Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

Friends, Chillzee KiMo is all set to be released 👏👏! Please visit Chillzee KiMo website - www.kimo.chillzee.in to learn about the subscription plans and other details.

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 19 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 19 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

சோக்கின் வருத்தம் தாள முடியாமல் மாமாவிடம் பேசுவதாய் சொல்லிவிட்டாலும், தான் பேசலாமா? கூடாதா? என்ற தயக்கம் இருந்தது அவளிடம். தான் ஏதேனும் அதிகப்படியான உரிமையை எடுத்துக்கொள்வதாய் அவர் நினைத்து விட்டால்?

கதிரின் லட்சியம் கனவு என்றெல்லாம் சொன்னானே! அந்த அசோக்

“டேய் கரடி அவ்வளவு கனவு கண்டவன் அப்புறம் ஏன் டா இப்படி அதை அம்போன்னு விட்டுட்ட?” என்று யோசித்தவளுக்கு தலை வலி எடுக்க டீ பருக வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“வர வர தானும் அதிகமாக இந்த டீக்கு அடிமையாகி கொண்டிருக்கிறோம்” என்று சலித்தவள் வேலைக்கார பெண்மணியிடம் டீ கேட்டு அதை ரசித்து பருகியபின், இரவு எட்டு மணிக்கு மொட்டை மாடிக்கு சென்றாள்.

நேராக நிமிர்ந்து அமர்ந்தவள் கண்களை மூடி "அப்பா, என்னை சுத்தி நடக்கிற எதையும் புரிஞ்சிக்கிறதுக்கு கூட எனக்கு அவகாசம் கிடைக்க மாட்டேங்குது. யோசிக்காம அசோக்கிற்கு சரி சொல்லிட்டேனோன்னு தோணுது. இப்போ நான் என்ன பண்ணனும் பா? புரியல, ஆனா நான் பேசுறேன்னு சொன்னதும் அவர் முகத்துல அவ்வளவு நம்பிக்கையை பார்த்தேன். அசோக் சாருக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்கன்னு கேட்கிறேன் பா, என்னால உங்களை நேர்ல பார்த்து இதை எல்லாம் பேச முடியல, உங்க கண்ணுல தெரியும் வலியை என்னால பார்க்க முடியாது. அம்மா என்னை பார்த்தாலே அழுதுடுறாங்க,

நிச்சயம் வருவேன் பா. உங்க இளம்பிறை நீங்க ஆசைப்பட்ட மாதிரி பட்டதாரியா உங்க முன்னாடி நிப்பேன்.என் வாழ்க்கை சீரழியல பா, கொஞ்சம் சிதைந்திருக்கு. என்னால சரி செய்ய முடியும் பா.

கதிர் ரொம்ப நல்லவர் பா. எனக்கு நம்பிக்கை இருக்கு, எப்படின்னு தெரியல ஆனா கண்டிப்பா நான் நல்லா வாழ்வேன்னு நம்புறேன்” என்று மானசீகமாக அவள் தந்தையோடு பேச, முகம் சூடாவது போல் உணர்ந்தாள்.

சிறிது நேரம் மொட்டை மாடியில் உலாவியவள் மறு நாள் கல்லூரி முடித்து வந்ததும் இது குறித்து மாமாவிடம் பேசவேண்டும் என்று முடிவெடுத்தாள்.

மறு நாள் காலை கல்லூரி கிளம்பிய போதே “மாமா ஈவ்னிங் நீங்க பிரீயா இருப்பீர்களா? உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”என்று அவள் பீடிகை போட

“என்ன விஷயம் மா? சொல்லு” என்றார் அவர்.

“இல்ல மாமா, இப்போ வேண்டாம், ஈவ்னிங் வந்து பேசுறேன் உங்க ஆபிசுக்கு வரட்டுமா?” என்று கேட்க

“வேண்டாம் மா, நான் இன்னிக்கு ஆறு மணிக்கு வந்திடுறேன் பேசலாம்” என்றார் புருவங்கள் முடிச்சிட

“தேங்க்ஸ் மாமா வரேன்”

என்றவள் அவளுக்கென சண்முகம் கொடுத்திருந்த அலைபேசியில் அசோக்கை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க, இளம்பிறையின் ஆர்வத்தை கண்டு புன்னகைத்தான் அசோக்.

நிச்சயம் தனது எண்ணம் நிறைவேறும் என்ற ஆசை அவனுக்கு. 

அவனையும் வர சொல்லியிருந்தாள் இளம்பிறை.

அவள் சொன்னது போல் ஆறுமணிக்கு அசோக் வரவும் இருவரும் அவரின் அறைக்கு சென்றனர்.

அசோக்கை கண்டதும் இவள் வந்திருக்கும் காரணம் புரிந்து விட்டது சண்முகத்திற்கு.

மிரட்டி, உருட்டி அடக்கும் நிலையை தாண்டியிருந்தான் கதிர். அன்றாடம் கம்பெனிக்கு வர வேண்டியது, தன் நண்பர்களோடு குடிக்க வேண்டியது. அசோக் “தவறு செய்துவிட்டோமோ”என்று எண்ணி அவர்களிடம் சண்டையிட நண்பர்கள் சுரேஷ் மற்றும் ராஜேஷ் தங்களின் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க அருண் அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்க எண்ணினான்.

மற்றவர்கள் வாராத போதிலும் அருணும், கதிரும் மது அருந்த பொது இடங்களுக்கு சென்றனர். அருணுக்கு வாரி வழங்கினான் கதிர். அவனோடு இப்போது சில பரிட்சயம் இல்லாத நபர்களும் சேர்ந்து கொள்ள, மெல்ல மெல்ல அழிவின் பாதையில் சென்று கொண்டிருந்தான் கதிர்.

அருணை அழைத்து மிரட்டிக்கூட பார்த்துவிட்டார் சண்முகம் ஆனால் ருசி கண்ட பூனையான அருண் அவர் மிரட்டலுக்கு பதில் மிரட்டல் விடுத்தான். கதிரின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் இடத்தில் தான் இருப்பதாய் சொன்னான் அவன்.

அப்போது தான் KJ நிறுவனத்தின் வரவு செலவுகளை இவர் பார்வைக்கு கொண்டு வந்தான் அசோக். தன்னால் ஏதும் செய்ய இயலாத நிலையில், கதிரின் இந்த நிலைக்கு தானும் காரணம் என அவன் வருந்த, முதல் வேலையாய் நிறுவனத்தை ஜனனியின் பெரியப்பா பெயருக்கு மாற்றிவிட அழைத்த போது அதை ஏற்க மறுத்துவிட்டார் அவர்.

ஜனனியின் மரணத்திற்கு பிறகு இருவரும் ஆன்மீகத்தில் தங்களை முழுதாய் அர்ப்பணித்து விட, பொருள் மீதெல்லாம் தங்களுக்கு நாட்டம் இல்லை என்றும் அதை அவர் விருப்பப்படி செய்து கொள்ள சொல்லிவிட்டதால்  என்ன செய்வதென்று யோசித்தவர் கதிர் அழித்தது போக மீதி இருந்த அனைத்தையும் குடும்ப வக்கீல் மூலம் யாதொரு சிக்கலும் இன்றி  தன் பெயரில் மாற்றி எழுதி வாங்கினார் சண்முகம். அதை உணரும்  நிலையில் கூட கதிர் இல்லை. 

About the Author

Prama Subbiah

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 19 - பிரேமா சுப்பையாsaaru 2018-09-17 16:58
I'lla cute baby
Nice and cute epo
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 19 - பிரேமா சுப்பையாmahinagaraj 2018-09-17 11:23
ரொம்ப அருமையா இருக்கு மேம்.... :clap: :hatsoff:
இளாவை ரொம்ப அழகா வடிச்சுயிருக்கீங்க.. :hatsoff:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 19 - பிரேமா சுப்பையாPadmini 2018-09-16 17:35
interesting update Prema!! :clap: missing Kathir... Eagerly waiting for the next update :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 19 - பிரேமா சுப்பையாmadhumathi9 2018-09-16 08:26
wow really nice epi.ilambirai podum plankku oru peria :clap: mudikka vendum endra ennam ellorukkum vanthu vidumpola (y) :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top