(Reading time: 11 - 22 minutes)

“அங்க இருந்த பொண்ணு மதியானம் தான் அவ சொந்தகாரங்க வீட்டுக்கு போய்ருக்கா போல.நீங்க எப்போ வரீங்கனு தெரியாததால அவகிட்ட முன்கூட்டியே சொல்லி வைக்கல போல இருக்கும்மா.”

“என்னவிட பெரியவங்க நீங்க ஏன் வாங்க போங்கனு கூப்டுறீங்க..நீ வா னே சொல்லுங்க பரவால்ல..”

ஏனோ அவளை பார்த்ததும் பிடித்துவிட்டது அவருக்கு பதிலுக்கு சம்மதமாய் தலையசைத்தவர் நீ டீவி பாத்துட்டு இரும்மா..பத்தே நிமிஷம் டின்னரே ரெடி ஆய்டும்..”

“ஐயோ அதெல்லாம் வேணாம்மா..நா இப்போ கிளம்பிடுறேன்..”

“அட அதெல்லாம் முடியாது முதல் தடவை வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம போறதா அதுவும் இந்த கொட்டுற மழைல..பேசாம உக்காரும்மா..”

மறுக்கத் தோன்றாமல் டீவீயில் கவனத்தை பதிக்க எண்ணியவள் முடியாமல் நேரத்தை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.அந்த நேரம் அவளருகில் வந்தவன் எதிர் சோபாவில் அமர்ந்தான்.

“ரிலாக்ஸ் வெண்பா..மழை கொஞ்சம் நிக்கட்டும் நானே உங்களை ட்ராப் பண்றேன் கவலை படாதீங்க..”

“அது அகெயின் எதுக்கு உங்களுக்கு சிரமம் பரவால்ல..”

“நோ பார்மாலிடீஸ் ப்ளீஸ்.எங்க பசங்களுக்கு மிஸ் ஆகப் போறீங்க உங்களுக்கு இதுகூட செய்யலனா எப்படி?அதெல்லாம் ஒரு ப்ரச்சனையும் இல்ல.”

லேசாய் புன்னகைத்தவளிடம்,”அவங்க சிந்தாமணி அம்மா.நா வளர்ந்த ஹோம்ல தான் வேலை பாத்துட்டு இருந்தாங்க.எனக்கு அவங்க தான் எல்லாமே அவங்களுக்கும் அப்படிதான்.சோ நா வெளில வந்தப்போ அவங்களையும் அழைச்சுட்டு வந்துட்டேன்.5-6 வருஷமாச்சு அப்படியே போய்ட்டு இருக்கு..”

“ரொம்ப ஆச்சரியமா இருக்கு உங்க பாண்டிங் கேக்குறப்போ இதெல்லாம் அமையுறது ரொம்ப ரேர் தெரியுமா..நா இங்க சென்னை வந்து ரெண்டு வருஷம் ஆகுது.ப்ரெண்ட்ஸ் பெருசா யாரும் இன்னும் செட் ஆகலை.ரூம் மேட்ஸ் அவ்ளோ தான்.மத்தபடி க்ளோஸ் ப்ரெண்ட்டுனு யாரும் இல்ல.

அதனாலயே அப்பப்போ ஹாஸ்டல் மாத்திட்டே இருப்பேன்.பலதரப்பட்ட சூழ்நிலையிலிருந்து வந்த பலதரப்பட்ட மனிதர்கள் சந்திக்குறதுல ரொம்பவே ஹேப்பியா இருக்கும்.

தமிழ்நாடுக்கு போறேன்னு சொன்னவுடனேயே நா சென்னை தான்னு முடிவு பண்ணிட்டேன்.நிறைய கல்ச்சர் நிறைய மக்கள் இல்லையா..பல முகம் கொண்ட சிங்காரச் சென்னை இல்லையா டாக்டர்..”,என அழகாய் புன்னகைத்தாள்.

“ம்ம் உண்மைதான் மிஸ் வெண்பா..”

“நாம கூட ப்ரெண்ட்ஸ் ஆய்ட்டோம்னு தான் நினைக்குறேன் அப்புறமும் ஏன் டாக்டர் இந்த மிஸ் வெண்பாவ விடமாட்றீங்க..வெண்பானே கூப்பிடுங்க..”

“ம்ம் அப்போ நீங்களும் திவ்யாந்த்னே கூப்பிடுங்க ஆர் கால் மீ திவா..ப்ரெண்ட்ஸ் அப்படிதான் கூப்பிடுவாங்க..”

அதற்குள் இரவு உணவிற்காக அழைக்க வந்த சிந்தாமணி அம்மாவிற்கு அவர்கள் இருவரையும் சேர்த்து பார்த்ததில் ஏனோ இனம்புரியா சிறு மகிழ்ச்சி.இருந்தும் ஒன்றும் காட்டிக் கொள்ளாமல் அவர்களை அழைத்துச் சென்று உணவு பரிமாறினார்.

அதன்பின் மழை சிறிதே வெறித்திருக்க திவ்யாந்த் அவளை ட்ராப் செய்வதற்காக கிளம்பினான்.வெண்பா சிந்தாமணி அம்மாவிடம் விடைபெற்று காரில் ஏறிக் கொண்டாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

முதன்முறையாய் ஒரு பெண்ணுடனான தனிமை பயணம் மனம் ஏதோ போன்ற ஒரு அழகு நிலையிலிருக்க வெண்பாவுமே கிட்டதட்ட அதே நிலையில் தான் இருந்தாள்.அதனாலேயோ என்னவோ இருவருமே சில நிமிடங்கள் பேசிக் கொள்ளவில்லை.

அதன்பின் வெண்பாவே பேச்சை ஆரம்பித்தாள்,”என்ன டாக்ட..ஓ சாரி திவா ரொம்ப அமைதியாவே வர்றீங்க..”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல பேஸிக்கலி நா கொஞ்சம் சைலண்ட் தான்.அப்பறம் இந்த ப்ரொஃபஷன் வந்தப்பறம் இன்னுமே ரொம்ப பேச்சு குறைஞ்சுடுச்சு..”

“ஓ அப்போ எனக்கு சுத்த ஆப்போசிட் டைப் நீங்க..”

“ஹா நீங்களே பார்க்க சைலண்டாதான் தெரிஞ்சீங்க..இல்லையா அப்போ?”

“பர்ஸ்ட் டைம் மீட் பண்றவங்ககிட்ட கொஞ்சம் அப்படிதான் பட் கொஞ்சம் பழகிட்டா வாயை கொஞ்சம் மூடுறியா ப்ளீஸ் அப்படிங்குற நிலைமைக்கு போய்டுவேன்.”

“ஓ நோ இது தெரியாம மாட்டிக்கிட்டேன் போலேயே..”,என அவன் சீரியசாய் கூற அதிர்ச்சியாய் போலிப் பார்வை பார்த்தவள்,”நீங்க அமைதியா சரிதான் நம்ப வச்சுட்டீங்க..”,என்று சிரித்தாள்.

அதற்குள் அவள் இறங்க வேண்டிய இடமும் வந்துவிட விடைபெறுவதற்கான தலையசைப்போடு கீழேயிறங்கியவள் கார் விண்டோ வழியாய் அவனைப் பார்த்து,”தேங்க் யூ சோ மச் பார் யுவர் ஹெல்ப் திவா..நெக்ஸ்ட் வீக்ல நா அங்க ஷிப்ட் ஆகுற மாதிரி பாத்துக்குறேன் ஆண்ட் ஒண்ணாம் தேதில இருந்து கிளாஸ் ஆரம்பிச்சுரலாம்.ஓகே தான?”

“பட் நீங்க இன்னும் வீட்டை பாக்கலையே?”

“இல்ல தேவையில்ல அங்க அம்பியன்ஸே எனக்கு பிடிச்சுருக்கு சோ நா ஓனர்ட்ட பேசிட்டு உங்ககிட்ட சொல்றேன்.பை..”

“ஷுவர்..டேக் கேர் வெண்பா..பை..”

உணவை முடித்தவனுக்கு பழைய நினைவுகளில் வயிறோடு சேர்த்து மனமும் நிறைந்ததாய் தோன்றியது.இடவலமாய் தலையசைத்து சிரித்தவாறே எழுந்து சென்றான்.

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1221}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.