(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 02 - ஸ்ரீ

Vizhi vazhi uyir kalanthavale

“ஜில்லென்று ஒரு கலவரம்

ஹே ... ஹே ...

நெஞ்சுக்குள் இந்த நிலவரம்

ஹே ...ஹே ...

பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம்

ஹே ...ஹே ...ஹே ...ஹே

காதல் ஒரு புறம்

கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம்

என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம்

 

தூறலின் சாரலில் நான் நின்ற போது

வானவில் ஓவியம் நான் கண்டதுண்டு

உன் கண்கள் தரும் வண்ணங்களில்

என்னுள் எழும் எண்ணங்களில்

நான் உறைந்து போனேன் இன்று

சிநேகமாய் சிரித்தவள் அவன் முகம் நோக்க அவனே பேச்சை ஆரம்பித்தான்.

“நேத்து உங்க ப்ரோக்ராம்க்கு வந்திருந்தேன்..சச் அ ப்ரிலியண்ட் பெர்பார்மன்ஸ்..அப்போ தான் உங்க நேம் தெரிஞ்சுது..”

“ஓ.தேங்க் யூ சோ மச்..நீங்களும் இங்க டியூட்டரா இருக்கீங்களா?”

“நோ வே இவ்ளோ அழகான கலையெல்லாம் எல்லாருக்கும் வந்திடுமா என்ன பட் கண்டிப்பா ஒரு நல்ல ரசிகன்.ஐ அம் அ டாக்டர் இங்க அடையார்ல தட் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல தான் டீயூட்டி பாத்துட்டு இருக்கேன்.”

“தேட்ஸ் சோ நைஸ்..டாக்டரா இருந்து டான்ஸ்ல ஆர்வம் இருக்குறது ரொம்பவே பெரிய விஷயம் தான்..”,என்றவள் புன்னகைத்தாள்.

“அக்சுவலா ஒரு சின்ன ஆப்ளிகேஷனோட தான் வந்துருக்கேன்..இஃப் யூ டோண்ட் மைண்ட் ஒரு பைவ் மினிட்ஸ் பேசலாமா?”

அவன் பார்வையின் கண்ணியம் கொடுத்த நம்பிக்கையில் சம்மதமாய் தலையசைத்தவள் அங்கிருந்த கேன்டீனிற்கு அழைத்துச் சென்றாள்.

இருவருக்குமாய் காபி வாங்கியவாறு அமர்ந்தவன் அதை சுவைத்தவாறே பேச்சை தொடங்கினான்.

“நா வளர்ந்ததெல்லாம் ஒரு ஆர்பனேஜ்ல தான் சோ இப்பவும் அங்க பசங்களுக்கு எஜுகேஷன் வைஸ் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன்..லைக் டியுஷன் டீச்சர்ஸ் அந்த மாதிரி..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சோ இப்போ எனக்கு தெரிஞ்சு ஒரு அஞ்சு இல்ல ஆறு பசங்க டான்ஸ்ல இன்ட்ரஸ்டட்டா இருக்காங்க..அவங்களுக்கு நீங்க பரத நாட்டியம் வந்து கத்து கொடுக்க முடியுமா..அத்தனையும் பெண் குழந்தைங்க தான் ஒரு வேளை இதுல அவங்க ப்யூச்சர் ஆரம்பிச்சா கூட நல்ல விஷயம் தான..அதான் நீங்க அங்க வந்து சொல்லி கொடுக்க முடியுமானு கேட்க வந்தேன்..ஸ்லரி லா ப்ரச்சனை இல்லை ரிசனபிளா கண்டிப்பா என்னால கொடுக்க முடியும்.”

“இது உண்மையாவே ரொம்ப நல்ல விஷயம் மிஸ்டர் திவ்யாந்த்..பணம் எல்லாம் விஷயமே இல்ல..கண்டிப்பா இந்த இனிஷியேட்டிவ் ரொம்ப நல்ல விஷயம்..கண்டிப்பா நா வந்து சொல்லிதரேன்..ஆர்பனேஜ் எந்த லொக்கேஷன்ல இருக்கு?”

“தேங்க் யூ சோ மச் கேட்டவுடனே சம்மதிச்சதுக்கு..ஹோம் இங்க பெசண்ட் நகர்ல தான்.பட் ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல டிரான்ஸ்போர்டேஷன் அரேண்ஜ் பண்ணிக்கலாம்..”

“ஐயோ அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.அக்சுவலா நா ஹாஸ்டல் ஷிப்ட் பண்ற ப்ளான்ல இருக்கேன்.அதனால தான் லொக்கேஷன் தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி பாத்துக்கலாமேனு கேட்டேன்..”

“ஓ..பேரண்ட்ஸ் இங்க இல்லையா நேட்டிவ் எங்க உங்களுக்கு?”

“அப்பாஅம்மாக்கு சொந்த ஊர் கோயம்புத்தூர் பக்கத்துல பட் செட்டில் ஆனது துபாய்ல..எனக்கு எப்பவுமே தமிழ்நாட்டு மேல ஒரு தனி க்ரேஸ் உண்டு அதனால காலேஜ் முடிச்சவுடனே அப்பாகிட்ட அடம்பிடிச்சு இங்க வந்துட்டேன்.டான்ஸ் தான் என் பேஷன்.இதான் இப்போ இங்க இப்படி..”,எனத் தோள் குலுக்கினாள்.

“துபாய் பொண்ணா நீங்க சத்தியமா நம்ப முடில..பட் நல்ல சாய்ஸ் ஆப் ப்ரொபஷன்.அண்ட் ஹாஸ்டலா தான் பாக்குறீங்களா இல்ல பிஜி மாதிரி இருந்தா ஓ.கே வா?”

“ம்ம் யா அப்படி இருந்தாலும் ஓ.கே தான்..”

“நா முன்னாடி ஸ்டே பண்ணிருந்த வீட்டை இப்போ பிஜி யா தான் நடத்திட்டு வராரு ஹவுஸ் ஓனர் ஹோம்க்கு ரொம்ப பக்கமும் கூட..வேணும்னா இந்த வீக்கெண்ட் போய் பாருங்க..பிடிச்சா சொல்லுங்க நா ஓனர்கிட்ட பேசுறேன்.இந்தாங்க என்னோட கார்ட் அண்ட் அந்த வீட்டு அட்ரெஸ்...”

“தேங்க் யூ சோ மச் திவ்யாந்த் நா பாத்துட்டு உங்களுக்கு அப்டேட் பண்றேன்…சரி டைம் ஆச்சு நா கிளம்புறேன் பாக்கலாம்..”,என்றவளோடு கிளம்பிச் சென்றவன் புன்னகைத்து விடைப் பெற்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.