(Reading time: 11 - 22 minutes)

அது அவனுடைய லக்கி வாட்ச் என்று சொல்லலாம். இன்றைக்கு மதியம் அவனுக்கு முக்கியமான மீட்டிங் இருந்தது. அந்த வாட்ச் இல்லாமல் சற்று டென்ஷன் ஆனவன்,

மித்ரா வெளியே வரவும்

“மித்ரா, வாட்ச் எங்கே வச்சேன்னு தெரியல? கொஞ்சம் தேடி தாயேன்?

“நீங்க வீட்டில் கழட்டி வச்சு இருந்தா, இங்கே தான் இருக்கும். “ என்று கூற, அவனும் ஒருவேளை ஆபீஸ்சில் கழட்டி வைத்தோமோ என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அவனுக்கு எதுவும் நினைவு வராமல் போகவே, சற்று சினுக்கத்துடனே கீழே சென்றான்.

அவனைப் பார்த்ததும் மைதிலி

“என்ன ஆச்சு ஷ்யாம்? ஒரு மாதிரி இருக்க? என்று வினவினார். அம்மாக்கு தெரியாதா பிள்ளையைப் பற்றி.

“ம்ம்ச். வாட்ச் எங்கே வைத்தேன்னு தெரியலை?

“நல்ல தேடித் பார்த்தியா?

“ம்.. ரூம் புல்லா தேடினியா?

“தேடிட்டேன். “

“வீட்டில் உள்ளது எங்கே போகும்? வெளியில் எங்காவது விட்டு விட்டாயா?

“அதான் யோசிக்கிறேன். ஒன்னும் நியாபகம் வரலை. ஒரே எரிச்சலா இருக்கு”

இதைக் கேட்ட ராம் , “ஷ்யாம்.. இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன். வாட்ச் தானே. வேறே வாங்கிக்கலாம் விடு”

“இல்லைப்பா. அது என்னோட செண்டிமெண்ட். நிறைய காண்ட்ராக்ட்ஸ் சைன் பண்ணும்போது கையில் கட்டி இருப்பேன். இன்னிக்கு அந்த ஜெர்மன் கிளைன்ட் ரெபர் செய்து இன்னொரு குரூப் டிஸ்கஷன் வராங்க. சோ அந்த வாட்ச் இருந்தா லக்கி”

“இட்ஸ். ஓகே. அது நமக்கு கிடைக்கனும்னு இருந்தா, கண்டிப்பா கிடைக்கும். இப்போ டென்ஷன் ஆகாத”

இதைக் கேட்டுக் கொண்டு இருந்த சுமித்ராவிற்கு ஏதோ இடித்தது. அவளுக்குத் தன் அண்ணனைப் பற்றித் தெரியும். அப்படி கண்ட இடங்களில் எல்லாம் கழட்டி வைக்கும் ரகம் அல்ல அவன்.

அப்போது மாடியில் இருந்து இறங்கிக் கொண்டு இருந்த மித்ராவைப் பார்த்த சுமித்ராவிற்கு அவள்தான் ஏதோ செய்து இருக்கிறாள் என்று தெரிந்து விட்டது.

அவளின் திருட்டு முழியில் இருந்தே கண்டுபிடித்த சுமித்ரா, சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

ஷ்யாமின் முகம் சோர்வாக இருக்கவே, சுமித்ரா

“அண்ணா, நீ உன்னோட ரூம் புல்லா தேடிட்டியா?

“ஹம்ம்.”

“அப்போ, உன்னோட ஆபீஸ் ரூமில் தேடினியா? “ என்று கேட்க, அவன் முகம் பிரகாசம் அடைந்தது.

“இல்லை. இதோ போய் பார்க்கறேன்” என்று விட்டு அவன் ஓடவும், மித்ரா சுமியை முறைத்து விட்டு அவன் பின்னே சென்றாள்.

மித்ராவின் முறைப்பைப் பார்த்த சுமி, இப்போது வின்கிங் செய்தாள். (அதாங்க கண்ணடித்தாள்).

அவன் மேலே சோர்வாக பேசி விட்டுக் கீழே வரும்போதே, மித்து வாட்சை எடுத்து ஆபீஸ் ரூம் டிராவில் வைத்து இருந்தாள்.

ஷ்யாம் முதலில் மேல்பக்கமாகத் தேடியவன், எதற்கும் என்று டிராவை திறந்து பார்க்க வாட்ச் இருந்தது.

‘தேங்க் காட்” என்று விட்டு மித்ராவிடம் சொல்லிக் கொண்டு வேகமாக புறப்பட்டு விட்டான்.

எல்லோரும் அவன் ஆபீஸ் போகிறான் என்று எண்ணியிருக்க, அவன் சென்றதோ அவன் அத்தை வீடு.

அவனை அந்த நேரத்தில் எதிர்பாராத சபரி,

“வா ஷ்யாம்.. மித்ரா வரலையா? என்ன சாப்பிடற ? என்று உபசரனையில் இறங்கினார்.

“ஒன்னும் வேண்டாம் அத்தை. உங்க கிட்டே பேசத்தான் வந்தேன்.”

“என்ன சொல்லு?

“மாமா, பாட்டி எல்லாம் எங்கே?

“மாமா இன்னிக்கு ஆடிட்டர் ஆபீஸ் வரை போகணும்னு சீக்கிரம் கிளம்பிட்டாங்க. அத்தை கோவிலுக்குப் போயிருக்காங்க? ஏன் கேக்கிற?

“உங்ககிட்டே கொஞ்சம் பேசலாம்னு தான். “

‘என்னப்பா? எதுவும் பிரச்சினையா? என்று சற்று கலக்கத்தோடு கேட்டார்.

“பயப்படாதீங்க அத்தை. மித்ராவை நம்ம ஈவென்ட் நிறுவனத்திற்கு அனுப்புவது உங்களுக்கு பிடிக்கலையா?

“அப்படி இல்லை ஷ்யாம். மித்ராவைப் பற்றித் தெரியும் தானே. சின்ன விஷயத்திற்கும் பயந்து விடுவாள். புது ஆட்களைக் கண்டால் தயங்குவாள். அதற்கு தான் யோசிக்கறேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.