(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - தாரிகை - 09 - மதி நிலா

series1/thaarigai

 

வருடம் : 2017..

இடம் : கோவை..

கைகளில் முத்து முத்தாக வேர்வை பூத்திருக்க.. பள்ளீச் சீறுடையுடன் கல்லூரி வாசல் முன்னே நின்றிருந்தான் அவன்..

சட்டைப் பாக்கெட்டில் வைத்திருந்த போனிலிருந்து பீப் ஒலி கேட்க.. உடல் முழுவதும் வேர்க்கத்துவங்கியது அவனுக்கு..

சுற்றுயும் தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று நோட்டம் விட்டவனது கைவிரல்கள் தானாக பாக்கெட்டிற்குள் சென்று போனை கைப்பற்றிக்கொண்டது..

திரையில் டூ மெசேஜஸ் ரிசீவ்ட் என்றிருக்க.. ஓன்றை ஓப்பன் செய்திருந்தான் அவன்..

“9132456756.. கவின்.. எம் பி பி எஸ்.. தேர்ட் இயர்..”

நேராக கல்லூரிக்குள் நுழைந்தான் அவன்..

அவனது செயல்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கல்லூரி வாட்ச்மேனிற்கு சந்தேகம் வர.. அவன் முன்னேறும் முன்னே தடுத்திருந்தார் அவர்..

“யார்டா நீ..?? இங்க என்ன பன்ற..??”, அவனைக் கூர்மையாக பார்த்துக்கொண்டே அவர் கேட்க..

தூக்கிவாறிப்போட்டத்து அவனுக்கு..

“நான் வினோத்.. என் அண்ணா இங்க தான் காலேஜ் படிக்கறாங்க.. அவங்களைப் பார்க்க வந்தேன்..”

“உன் அண்ணா பேர் என்ன..?? என்ன படிக்கறாங்க..??”, சந்தேகமாகக் கேட்டார் வாட்ச்மேன்..

“பேரு.. கவின்.. எம் பி பி எஸ்.. தேர்ட் இயர்..”

“கவினா..??”, நெற்றி சுறுங்க யோசித்தவர், “கவினுக்கு கூடப் பிறந்தவங்க யாரும் இல்லையே.. பொய் சொல்லாம சொல்லு யாரு நீ..??”, கொஞ்சம் கடுமையாக..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவரின் கேள்வியில் அவன் விழிகள் அலைப்பாய்ந்து அவனின் பயத்தை அப்பட்டமாக எடுத்துறைக்க.. சந்தேகம் வலுப்பெற்றது அவருக்கு..

மீண்டும் யார் நீ என்று அவர் கேட்க..

“நான் அவரோட சித்தி பையன் அண்ணா..”, இன்ஸ்டன்ட்டாக பொய்யுறைத்தான் அவன்..

அவனை நம்பவும் முடியாமலும்.. நம்பாமல் இருக்கமுடியாமலும்.. அவனை கூர்ந்து பார்த்தவர்.. அவனின் ஸ்கூல் யூனிபார்மைக் கண்டு, “ஸ்கூல் இல்லையா..??”, அவனை மீண்டும் ஆராய்ந்தபடியே..

“கரெஸ்பாண்டன்ட் இறந்துட்டாங்க அண்ணா.. சோ ஸ்கூல் லீவ்..”, என்றவன், “கவின் அண்ணாவைப் பார்க்கனும்..”, என்று சொல்ல.. தனது போனிலிருந்தே கவினுக்கு அழைத்திருந்தார்..

ப்ரேக் டைமில் தனது போனுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்த கவினுக்கு வாட்ச்மேனிடமிருந்து அழைப்பு வர..

அதை அட்டென்ட் செய்தவன், “சொல்லுங்க அண்ணா..”, என்றிருந்தான்..

“கவின்.. உன்னைப் பார்க்க உன் தம்பி வினோத் வந்திருக்கான்.. ப்ரன்ட் கேட்டுக்கு வா..”

“வினோதா..?? அவன் எதுக்கு இங்கே..??”, யோசிப்பது போல் பாவனை செய்தவன், “ஒரு அஞ்சு நிமிஷம் அண்ணா.. வந்திடறேன்..”, என்றபடி போனை வைக்க..

“ஒன்னும் பிரச்சனை இல்லையே..”, அருகில் பரபரப்புடன் அமர்ந்திருந்த பிரஜித்..

“இதுவரைக்கும் இல்லைன்னு தான் நினைக்கிறேன் பிரஜித்.. நாம் சீக்கிரம் ப்ரன்ட் கேட்டிற்கு போக வேண்டும்..”

“ஓ.. அந்தப் பையன் வந்துட்டான்னா..??”

ஆம் என்பதாய் தலையசைத்த கவின்.. பிரஜித்துடன் விரைந்து ப்ரன்ட் கேட்டிற்கு சென்றிருந்தான்..

நீலமும் வெள்ளையும் கலந்த செக்ட் ஷர்ட்டும் நீல நிற பேன்ட்டும் அணிந்துகொண்டு வாட்ச்மேனிடம் பேசிக்கொண்டிருந்தவனைக் கண்டதும் புரிந்துவிட்டது இருவருக்கும்..

தங்களைப் பார்க்கவந்தது இவன் தான் என்று..

கவினை கண்டதும், “உன் அண்ணா வந்தாச்சு..”, வாட்ச்மேன் சொல்ல சங்கடமான பார்வை அவனிடமிருந்து..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.