(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 27 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

சுடரொளி  சிரிக்கவே மாட்டாளா? என்று நினைத்திருந்த மகிழ்வேந்தன், இப்போது அவளுக்கு சிரிக்கக் கூட தெரியுமா? என்றப்படி அவளை பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது எதற்காக அவள் சிரிக்கிறாள்? என்பதும் அவனுக்கு புரியவில்லை. அவனது ரசனை பார்வையை நிறுத்தியவன்,

“ஹலோ ஸ்டாப்.. ஸ்டாப்.. இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்கிற? ஒழுங்கா சொல்லிட்டு சிரி..” என்று கேட்டான்.

அதன்பின்பும் கூட அவள் சிரித்தப்படியே நின்றிருக்க, அவன் அவளை செல்லமாக முறைக்கவும்,சிரிப்பை அடக்கியப்படியே அவள் பேச ஆரம்பித்தாள்.

“ட்ரீட்னா நாங்க ப்ரண்ட்ஸ்ல்லாம் பொதுவா  ட்ரிங்க்ஸ் பார்ட்டி தான் வைப்போம், உங்களுக்கும் அது ஓகேன்னா எனக்கு பிரச்சனையில்லை என்ன சொல்றீங்க..” என்று அவள் கேட்கவும் புரியாமல் பார்த்தான். பின் அவள் நகைச்சுவையாக சொல்கிறாள் போலும் என்று நினைத்துக்  கொண்டவன்,

“ம் ட்ரீட் கொடுக்காம இருக்க இப்படியெல்லாம் சமாளிப்பா.. நான் ட்ரிங்க்ஸ் பார்ட்டிக்கு ஓகேன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவ..?’

“எனக்கு ஒரு கம்பெனி கிடைச்சிருக்குன்னு சந்தோஷப்படுவேன், ஹலோ நான் சும்மா விளையாட்டுக்கு சொல்றதா நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா? நிஜமா தான் சொன்னேன்.. உங்களுக்கும் ஓகே வா? நீங்க நிஜமாவே தண்ணி அடீப்பீங்களா?”

“ப்ரண்ட்ஸ் வற்புறுத்தவே ஒருமுறை கொஞ்சமா சாப்பிட்டேன்.. பர்ஸ்ட் டைம்ங்கிறதால வீட்டுக்கு வந்து வாமிட் பண்ணிட்டேன்.. அதுல அம்மாக்கும் அப்பாக்கும் தெரிஞ்சுப்போச்சு.. அம்மாவாச்சும் திட்டினாங்க, அட்வைஸ் பண்ணாங்க.. ஆனா அப்பா ரெண்டுநாள் என்கூட சரியா பேசவே இல்ல.. என்னால அதை தாங்கிக்கவே முடியல.. அப்பாக்கிட போய் சாரிக் கேட்டேன்.. அப்போ கூட அப்பா என்ன திட்டல..

எனக்கும் இப்படி சில ப்ரண்ட்ஸ் இருந்திருக்காங்க, என்னையும் இது போல வற்புறுத்தியிருக்காங்க.. அப்போ நான் இதுபோல சரின்னு வாங்கி குடிச்சிருந்தா, இன்னைக்கு இந்த  பொஷிஷன்ல இருந்திருக்க மாட்டேன்.. இன்னைக்கு கொஞ்சமா ஆரம்பிக்கும் பழக்கம் நாளைக்கு அதிகமாகலாம், எல்லோரும் மொடா குடிகாரங்க கிடையாது, இன்னைக்கு இவ்வளவு தான் குடிக்கணும்னு கட்டுப்பாட்டோட இருக்கவங்களும் இருக்காங்க.. ஆனா அப்படி கூட குடிக்க என்ன அவசியம் இருக்கு சொல்லு? அதனால ஏதாச்சும் நன்மை இருக்கா.. அதுவும் படிக்கிற காலத்துல இந்த பழக்கம் தேவையான்னு யோசிச்சிக்க, அப்புறமும் இதெல்லாம் தப்பில்லன்னு தோனுச்சுன்னா, உன்னோட  விருப்பம், அப்புறம் உன்னை நான் எதுவும் சொல்ல மாட்டேன்னு சொன்னாரு..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதுக்குப்பிறகு அதை நான் தொட்டுப் பார்த்தது கூட கிடையாது.. சரி நீ சொல்லு, நீ தண்ணி அடிப்பேன்னு சொன்னது பொய் தானே..”

“நான் சொன்னது பொய் இல்ல மகிழ்  உண்மை தான்.. உங்களை போல தான் ப்ரண்ட் வற்புறுத்தவே பர்ஸ்ட் டைம்  கொஞ்சமா சாப்பிட்டேன்.. உங்களுக்கே தெரியும் அங்க கேர்ள்ஸ் குடிக்கிறதெல்லாம் தப்பு கிடையாது.. உங்களுக்கு அட்வைஸ் செஞ்சது போல எனக்கு அட்வைஸ் செய்றதுக்கும் ஆள் கிடையாது.. பர்ஸ்ட் டைம் தண்ணி அடிச்சப்ப எங்கேயோ பறக்கற ஃபீல் இருந்துச்சு.. என்னவோ மனசுக்குள்ள இருக்க கஷ்டமெல்லாம் எங்கேயோ  தொலைஞ்ச்சு போயிட்டது போல தோனுச்சு.. அதுல இருந்து ரொம்ப சந்தோஷமா ஃபீல் செய்றப்பல்லாம் இப்படி ட்ரீட்ங்கிற பேர்ல ப்ரண்ட்ஸ் கூட பார்ட்டிக்கு போவேன். அதுக்காக நான் எப்போதும் பார்ட்டின்னு சுத்திக்கிட்டு தண்ணியடிச்சிக்கிட்டு இருக்கறதா நினைச்சுக்காதீங்க.. நான் சந்தோஷமா ஃபீல் பண்றதே ரேர் தான், அந்த நேரம் எந்த கவலையும் மனசுல இல்லாம வெறும் சந்தோஷத்தை மட்டும் எஞ்சாய் பண்ணணும்னு தோனும்.. அதான் நான் அப்போ கொஞ்சமா குடிப்பேன்..” என்று விளக்கமாக கூறினாள்.

ஆண்கள் குடிப்பதே அவர்கள் குடும்பத்தில் தவறாக பார்க்கப்படும், இவனாவது குடித்துவிட்டு அவன் தந்தை முன்  தைரியமாக நின்றிருக்கிறான். ஆனால் அறிவழகன் அவன் தந்தைக்கு பயந்து இதுவரைக்கும் மதுவை தொட்டு பார்த்தது கூட இல்லை.

பெண்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அனாவசியமாக வெளியில் செல்வதை கலையரசியும் முத்தரசி பாட்டியும் விரும்பமாட்டார்கள். இவள் என்னடா என்றால் பார்ட்டிக்கு செல்வேன், மது அருந்துவேன் என்று கூறிக் கொண்டிருக்கிறாள். இதில் அவனையும் உடன் வருகிறாயா என்று கேட்கிறாள். நாம் நினைத்தது போல் இவள் இல்லை என்று இரண்டு நாட்கள் முன் நாம் நினைத்தது தவறோ என்பது போல் இப்போது அவன் நினைக்க தொடங்கிவிட்டான். மனதில் இருந்த குழப்பத்தில், அதற்கு மேல் அவளுடன் பேச தொன்றாமல்,

“போலாமா?” என்றுக் கேட்டான்.

அதற்கு அவளும் சரியென்று தலை ஆட்டினாள். இது போன்ற விஷயத்தை அவனிடம் சொல்லலாமா? அவன் தன்னை தவறாக நினைக்க மாட்டானா? அதனால்  இருவருக்குள்ளும்  உருவாகியிருந்த நட்பு பாதிக்கபடுமா? என்றெல்லாம் அவள் நினைத்து பார்க்கவில்லை. என்னவோ மகிழுடனான இந்த நட்பில் அவளுக்கான பழக்கவழக்கங்களை மறைக்க வேண்டுமென்று அவளுக்கு தோன்றவில்லை. அதனால் அவன் தவறாக நினைத்து அவளை  ஒதுக்கினாலும் அதற்கு கவலைப்படுவாளா? என்றும் இப்போது யோசித்து பார்க்கும் அளவுக்கு அவனை அவ்வளவு நெருக்கமாக நினைக்கிறாளா? என்றும் தெரியவில்லை.

இதைப்பற்றியெல்லாம் எந்த கவலையுமில்லாமல் அவனுடன் சென்று, அவனும் அறிவும் சேர்ந்து நடத்தும் ரெஸ்ட்டாண்ட்டைல் சிறிது நேரம் இருந்தாள். பின் அங்கிருந்து அவளை அழைத்துக் கொண்டு சென்ற மகி அவளை அவளது வீட்டில் விட்டுவிட்டு வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.