(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 03 - ஜெய்

Gayathri manthirathai

ந்த இம்சை எதுக்கு  இப்போ கால் பண்ணுது என்று யோசித்தபடியே அலைபேசியை எடுத்தான் சக்தி....

“நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்....”, சக்தி கூற,

“அப்படியே அவர் யார் கூட தொடர்புல இருக்காருன்னும் சொல்லுங்க சாமியோவ்......”, கவுன்ட்டர் கொடுத்தாள் சந்தியா.....

“ஹலோ  ஐயா பிஸியா மேட்ச் விளையாடும்போது யாருங்க போன் பண்ணி தொந்தரவு பண்றது....”

“நான் யார் பேசறேன்னே தெரியலையா கோப்ப்ப்ப்ப்பால்...”,என்று சரோஜாதேவி வாய்ஸில் சந்தியா பேச, இம்சை என்று தலையிலடித்தபடியே,

“நீர்தான் என்று தெரிகிறது.... சொல்லும் சொல்லித்தொலையும்....”, கடித்தான் சக்தி....

“நீ விளையாடறது கிட்டி புள்ளோ, கோலி குண்டோ இதுக்கு எதுக்கு கிரிக்கெட் வேர்ல்ட் கப் விளையாடற அளவுக்கு அலுத்துக்கற....”

“அடியேய் ரொம்ப கிண்டல் பண்ணாத.... கில்லி, கோலி எல்லாம் நம்ம பாரம்பர்ய விளையாட்டு தெரியுமா.... அதை எல்லாம் நாம விளையாடாம அழிச்சுட்டு வர்றோம்....”

“ஓ அப்படி  லப்பர் வச்சு அழிக்கறதை நீங்க விளையாடி காப்பாத்தறீங்க....”

“எச்சாட்லி...... நானே நைனாக்கிட்ட சொல்லி இதை தேசிய விளையாட்டா மாத்தலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்....”

“பாருடா நம்ம விளையாட்டுத் துறைக்கு வந்த சோதனையை... விளையாடறது கில்லி, இதுல சாலமன் பாப்பையா ரேன்ஜ்ல பேச்சு...”,சந்தியா பேச யாரிடம் இவள் இப்படி கோவமாக பேசுகிறாள் என்பது போல் பார்த்தாள் காயத்ரி...

“ஓகே ஓகே என்னை டேமேஜ் பண்ணத்தான் போன் பண்ணினியா...”

“யோவ் மாமா அந்த மூக்குறிஞ்சி இந்த காலேஜ்ல சேர்ந்திருக்கான்னு ஏன்யா சொல்லலை....”

“மூக்குறிஞ்சியா... எவ அவ....”

“ம்ம்ம்ம் என் சக்களத்தி....”, சந்தியாவின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து விழித்தாள் காயத்ரி....

“உன்னோட சக்களத்தியா... யாரு சுதா, லதா, அனிதா....”

“யோவ் மாமா....”

“ஓ தா வரிசை இல்லையா... அப்போ மா வரிசை ரமா, உமா, பாமா...”

“ஓ உனக்கு  அகர வரிசைப்படி இத்தனை ஆளுங்க இருக்காங்களா...”

“உனக்குத்தான் செல்லாக்குட்டி மாமாவோட கெப்பாக்குட்டி பத்தி தெரியலை... மாமாக்கு அ வரிசைலேர்ந்து ஔ வரிசை வரைக்கும் எம்புட்டு fan club தெரியுமா...”

“போதும் நிப்பாட்டு.... அந்த மூக்குறிஞ்சி மோகனாங்கி இங்க சேர்ந்திருக்கான்னு ஏன் சொல்லலை....”

“எதுக்கு சொன்ன உடனே நீ மாமாக்கிட்ட அழுது ஒப்பாரி வச்சு காலேஜ் படிக்காம எஸ் ஆகறதுக்கா....”

“கண்டுபிடிச்சுட்டியா....”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“உன் தில்லாலங்கடி வேலை எல்லாம் எனக்கு தெரியும்.... மருவாதையா ஒழுங்கா படிக்கற வேலையை பாரு....”

“யோவ் மாமா இது உனக்கே நல்லா இருக்கா... நீ மட்டும் வீட்டுல உக்கார்ந்து தின்னுட்டு தின்னுட்டு தூங்கற மாதிரி படிப்ப... நான் மட்டும் கஷ்டப்பட்டு டாக்டர்க்கு படிக்கணும்... இது எந்த ஊர் நியாயம்.....”

“இதெல்லாம் +2-ல 95% எடுக்கறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும் செல்லாக்குட்டி... இப்போ மாமனைப் பார்த்து பொறாமைப்பட்டு என்ன செய்ய...”

“சரி அதை விடு..... நான் என்னோட friend லதாக்கு வேலைக்கு கேட்டிருந்தேனே என்னாச்சு.....”

“அடுத்த வாரம் புதன் கிழமை ARS கம்பெனில ராம்ன்னு ஒருத்தர் இருப்பார்.... அவரைப் போய் பார்க்க சொல்லு.... இன்டர்வியூ வச்சுத்தான் எடுப்பாங்க.... அதனால அவங்களை ஒழுங்கா prepare பண்ணிட்டு போக சொல்லு.....”

“இதை நானே அவக்கிட்ட சொல்லி இருப்பேனே.... நீ டைரக்ட்டா அவளை சேர்த்து விடுவேன்னுதானே உன்கிட்ட கேட்டேன்....”

“சிபாரிசுல சேர்ந்தா அந்தளவுக்கு ஈடுபாட்டோட வேலை செய்ய மாட்டாங்க சந்தியா... அதனால இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி நேர் வழிலையே போகட்டும்...”

“நீ சொல்றதும் கரெக்ட்தான்....”

“சரி கிளாஸ்க்கு டைம் ஆகுது.... நீ இன்னைக்கு வீட்டுக்கு வரும்போது மீதி கதை பேசலாம்...”, சந்தியா அலைபேசியை வைக்க காயத்ரி அவளை திருதிருத்தபடி பார்த்துக்கொண்டிருந்தாள்....

“என்ன காயு... என்னை சுத்தி எதுனா ஒளி வட்டம் தெரியுதா என்ன... இப்படி பார்க்கற....”

“நீ யார் கூட இப்போ பேசிண்டு இருந்த....”

“என் மாமாக்கூட....”

“என்னது மாமாவோடையா ....  அவ்ளோ பெரியவரையா மரியாதை இல்லாம யோவ் அப்படின்னெல்லாம் பேசின....”

“மாமான்னா அம்மாவோட தம்பி இல்லை காயு.... என்னோட அத்தை பையன்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.