண்டும் என்று கூறு, நீ அவ்வாறு கூறினால் அடுத்தநிமிடம் உன்னை நான் காண்டாக்ட் செய்வேன் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் இது யார் நம்பர் என்று யாழிசை கேட்டாள்.

சாரி பேபி... கான்பிடன்சியல் காரணமாக என்னுடைய மொபைல் நம்பரை யாருக்கும் நான் கொடுக்க முடியாது. இந்த நம்பர் என்னுடைய அசிஸ்டென்டோடது. இன்னும் ஒன்று கூறுகிறேன் கவனமாக கேள். எனக்கு இங்கு பாமிலி இருக்குது என்ற விஷயத்தை கான்பிடண்டியலா வச்சுக்கோ. அவ்வாறு கூறினால் ரிஸ்க் உன் வானவராயர் அய்யாவுக்குத்தான் பர்டிகுலராக, மிஸ்டர் ரங்கராஜனின் டாட்டருக்கு கண்டிப்பாக தெரியக்கூடாது என்றான்.

அவன் கூறியதும் என்ன ஆபத்து? யாரால்? ஏன்? என்ற பல கேள்விகள் அவளுக்குள் எழுந்தது. அவளின் குழப்பமான முகத்தை பார்த்த தீரன் யாழிசையிடம் எனக்கொன்றும் நீ இறங்கிப் போகாமல் என்னுடனேயே இருப்பதில் எந்த அப்ஜெக்சனும் இல்லை என்று கூறிய பின்பே டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் இறங்கி அவள் இறங்குவதற்கு தோதாக கதவை திறந்து வைத்திருப்பதை உணர்ந்தவள் நான் போறேன் என்று அவனிடம் கேக்க வந்த கேள்விகளை கேட்காமலேயே இறங்கிகொண்டாள்.

அவள் இறங்கியதும் மாதவன் வேகமாக காரில் ஏறி பாஸ் ஹோட்டலில் நீங்கள் இல்லையோ! என்ற சந்தேகம் பிலாக்கேட்ஸ் டீமிற்கு வந்துவிட்டது இப்போதான் ஹோட்டலில் இருந்த நம் கைய் அவர்களுக்கு டவுட் வந்ததை எனக்கு மெசேஜ் செய்தான் என்றான்.

அவன் அவ்வாறு கூறவும் இந்த நியூசை நான் பிப்டீன் மினிட்ஸ் முன்னேயே எக்ஸ்பெக்ட் செய்தேன் மாதவ் என்றவன் கையில் யாழிசையின் பர்ஸ் இருந்தது .யாழிசையை வாய்பொத்தி காருக்குள் இழுக்கும் போது அவளின் கையில் வைத்திருந்த பர்ஸ் காரினுள் விழுந்திருந்தது. அவள் காலேஜ் வாசலில் இறங்கும் போதே காரினுள் கிடந்த அந்த பர்சை தீரன் கவனித்துவிட்டான் இருந்தபோதிலும் அதை அவளை கூப்பிட்டுகொடுக்காமல் தன்னுடனே வைத்துகொண்டான்.

அந்த பர்சை திறந்து பார்த்தவன் அதில் பேனா, பென்சில் மற்றும் சில ரூபாய் நோட்டுக்கள் உடன் அவளின் ஏ.டி.எம் கார்ட் மற்றும் மைக்ரோ மேக்ஸ் மொபைலும் இருப்பதை பார்த்ததும் மொபைலை எடுத்து அதனை இயகிய அவனின் மூளை பரபரப்பு அடைந்தது ஏனெனில் அவளின் மொபைலில் பெர்சனல் இன்போர்மேசனில் அவளின் வங்கி அக்கவுண்டு நம்பர் மற்றும் ஏ.டி.எம் பாஸ்வேர்ட் முதலியன ஸ்டோர் செய்து வைத்திருக்கப் பட்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.