Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 04 - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 04 - சசிரேகா

Kadhalai pera ethanikkiren

காலையில் கௌதம் வீட்டிற்கு வெளியே கோதாவரியிடம் தண்ணிர் கேனுடன் மாட்டிக் கொண்டான். அவனின் வீட்டினுள்

தேஜஸ்வினி விழித்து எழுந்த உடன் சுற்றி முற்றி பார்த்தவள் அவசரமாக படுக்கையில் இருந்து எழுந்து கதவிடம் வந்து திறக்கப் பார்க்க அது லாக் ஆகியிருக்கவும் பலமாக கதவை தட்ட ஆரம்பித்தாள். யாரும் வராமல் போகவே

”யாராவது இருக்கீங்களா கதவை திறங்க” என கத்தவும் அந்தச் சத்தம் வெளியே நின்றிருந்த கௌதம் மற்றும் கோதாவரி வரை கேட்டது. கௌதமோ வசமாக மாட்டிக்கொண்டான்.

”அய்யோ நான் என்ன பண்ணுவேன் இவள் வேற இப்பதான் கதவை தட்டனுமா பாவி, மிச்ச நேரத்தில தூங்கிட்டே இருப்பா, இப்ப இந்தம்மா வேற இருக்காங்களே, அவளை பார்த்துட்டா என்னாகிறது. அவள் வேற உண்மையை உளறினா என்னாகும். தாலி இல்லை, கல்யாணம் ஆகலை, அவள் வேற என்கூட 2 நாள் இருந்திருக்கா இது ஒண்ணு போதும்

என்ன ஏதுன்னு கூட கேட்காம நிஜமாவே எனக்கு அவளை கல்யாணம் பண்ணி வைச்சிடுவாங்க இங்கிருக்கிறவங்க, அதனால அந்தப் பொண்ணை பத்தி நான் முழுசா தெரிஞ்சிக்கிட்டு அவளை அவள் வீட்ல விட்டுடனும் அதான் நல்லது” என நினைத்தவன் அவசரமாக தன் போர்ஷன் பக்கம் செல்ல பின்னாடியே வந்த கோதாவரி

”டேய் என்னடா நடக்குது உன் பொண்டாட்டி ஏன் கதவை தட்டறா”

“அதுவா அது நான் வர்ற லேட்டானதால பயந்துட்டா பாவம், வெகுளி, அவளுக்கு உலகமே தெரியாது அதான்”

“இல்லையே வேற ஏதோ மாதிரி கேட்குதே” என சந்தேகமாக கேட்க

தேஜஸ்வினியோ அந்நேரத்தில் சத்தமாக

”காப்பாத்துங்க காப்பாத்துங்க” என கத்தவும் அதைக் கேட்ட கௌதமின் பல்ஸ் ரேட் அதிகமானது

”அடிப்பாவி தங்க பாதுகாப்பான இடமும், வேளா வேளைக்கு சாப்பாடும் தந்தா இப்படியா கத்தி வைப்ப, அய்யோ இப்ப நான் என்ன செய்வேன்” என பயந்தவன் கோதாவரியிடம்

”நீங்க போங்க ஆன்ட்டி, அது அவள் பயந்துட்டா அதான் நான் போய் என்னன்னு பார்க்கறேன்” என சொல்லி அவசரமாக தன் வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்தியவன் நிம்மதியாக மூச்சு விட்டு அவசரமாக பெட்ரூம் கதவைத் திறந்தான்.

வாசலில் நின்றிருந்த தேஜஸ்வினி அவனை  கோபமாகப் பார்த்தாள்

”என்னை ஏன் இப்படி அடைச்சி வைச்சிருக்கீங்க” என கத்த அவளது வாயை பொத்தியபடி இழுத்துக் கொண்டு கட்டிலுக்கு சென்று அதில் அவளை அமர வைத்தவன்

”ஏன் இப்படி கத்தற நான் இங்கதானே இருக்கேன் மெதுவா பேசு”

“என்னை ஏன் இப்படி அடைச்சி வைச்சிருக்கீங்க”

“அடைச்சி வைச்சேனா நான் உனக்கு பாதுகாப்பு தரேன்”

“எப்படி”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“எப்படியா இப்படிதான், நீ இப்ப பத்திரமா இருக்கல்ல அப்புறம் என்ன, இந்தா டிபன் பார்சல் கொண்டாந்திருக்கேன் சாப்பிடலாம்” என அவசரமாக பார்சலை பிரித்தவன் அதில் ஒரு இட்லியை பிட்டு அவளின் வாயில் ஊட்ட வர தடுத்தாள் தேஜா

”என்னாச்சி இட்லிதான் நல்லாயிருக்கும் சாப்பிடு”

“அய்யோ எனக்கு வேணாம்”

“ஏன் என்னாச்சி இப்ப உனக்கு லவ் பெயிலியரு, உன்னை ஒருத்தன் ஏமாத்திட்டா அவனுக்காக சாப்பிடாம நீ பட்டினி கிடந்து சாகப்போறியா அறிவில்லை உனக்கு”

“அய்யோ இல்லை நான் அதை சொல்லலை”

“வேற என்ன ஓ புரியுது புரியுது, நானும் உன்னை போல லவ் பெயிலியர் கேஸ்தான் தெரியுமா, என்னையும் ஒருத்தி ஏமாத்திட்டா அதுக்காக நான் என்ன உன்னை போல சாப்பிடாமயா இருக்கேன் இந்தா வாயை திற சாப்பிடு”

“இல்லை வேணாம்” என தேஜா சொல்ல அதற்கு கௌதம்

”என்ன வேணாம்ங்கற என்னாச்சி, ஓ வீட்டு ஞாபகம் வந்துடுச்சா சரி சரி அதுவும் நல்லதுதான், டிபன் சாப்பிடு உன்னை கொண்டு போய் உன் வீட்ல விடறேன்”

”வேணாம்”

“என்னடி வேணாம் வேணாம்ங்கற லூசா நீ, என்னதான் வேணும் உனக்கு”

“நான் இரண்டு நாளா பிரஷ் பண்ணலை, குளிக்கலை, இப்படியே எப்படி சாப்பிடறது” என அவள் கத்த

”நேத்து மட்டும் சாப்பிட்டல்ல, அப்படி நினைச்சி சாப்பிடு”

“முடியாது நேத்து நான் மயக்கத்தில இருந்தேன்”

“நீ மயங்கற மாதிரி நான் எதுவும் செய்யலையே“

”சரி தூங்கிட்டு இருந்தேன்”

”அப்படி சொல்லு” என கௌதம் சொல்ல அதற்கு தேஜா

“பிரஷ் பண்ணாம நான் டிபன் சாப்பிட மாட்டேன்”

“அவ்ளோதானே பாத்ரூம்ல என் பிரஷ் இருக்கு, போ யூஸ் பண்ணிக்க, நான் எதுவும்  சொல்லமாட்டேன்”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8  9 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • Katrin kanalKatrin kanal
 • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
 • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
 • Theeradha KadhalTheeradha Kadhal
 • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
 • Kids Fun StoriesKids Fun Stories
 • Unnai ondru ketpenUnnai ondru ketpen
 • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 04 - சசிரேகாmaya deva 2019-01-04 07:18
hi.... neenga story superra eluthuringa.... but nijathil epadi nadakummo apadi kathaiyai kondu ponaal innum superra irukum... pakkathu veedil irupavarkal enna nadanthalum kandu kolvathu illai ipothu. but summa nadcharipathu pollavey story kondu poringa.. yaarum mun pin theriyatha oru pennai pondathi endru solla maadanga. ithil epo parthalum pondatinu solli vera mathiri kondu poringa. oru ikkadil maadi konda penn epothum ithu venum athu venum endru kedka maadarkal. aramapathil antha pennai ninaithu aiyo pavam. epadi ithil irunthu mindu vaaruval endru yosithen. but ipo apadi thonala.... unga innoru story kottai vilikalil jalamidum kathal...athilum purusan pondatti endru.... antha varthaiyin arthatai maathidinga.. pls intha storylaiyum apadi kondu pogathinga. ithu en china request pls
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 04 - சசிரேகாsasi 2018-09-15 17:18
Quoting saaru:
Paavam gowtham ha ha ha

:sad: :yes: ஆமாம்பா பாவமாதான் இருக்கு ஆனா என்ன செய்றது விதி விளையாடுது :cool:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 04 - சசிரேகாsaaru 2018-09-15 10:32
Paavam gowtham ha ha ha
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 04 - சசிரேகாmahinagaraj 2018-09-14 15:12
ரொம்ப ஜாலியா இருக்கு மேம்... :clap: :clap:
விடிஞ்சா என்ன நடக்குமோ.. :Q:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 04 - சசிரேகாsasi 2018-09-15 17:20
Quoting mahinagaraj:
ரொம்ப ஜாலியா இருக்கு மேம்... :clap: :clap:
விடிஞ்சா என்ன நடக்குமோ.. :Q:
:thnkx:

விடிஞ்சாவா :Q: அது மட்டும் ரகசியம் :P :dance:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 04 - சசிரேகாsasi 2018-09-14 10:13
Quoting madhumathi9:
:grin: nice epi.sariyaana comedy aaga irukku. Gowtham seiyum velai i mean pesarathu sirippa irukku.sutrilum ullavargalai samalippathil killaadi polirukku.ella aalukkum oru kaaranathai solli virattuvathu super.but evvalavu naal ippadi seiya mudiyum.waiting to read more. :thnkx: (y) :GL:

நன்றி :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 04 - சசிரேகாmadhumathi9 2018-09-13 17:59
:grin: nice epi.sariyaana comedy aaga irukku. Gowtham seiyum velai i mean pesarathu sirippa irukku.sutrilum ullavargalai samalippathil killaadi polirukku.ella aalukkum oru kaaranathai solli virattuvathu super.but evvalavu naal ippadi seiya mudiyum.waiting to read more. :thnkx: (y) :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top