(Reading time: 8 - 15 minutes)

“ஓ நீ அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறியா....”

“என்னாது... அந்த மூஞ்சூரை நான் கல்யாணம் பண்ணப் போறேனா... மொதல்ல உன் வாயை பெட்ரோல் ஊத்தி கழுவு....”

“பேபிமா இந்த மாதிரி கேணத்தனமான கேள்வி எல்லாம் கேக்காத என்ன.... நானும் அவனும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம், ஒண்ணு அவன் என் கழுத்தை திருகி கொல்லுவான்.... இல்லை நான் அவனுக்கு சோத்துல விஷத்தை வச்சுடுவேன்... “,சந்தியா கூற காயத்ரி அவளை அதிர்ந்து பார்த்தாள்...  அந்த அதிர்ச்சியுடனேயே காயத்ரியை வகுப்பறைக்கு இழுத்து சென்றாள் சந்தியா......

வாங்க ஜெயராமன்..... இந்த வருஷ மொத்த ஸ்டுடென்ட்ஸ் லிஸ்ட் கேட்டிருந்தேனே... எடுத்துட்டு வந்திருக்கீங்களா.....”

“இதோ இருக்கு சார்.... கோட்டா வாரியா தனித்தனியா பிரிச்சு பிரிண்ட் அவுட் கொண்டு வந்திருக்கேன்...”

“பிரிண்ட் அவுட் எடுத்துட்டு file delete பண்ணிட்டீங்க இல்லை.....”

“உடனே பண்ணிட்டேன்  சார்......”

“ஹ்ம்ம் போன வருஷத்தைவிட இந்த வருஷம் எட்டு சீட் அதிகமா government கோட்டால போய் இருக்கு போல.....”

“ஆமாம் சார்.... இங்க அஞ்சு சீட், அப்பறம் திருச்சி காலேஜ்ல மூணு சீட்...”

“ஹ்ம்ம் ஆறு பொண்ணுங்க, ரெண்டு பசங்க....”

“எல்லாருமே +2, NEET ரெண்டுத்துலையுமே நல்ல மார்க் வாங்கி இருக்காங்க சார்... அந்தப் பொண்ணு காயத்ரி +2ல ஸ்டேட் ரேங்க் ஹோல்டர்... NEETலயும் நல்ல மார்க் வாங்கி இருக்கு....”

“ஹ்ம்ம் சரி இந்த லிஸ்ட் என்கிட்ட இருக்கட்டும்.... வேற எதுவும் பிரச்சனை இல்லையே.....”

“இல்லை சார்... அப்பறம் துபாய்லேர்ந்து ஷேக் போன் பண்ணி இருந்தாரு... அவரோட நண்பருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக அடுத்த மாசம் இங்க கூட்டிட்டு வரேன்னு சொல்ல சொன்னார்....”

“ஓ அப்படியா... சரி நான் அவர்கிட்ட பேசிக்கறேன்.... நீங்க அவரோட full health report மட்டும் வாங்கி வச்சுக்கோங்க....”, ஜெயராமன் வெளியேற, அந்த லிஸ்ட்டை எடுத்து ஒரு ஒரு பெயராக வட்டமிட ஆரம்பித்தார்....

ஹே சாந்தி என்னாச்சு காலைலேர்ந்து ஒரே சோகமா சுத்திட்டு இருக்க.....”

“இன்னைக்கு அந்த மணி பின்னாடியே வந்து ரொம்ப தொல்லை பண்ணிட்டாண்டி....”

“நீ அவனோட மொதலாளிக்கிட்ட சொல்ல வேண்டியதுதானேடி... அவர் கண்டிப்பார் இல்லை....”

“அந்த மெக்கானிக் ஷெட்டை சுத்தி எப்பவும் ஒரே கூட்டமா இருக்கும்டி... அத்தனை பேர் முன்னாடி போய் பேச கஷ்டமா இருக்கு.....”

“நீ ஏண்டி பேசப்போற... உன் ஆளை விட்டு பேச சொல்ல வேண்டியதுதானே....”

“ஐயோ வேற வினையே வேண்டாம்... அவருக்கு சும்மாவே எதுக்கெடுத்தாலும் கோவம் வரும்... இதை சொன்னேன் அப்பறம் அருவாளோட கிளம்பிடுவாரு....”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“வீட்டுலயும் நீயும், அம்மாவும் மட்டும்தான்.... அவங்கக்கிட்டையும் சொல்ல முடியாது.....”

“ஆமாம்டி அதான் என்ன பண்ணன்னு யோசனையா இருக்கு....”

“சரி விடு... தொல்லை அதிகமானா அப்பறம் என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்...”

“நாளுக்கு நாள் அவன் தொல்லை அதிகமாகிட்டுதாண்டி வருது... போன வாரம் வந்து இன்னும் ஒரு வாரத்துல அவனுக்கு நான் ஓகே சொல்லலைன்னா அப்பறம் விபரீத விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்ன்னு மிரட்டிட்டு போனான்..... இன்னைக்கு வந்து பதிலை சொல்லுன்னு ஒரே டார்ச்சர் பண்ணிட்டாண்டி...”

“ஏய் என்னடி சொல்ற... இதுக்கு மேல நீ சும்மா இருக்கறது சரியில்லை சாந்தி... ஒண்ணு நீயே போய் அவன் மொதலாளிக்கிட்ட பேசு... இல்லைனா உன் ஆளை விட்டு பேச சொல்லு....”

“ஹ்ம்ம் நானும் அதுதாண்டி யோசிச்சேன்.....”

“ஆமாம் நீயும் லவ் பண்ண ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆகுது... இன்னும் உன் ஆளை என் கண்ணுல காட்டலை... அப்படியே பொத்தி பொத்தி பாதுக்காகற...”

“நானாடி காட்ட மாட்டேங்கறேன்... அவருதான் வர மாட்டேங்கறாரு.... நான் படிச்சு முடிக்கறவரை விஷயம் யாருக்கும் தெரியக்கூடாதாம்....”

“அட்லீஸ்ட் அவர் எங்க வேலை செய்யறாருன்னு சொல்லுடி... நைஸா போய் அவருக்குத் தெரியாம பார்த்துடலாம்.... அவர் மான்ஷன்ல தங்கி இருக்கறதால அங்க போய் பார்க்க முடியாது....”

“போன மாசம்தான் இருந்த வேலையை விட்டுட்டு தனியா தொழில் ஆரம்பிக்க பேங்க் லோன் apply பண்ணி இருக்காரு... அது கிடைச்ச உடனே தொழில் ஆரம்பிச்சுடுவாரு.... இடமெல்லாம் கூட பார்த்து வச்சுட்டாரு....”

“ஓ சந்தோஷமா இருந்தா சரிடி.... சரி வா கிளம்பலாம்... இன்னைக்கு அம்மா அக்கா வீட்டுக்கு போகணும்ன்னு சீக்கிரம் வர சொன்னாங்க....”, இருவரும் பேசியபடியே பேருந்து நிலையம் நோக்கி நடக்க, அவர்களின் அருகில் அதிவேகத்துடன் வந்த இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கிய இளைஞன் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து சரமாரியாக சாந்தியை வெட்ட ஆரம்பித்தான்.....  

தொடரும்

Episode # 02

Episode # 04

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.