(Reading time: 11 - 22 minutes)

“இதை அப்படியே விட்டால் சரியா வருமா அத்தை? இன்றைக்கு இல்லாவிட்டால் இன்னும் கொஞ்ச நாள் கழித்து குழந்தை என்று வரும்போது அவள் எத்தனை விஷயம் பேஸ் செய்ய வேண்டும். வலியில் ஆரம்பித்து, அவர்களை வளர்க்கும் வரை எத்தனை விஷயங்களைப் பார்க்க வேண்டும். அவளுக்கு அடிப்படை தைரியம் இருந்தால் தானே மற்றவர்களை அவளால் கண்டிக்கவோ, தட்டிக் கேட்கவோ முடியும்?

“ஆனால் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்களே ? பார்த்துக் கொள்ள மாட்டீர்களா?

“நிச்சயம் பார்த்துக் கொள்வோம் அத்தை. ஆனால் பிள்ளைகளுக்கு அம்மாவும், அப்பாவும் தானே ரோல் மாடல். அவளின் அந்த பயந்த சுபாவம் நாளை குழந்தைகளுக்கும் வரக் கூடாது. அதே சமயம் அவளின் தனி திறமையும் வெளியில் தெரிய வேண்டும்“

“நேற்றைக்கு ஆனது போல் வெளியில் செல்லும்போது அவளுக்கு வந்து விட்டால் ரிஸ்க் இல்லையா?

“அவளுக்கு பயத்தாலே வரக் கூடிய விஷயம் தான் அந்த பேணிக் ஆகறது. எதுக்கும் பயப்படாம என்ன வருதுன்னு பார்த்துக்கலாம்னு நினைச்சாலே அவ மயங்கி விழறது நடக்காது.”

“இதை சரி செய்யாமல் அவளை வேலைக்கு என்று அனுப்புவது சரி வருமா ஷ்யாம்?

“இது மருந்தினால் குணப்படுத்தக் கூடியது இல்லை அத்தை. அவளின் மன தைரியத்தினால் மட்டுமே சரியாகக் கூடியது. அவளின் கம்போர்ட் ஜோனுக்குள்ளே மட்டும் இருந்தா மாற்றம் வராது. இப்படி வெளியில் சென்றால் தான் சரியாக இருக்கும்”

“சரி ஷ்யாம். இருந்தாலும் எனக்கு ரொம்ப பயமா இருக்கு”

“நீங்க நம்ம கம்பெனிலே பார்ட்னெர். மாமா கம்பெனியில் டைரக்டர். நீங்களே இப்படி சொல்லலமா?

“என்னை நம்ம வீட்டில் அப்படி வளர்க்கலை. அதே போல் எனக்கு உடலிலும் வேறு எந்த பிரச்சினை வரவில்லை. ஆனால் மித்ராவை அவளின் உடல் நலக் குறைவால் கைக்குள்ளேயே வைத்து வளர்த்து விட்டோம். அதனால் தான் அவள் கலங்கினால் எனக்கும் கலக்கம் வந்து விடுகிறது.”

“முக்கியமாக இதற்குதான் வந்தேன் அத்தை. இனிமேல் அவள் நேற்று மாதிரி பேசினால், நீங்கள் தைரியம் சொல்லுங்கள். உங்களை, அம்மாவை, ஏன் பாட்டியை எல்லாம் உதாரணமாக சொல்லி அவளால் முடியும் என்று நம்பிக்கை கொடுங்கள். அதுதான் அவளை இன்னும் பலப்படுத்தும்”

“சரி ஷ்யாம். சாரி. நான் நேத்திக்கு படபடன்னு பேசியிருக்கக் கூடாது. நீ என்பதால் தான் அப்படிப் பேசினான். மனசில் வச்சுக்காத”

“ஐயோ என்ன அத்தை நீங்க? என்னை சொல்ல உங்களுக்கு உரிமை இல்லையா என்ன?

அப்போது மித்ராவின் பாட்டி வந்து,

“என்ன ஆச்சு ஷ்யாம்? நேத்திக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே? அவளின் கவனக் குறைவால் மைதிலி, நிறுவனம் ரெண்டுக்கும் கெட்ட பெயர் ஆகி இருக்கும்?

என்று படபடவென்று கேட்டார்.

ஷ்யாம், தன் அத்தையை ஒரு பார்வையைப் பார்த்து விட்டு,

“ஒன்னும் பிரச்சினை இல்லை பாட்டி. அவ நல்லா தான் பேசி இருக்கா. என்ன அதுதான் சரின்னு புரிஞ்சிக்காம பயந்துட்டா. அவ்வளவு தான். கூடிய சீக்கிரம் அந்த பயமும் போய் புது மித்ராவை பார்க்க போறீங்க பாருங்க” என்று சிரித்துக் கொண்டே கூற,

“அதுதான் எனக்கும் வேணும் ஷ்யாம். சின்ன வயசுலேர்ந்து அவகிட்டே ரொம்ப கண்டிப்பா நடந்துகிட்டேன். இப்போவும் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. அதுதான் சட்டுன்னு பழைய மாதிர்யே பேசிடறேன்.

“இருக்கட்டும் பாட்டி. நீங்களும் நல்லத நினைச்சுதானே செய்யறீங்க? அது நிச்சயம் பலிக்கும் பாருங்க”

என்று மேலும் பேசிவிட்டு ஷ்யாம் கிளம்பி தன் அலுவலகத்திற்கு சென்று விட்டான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

மித்ராவோ முதலில் தயங்கினாலும், மைதிலி அவளை சமாதனப் படுத்தித் தன் நிறுவனத்திற்கு அழைத்து சென்றாள்.

முந்திய நாள் அவள் ரிசெப்ஷனில் செய்த கூத்து ரிசெப்ஷன் பெண் வேறு யாருக்கும் தெரியாது என்பதால் நன்றாகவே கழிந்தது.

அவளின் முந்தைய நாள் திணறலை உணர்ந்து அந்த இடத்திலே மேலும் மூன்று நாட்கள் பயிற்சி எடுக்க சொன்னாள் மைதிலி.

ஷ்யாம் எதிர்பார்த்த வெளிநாட்டு ஒப்பந்தம் வெற்றிகரமாக கிடைக்கவும், மிகுந்த சந்தோஷத்தோடு வீட்டிற்கு சென்றான்.

அங்கே எல்லோரரிடமும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டவன்

“நல்ல வேளை என் வாட்ச் கிடைத்தது. அதோட லக்லே எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. தேங்க்ஸ் சுமி. & மித்ரா நீயும் என்னோட சேர்ந்து தேடினதுக்கு தேங்க்ஸ்”

“அது சரி. ஒளிச்சு வச்ச்சவளுக்கே தேங்க்ஸ்சா? என்று சுமி கூற, ஷ்யாம் சுமித்ராவிடம்

“யாரு அது ஒளிச்சு வச்சது?” என்று கோபமாக கேட்க,

“ஹ.. உன் வீரமெல்லாம் இன்னும் ரெண்டு நிமிஷத்துலே புஸ்வானம் ஆகப் போகுது”

“அது எல்லாம் ஒன்னும் இல்லை. நீ யாருன்னு சொல்லு . நான் உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்”

“ஹ.. எலி வாண்டட்டா வந்து பொறியில் சிக்குது. ஹேய்.. மித்ரா. வச்சு செய்.” என்று கூறியவள் ஓடுவதற்கு தயாராக,

“எல்லாம் உன் அருமை பொண்டாட்டி தான்” என்று சொல்லி ஜூட் என்று விட்டு ஓடிவிட்டாள்.

அவளின் பதிலில் ஷ்யாம் கோபமாக மித்ரவைப் பார்க்க, முதலில் பயந்த பார்வை பார்த்த மித்ரா, பின் தைரியமாக அவனின் கண்களை நேராக சந்தித்தாள்.

இந்த மாற்றத்தை குறித்த ஷ்யாம் மனது , வெளியில்

“எதுக்குடி இப்படி செஞ்ச?

“ஹ.. அப்போதான் இனிமே நான் என்ன பேசறேன்னு ஒழுங்கா கேப்பீங்க?

“அடிப்பாவி . அதுக்கு இப்படி ஒரு தண்டனையா?

“ஆமாம்” என்று கண்ணடித்து சென்று விட்டாள் மித்ரா. அதைப் பார்த்த ஷ்யாமிற்குள் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

தொடரும்

Episode # 23

Episode # 25

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.