(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - விழி வழி உயிர் கலந்தவளே - 03 - ஸ்ரீ

Vizhi vazhi uyir kalanthavale

“உன்னை முதல் முறை கண்ட நொடியினில்

தண்ணிக்குள்ளே விழுந்தேன்

அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல

மெல்ல மெல்ல கரைந்தேன்

கரை சேர நீயும் கையில் ஏந்த வா

உயிர் காதலோடு நானும் நீந்தவா

 

கண்களில் கண்டது பாதி

வரும் கற்பனை தந்தது மீதி

தோடுதே... சுடுதே... மனதே...

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட

என்று சொல்ல பிறந்தேன்

கைகள் இருப்பது தொட்டு அனணத்திட

அள்ளிக் கொள்ள துணிந்தேன்

எதற்காகக் கால்கள் கேள்வி கேட்கிறேன்

துணை சேர்ந்து போகத் தேதி பார்க்கிறேன்

நாட்கள் தன் கண்ணாமூச்சியை தொடர்ந்து கொண்டிருக்க நாட்டியாலயாவின் நிகழ்ச்சி நாளும் வந்தது.அரங்கம் முழுவதும் பெற்றோரும் பார்வையாளருமாய் நிறைந்திருக்க முதல் வரிசையில் நடுஇருக்கையில் கம்பீரமாய் அமர்ந்திருந்தான் திவ்யாந்த்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவளை பிரிந்து இருக்கும் இந்த பத்து மாதங்களில் இரண்டாவது முறையாய் இன்றுதான் பார்க்கப் போகிறான்.மனதில் இனம்புரியா ஒரு தவிப்பு ஆர்வம்.சற்று நேரத்தில் அவனை கவனித்தவராய் நாட்டியாலயாவின் சீனியர் ஆசிரியை ஒருவர் அவனருகில் வந்து நலம் விசாரித்து வந்தார்.

ஒப்பனையறைக்குச் சென்றவர் வெண்பாவிடம்,”உங்க ஆளு வர்றத சொல்லவேயில்லையே வெண்பா.உங்க சண்டையை பாத்தா சின்ன பசங்க சண்டை போல இருக்கும் போலேயே.நல்ல பிள்ளைங்க”,என்று அவள் தோள் தட்டி நகர்ந்தார்.

அவர் கூறிய வார்த்தைகளில் இருந்து மனம் இன்னமும் மீண்டு வரவில்லை.காலையிலிருந்து மனம் வெகுவாய் அவன் வரவை நாடியது.தன்னையறியாமல் கால்கள் அறை கதவின் அருகே செல்ல லேசாய் கதவை திறந்தவள் தலையை மட்டும் நீட்டி அவனை பார்க்க எப்படியும் நீ வருவாய் எனத் தெரியும் என்பதாய் அவன் கண் அங்கேயே நிலை கொண்டிருந்தது.

இதை எதிர்பாராதவளோ ஒரு நொடியில் அவனை தனக்குள் நிரப்பிக் கொண்டு உள்ளே மறைந்து கொண்டாள்.அவனின் புன்னகை இன்னுமே பெரிதாக சற்றே சாய்வாய் அமர்ந்து கொண்டான்.

அடுத்த அரைமணி நேரத்தில் நிகழ்ச்சி ஆரம்பமாக வரவேற்பு நடனமாய் வெண்பா மேடை ஏறினாள்.அழகிய சந்தன நிற பரத உடையில் வைலட் நிற பார்டர் அமைந்திருக்க அதற்கு பொருத்தமாய் நகைகளும் சிகை அலங்காரமும் கைகளில் மருதாணியும் காலில் சலங்கையும் அனைத்திற்கும் மேலாக அவளது திவாவிற்கு மிகவும் பிடித்த அவள் கண்களின் ஒப்பனை.அதற்காகவே அவள் நடனத்தை காண வந்திருப்பான் நிச்சமாய்.

கவிபாடும் அந்த கயல் கண்களே அவனை கட்டி ஆட்சி செய்யும் அழகிய ராஜாங்கம்.அவள் மேடையேறியது முதல் அவன் அங்கு இங்கு முகத்தை நகர்த்தவில்லை.பார்வை மொத்தமும் தன்னவளையே மொய்த்தெடுத்துக் கொண்டீருந்தது.

அவளும் அடவுகளுக்கு ஏற்றாற் போன்று விழியசைவு செய்தாலும் அவ்வப்போது கிடைக்கும் இடைவேளையிலெல்லாம் அவனையே பார்த்து ஆடிக் கொண்டிருந்தாள்.

அவள் ஆடிமுடித்த நேரம் எழுந்த பலத்த கரகோஷத்திலேயே இருவரும் சுய உணர்வு பெற்றிருக்க அதற்குள் மேடையில் தோன்றிய அந்த மூத்த ஆசிரியை அவளை அங்கேயே நிற்குமாறு கூறிவிட்டு மைக்கோடு அவளருகில் வந்து நின்றார்.

“ நம்ம நாட்டியாலயா வெற்றிகரமா இயங்கிட்டு வர்றதுக்கு முக்கிய காரணமே இங்கு இருக்கும் ஆசிரியர்கள் தான்.அவங்களையெல்லாம் கவுரவிக்குற விதமா இன்னைக்கு அத்தனை பேருக்கும் ஒரு சிறு நினைவுப் பரிசு கொடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.

இது அவங்க யாருக்குமே தெரியாது.இப்போ தான் உங்க முன்னாடி தான் அவங்களும் தெரிஞ்சுக்குறாங்க.சோ முதல் பெர்பார்மென்ஸ் கொடுத்த வெண்பா பத்தி சில வரி பேசிட்டு அவங்களுக்கான பரிசையும் கொடுக்கலாம்னு நினைக்குறேன்.

ரொம்ப ரொம்ப டெடிகேட் ஆன ஒரு ஆசிரியை.பங்கஷன் ப்ராக்டிஸ்னு எப்போ சொன்னாலும் அவங்களோட முழு உழைப்பையும் அதில் காட்டுவாங்க.அத்தனை ஈடுபாடு.ப்ரொபெஷன்ங்கிறத தாண்டி அவங்களோட ப்ஷேன் தெரியும் ஒவ்வொரு ஈவெண்ட்லயும்.அது மட்டுமில்லாம வசதியற்ற திறமையான குழந்தைகளுக்கும் இந்த கலையை கொண்டு சேர்க்கனும்னு ஒரு ஆசிரமத்து குழந்தைகளுக்கு தொடர்ந்து ஐந்து வருஷமா பரதம் சொல்லி கொடுத்துட்டு வராங்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.