(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 05 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

விபாகரனும் இன்று தான் சென்னை திரும்புகிறான். அதனால் அவனை அழைத்துச் செல்ல அஜய் விமான நிலையத்திற்கு வந்திருந்தான். விபாகரனை அழைத்துச் செல்ல அவன் வரவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எப்போது சென்னைக்கு வந்தாலும், விபாகரன் ஒரு வாடகை காரோ இல்லை ஆட்டோவோ பிடித்து வீட்டுக்கு வந்துவிடுவான். இருந்தும் விபாகரன் சிறிது காலம் சென்னையில் இருக்கப் போகிறான் என்ற காரணத்தால் நேற்றே அவனது சென்னை வீட்டிற்கு வந்துவிட்ட அஜயின் அண்ணியும், விபாகரனின் தங்கையுமாகிய அர்ச்சனாவும், விபாகரனின் அன்னை மஞ்சுளாவும், அஜயிடம் விபாகரனை அழைத்து வரும்படி சொல்லியிருந்ததால், அவன் இப்போது இங்கு வந்திருக்கிறான். இங்கு வந்ததும் கூட ஒரு நல்லதுக்கு தான், இங்கே சுஜனாவை பார்ப்பான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவளை பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது.

விபாகரன் வரும் விமானம் தரையிறங்க சிறிது நேரம் கால தாமதமாகும் என்ற அறிவிப்பை தொடர்ந்து சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்தப்படி இருந்த போது தான் அவன் சுஜனாவை பார்த்தது. இத்தனை வருடங்கள் கழித்து அவளை பார்ப்போம் என்று அவன் நினைத்து பார்க்கவேயில்லை. அவளை பார்க்காமல் இருந்தானே தவிர, அவளை இதுவரை அவன்  நினைக்காமல் இருந்ததில்லை.

இருந்தும் அவளை பார்த்து பேச தயக்கம் கொண்டு அப்படியே தொலைவில் இருந்தப்படியே நின்றிருந்தான். அவள் முன்னே சென்று அவன்  நிற்பதை அவள் விரும்புவாளோ என்பதே காரணம், ஆனாலும் ஒருவித பதட்டத்தோடு அவள் நின்றிருப்பதை சிறிது நேரம் கவனித்து பார்த்தவன், மனம் தாங்காமல் அவள் அருகே சென்று அவளை அழைத்தான்.

இத்தனை வருடத்தில் கண்டிப்பாக அவனை அவள் மறந்திருக்க மாட்டாள் தான், மறக்காத அளவுக்கு இருவருக்குள்ளும் அப்படி நெருக்கமாக எந்த உறவும் இருந்ததில்லை என்றாலும், அந்த ஒரு சம்பவம் அது அவளது நினைவில் இருக்கும் வரை, அவனும் கண்டிப்பாக அவளது நினைவில் இருப்பான். இருந்தும்  அவனை பார்த்ததும் அவள் சங்கட நிலைக்கு ஆளாகிடக் கூடாதே என்று தான் ஒதுங்கி நின்றான். ஆனால் இப்போது அவனைக் கண்டதும் அவளது முகத்தில் தோன்றிய புன்னகையை கண்டு, மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் அவனை விட்டு அகன்று அவளை பார்த்து புன்னகைத்தான்.

“எப்படி இருக்க சுஜா?’

“ம்ம் நல்லா இருக்கேன்.. நீங்க?’

“நானும் நல்லா இருக்கேன்.. நாம எப்போ மீட் பண்ணது, அதுக்குப்பிறகு நிறைய முறை நான் உன்னோட ப்ரண்ட்ஸ மீட் பண்ணியிருக்கேன்.. ஆனா யாருக்கும் உன்னைப்பத்தி எந்த தகவலும் தெரியலயே..” அவன் கேட்கவும், அவள் மீண்டும் புன்னகைத்தாள்.

அவன் தன்னை நினைத்திருக்கிறான் என்பதே அவளுக்கு நிறைவையும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. “அப்பவே நிறைய பேரோட பழகறதை நிறுத்தியாச்சு.. இதுல சென்னைக்கு வந்ததும், எல்லோரோடவும் டச் விடுப் போச்சு..”

“எப்போ சென்னைக்கு வந்த.. நீ வெளிநாட்டுக்கு போயிருப்பேன்னு சில பேர் சொன்னாங்க..”

“இல்ல அப்பவே நான் இங்க சென்னைக்கு வந்துட்டேன்.. ஆனாலும் யாருக்கும் தகவல் சொல்லல..” என்றாள். அதற்கு என்ன காரணம் என்பது அவனுக்கு புரிந்ததால், அதைப்பற்றி அவன் மேலும் கேட்க விரும்பவில்லை.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஆமாம் இந்த நேரத்துல இங்க இருக்க.. யாராச்சும் முக்கியமானவங்க வராங்களா.. இல்ல செண்ட்ஆஃப் பண்ண வந்தியா? ஆனா ரொம்ப டென்ஷனா இருக்க? ஒன்னும் பிரச்சனையில்லையே” என்று அவன் கேட்கவும்,

தன் பதட்டத்தை அவன் கண்டுக் கொண்டதில், ஒருபக்கம் மகிழ்ந்தாலும், இப்போது அவனிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல், “அது.. அது வந்து..” என்று இழுத்த போது,

“ஹாய் அஜய்..” என்ற குரலில் இருவரும் குரல் வந்த  திசையில் திரும்பினர். அங்கே பாலமுருகன் நின்றிருந்தான்.

“ஹலோ பாலா சார்..” என்று அஜய் சென்று பாலாவுக்கு கைகுலுக்கினான்.

“என்ன அஜய் விபாவை அழைச்சிட்டு போகவா வந்த..”

“ஆமாம் மஞ்சு அத்தையும் அண்ணியும் தான் சாரை அழைச்சிட்டு வர சொல்லி அனுப்பினாங்க.. ஆமாம் நீங்களும் சாரை அழைச்சிட்டுப் போக தான் வந்தீங்களா? சார் உங்கக்கிட்ட சொல்லியிருந்தாரா?”

“இல்ல நேத்து பேசும்போது இன்னைக்கு வரப்போறதா சொன்னான்.. வேலை விஷயமா பார்த்தா பக்கா பிஸ்னஸ் மேனா மாறிடுவானே, அதான் ப்ரண்டா இப்பவே பார்த்து அவன் கூட கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் செய்யலாம்னு வந்தேன்.. ஆனா அம்மாவும் அர்ச்சனாவும் வந்திருக்கிறதா சொல்றியே, அதனால இங்கேயே பார்த்துட்டு இப்படியே போயிட்றேன்..” என்றவன், அப்போது தான் இருவரையும் பார்த்தப்படி நின்றிருந்த சுஜனாவை பார்த்தான். உடனே,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.