(Reading time: 11 - 22 minutes)

தன் இருசக்கர வாகனத்தை அடைந்தவளுக்கு நினைவுகள் இதழோர இனிமையைத் தர அப்படியே வண்டியை நகர்த்தி கடற்கரை நோக்கி பயணித்தாள்.

சற்று நேரம் கடற்கரையில் தனிமையை ரசித்தவள் நேரமாவதை உணர்ந்து கிளம்பி வீட்டிற்குச் செல்ல சிந்தாமணி வாசலிலேயே காத்திருந்தார்.

“என்ன பாப்பா இது லேட் ஆகும்னா ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்ல மாட்டியா?”

“சாரி சிந்தாம்மா..நேரம் போனதே தெரியல..பீச்க்கு போனாலே இப்படிதான் ஆகுது”

“சரி தான்..வாம்மா வந்து சாப்பிடு எல்லாம் எடுத்து வைக்குறேன்..”

இரவு உணவை உண்ண அமர்ந்தவள் அமைதியாய் சாப்பிட மனம் பொறுக்காமல் அவரே வாய் திறந்தார்.

“தம்பி உன்னை விசாரிச்சான் பாப்பா..”

“ம்ம்..உங்க டாக்டர் எப்படி இருக்காரு?”

“எப்படி நல்லாயிருப்பான் நீ இங்க இருக்கும் போது..ஏன் இப்படி இரண்டு பேரும் அடம் பிடிக்குறீங்க..அதான் இப்போ எல்லாமே சரி ஆய்டுச்சுல..நீயாவது போய் பேசலாம் தான?”

“ம்ம் எல்லாம் சரி ஆய்டுச்சானு தெரில சிந்தாம்மா..எங்க காதல் எங்க ஈகோ எங்க கோபம் எல்லாமே பழைய நிலைமைக்கு வந்துடுச்சானு தெரில..ஏதோ ஒரு தயக்கம் பேசுறதுக்கு..ரொம்ப படுத்தியாச்சு அவரை.. அதை அத்தனை சீக்கிரம் மறக்க முடில..போகட்டும்..காலம் பதில் சொல்லும் அத்தனைக்கும்..”,என்றவள் எழுந்து சென்று விட்டாள்.

அங்கு தன் வீட்டிற்கு வந்த திவ்யாந்த் கிச்சனில் பார்வையிட பத்து நாளைக்கு வேண்டிய தொக்கு பொடி என ஓரளவு செய்து வைத்து சென்றிருந்தார் சிந்தாமணி அம்மா..முகத்தில் புன்னைகை அரும்ப மாவை எடூத்து தோசை வார்த்து உண்ண ஆரம்பித்தவனுக்கு வெண்பா முதன் முதலாய் இங்கு வந்தது நினைவிற்கு வந்தது.

அவனிடம் கூறியபடி அந்த வார இறுதியில் மாலை வேளையில் பெசண்ட் நகரில் இருந்த அந்த வீட்டிற்குச் சென்றாள் வெண்பா.அழகிய தனி வீடாய் முன் பகுதியில் சிறிய தோட்டம் போன்ற அமைப்போடு நன்றாய் இருந்தது.உள்ளே சென்று அழைப்பு மணியை அழுத்தச் சென்ற நேரம் மின்சாரத்தடை ஏற்பட மொத்தமாய் இருட்டி விட்டிருந்தது.

அப்போது தான் கதவை தடவிப் பார்த்தவளுக்கு அது வெளியே பூட்டியிருப்பது புரிந்தது.என்ன செய்வதென புரியாமல் கிளம்ப எத்தனித்த நேரம் அடைமழை கொட்டித் தீர்க்க ஆரம்பித்தது.வரும் போதே சற்று இருட்டிக் கொண்டு இருந்ததுதான் சரி சென்னை மேகத்தை அத்தனை எளிதில் நம்ப வேண்டாம் என தைரியமாய் கிளம்பி வந்தாள்.

இப்போது காதை கிழிக்கும் காற்றோடு இந்த மழையும் இருட்டும் சற்றே பயத்தை கொடுத்திருந்தது அவளுக்கு. மொத்தமாய் குடியிருப்பு பகுதியாய் இருக்க சட்டென ஆட்டோ கூட கிடைக்குமென தோன்றவில்லை.என்ன செய்வதென புரியாமல் விழித்தவள் சட்டென நினைவு வந்தவளாய் மொபைல் வெளிச்த்தில் பைக்குள் இருந்து அவன் கொடுத்த கார்டை எடுத்து திவ்யாந்த் நம்பருக்கு அழைத்தாள்.

அழைப்பு நிற்கப் போகும் நேரம் ஏற்றவன்,”ஹலோ திவ்யாந்த் ஹியர்”

“ஹலோ டாக்டர் ஐ அம் வெண்பா..நாட்டியாலயா டான்ஸ் டியூட்டர்..”

“ஹே ஹாய் சொல்லுங்க..வீட்டை பாத்துட்டு வந்தீங்களா?”

“அக்சுவலா அங்க தான் இருக்கேன்.நல்ல மழை பவர் கட் வேற அதான் என்ன பண்ணணு தெரில..இங்க நய்பர்ஸ் யாராவது உங்களுக்கு தெரியுமா?மழை நிக்குற வர ஸ்டே பண்ணிட்டு கிளம்பிடுவேன்.”

“ஓ..நோ..சரி ஒரு15 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க..ஐ வில் பி தேர்..டோண்ட் பி பேனிக் ஓ.கே..நா கிளம்பிட்டேன்.”

அவள் தைரியமாய் பேச நினைத்தாலும் அதையும் மீறிய பயம் சற்றே தெரிந்ததுதான் அவனுக்கு.அதனாலேயே அவளை மேலும் பேச விடாமல் கிளம்பியிருந்தான்.

கூறியபடியே அடுத்த பதினைந்து நிமிடத்தில் வீட்டு வாசலை அடைந்தவன் டார்ச் உதவியோடு அவளைத் தேட போர்டிகோவில் ஓர் ஓரமாய் அமர்ந்திருந்தாள்.

“சாரி உங்களை தொந்தரவு பண்ணிட்டேன்..”

“தட்ஸ் ஓ.கே மிஸ் வெண்பா..நல்ல வேளை எனக்கு கால் பண்ணீங்களே சரி முதல்ல வாங்க எங்க வீட்டுக்கு இங்க பக்கத்துல தான்.”

“இல்ல பரவால்ல.என்னை இங்க மெயின் ரோடுல விட்டீங்கனா போதும்..”

“கமான் மிஸ் வெண்பா..ஆல்ரெடி ரொம்ப நேரம் குளிர்ல இருக்கீங்க வந்து ஒரு காபி சாப்பிட்டு கிளம்புங்க வாங்க..”,என்று காரை நோக்கிச் சென்றான்.

வீட்டை அடையும் வரை ஒன்றும் பேசாமலே வந்தாள்.உள்ளே நுழைந்தவன்,

“வாங்க உள்ளே வாங்க..சிந்தாம்மா..அவங்க வந்துட்டாங்க..”,என குரல் கொடுக்க சிந்தாணி வெளியே வந்தார்.

“வாங்கம்மா..வாங்க..”

“மேக் யுவர் செல்ப் கம்பர்டபுள் வெண்பா..இதோ வந்துட்றேன்.”

சோபாவில் அர்ந்தவளுக்கு சூடாய் காபி கலந்து கொடுத்தார் சிந்தாமணி.புன்னகையோடு அதை வாங்கிக் கொண்டவள் மெதுவாய் பருக ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.