(Reading time: 9 - 17 minutes)

தன்னை இயல்பாக காட்டிக்கொண்ட கவின், “வினோ.. இவ்ளொ நேரமா வர..??”, லேசாக அவனை கடிந்துகொள்வதுபோல் நடித்தான்..

அவன் நடிப்பது புரியாது, “ட்ராபிக் அண்ணா..”, என்று இயபாக வினோத் பதில் சொல்ல.. கொஞ்சம் நஞ்ச சந்தேகமும் விட்டுப்போயிருந்தது வாட்ச்மேனிற்கு..

“நான் கேட்ட நோட் எடுத்துட்டுவந்தாச்சா..??”, கவின் கேட்க ஆமென்று தலையசைத்தான் வினோத்..

“தாங்க்ஸ்டா..”, என்று வினோதிடம் சொன்னவன் வாட்ச்மேனிடம், “அண்ணா.. இவனை கான்டீன் வரை கூட்டிட்டு போய்ட்டு வரட்டும்மா..?? மணி இரண்டாகப்போகுது.. இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டான்..”, என்றான் கவின் கரிசனமாக..

“ஒன்னும் பிரச்சனை இல்லை கவின்.. லன்ச் ப்ரேக் முடியறதுக்குள்ள கொண்டுவந்து விட்டுறு..”, என்க..

சரியென்று சொன்னவன்.. வினோதனிடம் திரும்பி வா என்பதுபோல் தலையசைக்க..

நாய் குட்டிபோல் கவினை பின்தொடர்ந்தான் வினோத்..

வினோத்.. வாட்ச்மேன் ரொம்ப கேள்வி கேட்டாரா..??”, பிரஜித் கேட்க..

“ஆமாண்ணா..”, என்றான் வினோத்..

“அவருக்கு உன் மேல் சந்தேகம் எதுவும் இல்லையே..??”

“தெரியல..”

“தெரியலயா..??”, திகைத்தபடி அவன் கேட்க..

“ஆமாண்ணா..”, முழித்துக்கொண்டே சொன்னான் வினோத்..

“வாட்ச்மேன் என்ன கேட்டான் உன்கிட்ட..???”, பொறுமையை இழுத்துப்பிடித்தப்டி பிரஜித் கேட்க..

வாட்ச்மேனிற்கும் தனக்கும் நிகழ்ந்த உரையாடலைச் சொல்லியிருந்தான் வினோத்..

வினோதன் சொல்லச் சொல்ல கவினின் முகம் மாற..

“என்னாச்சு கவின்..??”, கவினின் முகமாறுதளைக் கவனித்தபடி இருந்த பிரஜித் கேட்க..

“இதுக்குத்தான் சின்னப்பசங்களை இதுக்குள்ள இழுத்துவிடவேண்டாம்னு அவன்0கிட்ட சொன்னேன்..”

“சரிதான்.. இனி சின்னப்பசங்க இது மாதிரி எடுத்துட்டு வந்தாங்கன்னா நாம வேண்டாம்னு சொல்லிரலாம்..”

பேசிக்கொண்டே மூவரும் மைதானத்தின் கோடியில் இருக்கும் அந்த இடிந்த இடத்தை அடைந்துவிட..

“வினோத்.. பேக் எங்க..??”, இது கவின்..

தனது பேகிலிருந்து கவின் கேட்டதை வினோத் எடுத்துக்கொடுக்க.. அதை தனது பாண்ட் பாக்கெட்டில் சேமித்திருந்தான் அவன்..

“வினோத்.. நீ இனி இந்த மாதிரி வேலை எல்லாம் பார்க்கக்கூடாது..”, எச்சரிக்கையாக கவின் சொல்ல..

இவன் என்ன சொல்கிறான் என்பது போல் பார்த்துவைத்தான் வினோத்..

“புரியுதா..??”, பிரஜித் அதட்ட..

“அண்ணா.. நான் இது செய்யலனா.. எனக்கு இனி இதெல்லாம் தரமாட்டாங்க அந்த அண்ணா..”

“எது தரமாட்டாங்க..??”, புரியாமல் கவின் கேட்க..

“இதுதான்.. இந்த மருந்துதான்..”, முதல்கட்ட அதிர்ச்சி இரு இளைஞர்களுக்கும்..

“இது எதுக்கு உனக்கு..??”, என்று பிரஜித் வினவ..

“உங்களைப் போல் நானும் இதை உட்கொள்கிறேன்..”, என்றிருந்தான் வினோதன்..

“வினோத்..”, இருவரின் குரலும் அதிர்ந்து போய் ஒலிக்க.. சற்று பின்னடைந்தான் வினோதன்..

“என்ன சொல்ற நீ..?? இதைப் போய் நீ யூஸ் செய்கிறாயா..??”, அதிர்ச்சியில் இருந்து மீளாமல் கவின் திரும்பத் திரும்ப அந்தக் கேள்வியைக் கேட்க..

ஆம் என்பதாய் விடை கிடைத்தது..

இருவருக்குள்ளும் அத்தனை கோபம் வினோதின் பதிலைக் கேட்டு..

அவனை அடித்துவிடும் நிலையில் இருந்தான் பிரஜித்..

அவனைத் தடுத்த கவின் வினோதனிடம் திரும்பி, “இது உடம்புக்கு கெடுதல்.. தெரியுமா..??”, என்று வினவ..

“தெரியும்ன்னா.. ஆனால் இது இல்லாமல் என்னால் இருக்க முடியலயே..”, பாவமாக அவன் சொல்ல..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.