Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 13 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 13 - பத்மினி

Madiyil pootha malare

ராம்குமாரின் கை கால்கள் இழுக்க ஆரம்பித்ததை கண்ட ஜானகி

“ஆதி “  என்று  அலறினார்...

அவனிடம் இருந்து எந்த பதிலும் வராததால் மெல்ல மாடி ஏறி அவன் அறையை அடைந்தார்... அங்கு ஆதித்யாவோ அலங்கோலமாக கிடந்தான்... அவன் உதடுகளோ

.“நான்  தோத்துட்டேன்... என்னால் ஒன்னும் செய்ய முடியல ... அவ என்னை ஏமாத்திட்டா “ என்று புலம்பியது.. அதை பார்த்ததும் நெஞ்சை பிசைந்தது ஜானகிக்கு...

“எப்படி ராஜகுமாரானக  இருந்தவன் இப்படி ஆயிட்டானே .. நான் என்ன செய்வேன்” என்று மனதிற்குள் புலம்பியவர்

“ஆதி.. கண்ணா.. அப்பாவுக்கு முடியல..  எழுந்திருடா” என்று அவனை உலுக்கி எழுப்பினார்..  ஆனால் அவனோ அதை உணரும் நிலையில் இல்லை...

“இப்ப என்ன  செய்யறது??? .. எனக்கு எந்த டாக்டரையும் தெரியாதே.. எல்லாம் ஆதி இருக்கிற தைரியத்தில் டாக்டர் பற்றி எந்த விவரத்தையும் வாங்கி வைக்கலையே.. இப்ப எப்படி கூப்பிடறது...” என்று புலம்பியவர் அருகில் கிடந்த அவனின் மொபைலை எடுத்தார். அதில் டாக்டர் நம்பரை வச்சிருப்பான் என்று..

மொபைலை ஆன் பண்ணவும் அதில் ஆதித்யாவும் ஷ்வேதாவும் சிரித்து கொண்டிருந்தனர் மிகவும் நெருக்கமாக....அதை கண்டதும் ஜானகியின் மனம் கசந்தது

“பாவி.. எல்லாம் இவளால வந்தது.. என் குடும்பத்தையே இப்படி ஆக்கிட்டாளே” என்று புலம்பியவாறு மொபைலில் டாக்டர் நம்பரை தேட முயன்றார். ஆனால் அது பாஷ்வோர்ட் பேட்டர்ன் வைத்து லாக் ஆகி இருந்ததால் அதை  திறந்து பார்க்க முடியவில்லை.... எதையோ முயற்சி செய்து பார்த்தவர் ஒன்றும் சரியாக வராததால் மீண்டும் ஒரு முறை ஆதியை எழுப்பினார்...  அவன் இன்னும் குடி போதையிலயே இருப்பதை உணர்ந்து வேகமாக கீழே வந்தார்...

ராம்குமார் இன்னும் வேதனையில் முனகி கொண்டிருந்தார்.. உடல் வேர்க்க ஆரம்பித்து இருந்தது...கண்கள் மட்டும் எதையோ சொல்ல துடித்தது...  ஆனால் ஜானகியால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை

ஐயோ!!! .. நான் என்ன செய்வேன்???  ராம்... என் ராமை எப்படியாவது காப்பாற்றி ஆகனும்” என்று இங்கும் அங்கும் ஓடினார். அன்றைகென்று பார்த்து வீட்டில் வேலையாட்கள் யாரும் இல்லை... சமையல் செய்யும் பெண் தங்கம் காய் வாங்க என்று வெளியில் சென்றிருந்தாள்... வீட்டிற்கு வெளியில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தவர் யாரும் தென்படவில்லை எனவும்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“எல்லாரும் எங்க போய் தொலைஞ்சாங்க” என்று புலம்பியவாறு மீண்டும் ராமின் அறைக்கு ஓடினார்...

கடைசியாக அவருடைய மொபைல் கண்ணில் படவும் உடனே அதை  எடுத்து தன்னை  கடைசியாக அழைத்து இருந்த மேனேஜரை அழைத்து நிலைமையை சொல்லி ஏதாவது அவசரமாக ஏற்பாடு செய்ய சொன்னார்...

அவரும் அருகில் இருந்த கால் டாக்ஷிக்கு புக் பண்ணி உடனே காரை வரவழைத்தார்... அவசரமாக ராம்குமாரை அந்த காரில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்... அவரை பரிசோதித்த டாகடர் அவரின் உயிர் பிரிந்து விட்டது.. இன்னும் கொஞ்சம் முன்னாடியே கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்று வழக்கம் போல  சொல்லி கையை விரித்தார்... பின் ஜானகியை பார்த்து

“ஏம்மா... பார்த்தால் படித்தவங்க மாதிரி தெரியறீங்க.. இந்த மாதிரி அவசர நேரத்தில் செய்ய வேண்டிய முதல் உதவியை பற்றி தெரிந்து வச்சுக்க மாட்டீங்களா??? ... இப்பதான் எத்தனை விளம்பரங்கள் வருகின்றன.. அதை பார்த்தாவது குறிச்சுக்க வேண்டாம்..

அதான் இல்லை..  உடனே ஆம்புலன்ஷ்க்காவது போன் பண்ணி இருக்கலாம் இல்லை... ஆம்புலன்ஷ் லயே முதலுதவிக்கான உபகரணங்கள் மற்றும் அதை  செய்ய ஆட்களும் இருப்பாங்களே... இப்படி அஜாக்கிரதையா கடைசி நேரத்துல கொண்டு வந்திருக்கீங்களே” என்று தன் ஆதங்கத்தை கொட்டினார்..

ஏற்கனவே பாதி மயங்கி இருந்த ஜானகி, டாக்டர் சொன்ன தன் அஜாக்கிரதையால் ராமின் உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது எனவும், தன்னால் தான் இப்படி ஆகிவிட்டது  என்று முழுவதுமாக மயங்கி சரிந்தார்...

கூட வந்த டாக்ஷி ட்ரைவரோ என்ன செய்வது என்று தெரியாமல தன்னை புக் பண்ணி இருந்த நம்பருக்கு கால் பண்ணி விபரத்தை சொல்லவும் அந்த மேனேஜர் சுந்தரம் அவசரமாக கிளம்பி அங்கு வந்து நிலைமையை தன் கையில் எடுத்து கொண்டார். அவரே எல்லா பார்மாலிட்டிஷையும் முடித்து ராமின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தார்...

ஜானகிக்கும்  ட்ரிஷ் ஏற்றி கொஞ்சம் நடக்க முடியற மாதிரி ஆனதும் வீட்டிற்கு கூட்டி வந்திருந்தனர்.. ராமின் நண்பர்கள் சிலர் வந்து உதவவும் அவரால் சமாளிக்க முடிந்தது.. அதற்குள் ஆதித்யாவும் போதை விலகி நடந்தவைகளை அறிந்து ஆடிப்போனான்..

“ஐயோ!!!  என் அப்பாவின் கடைசி மூச்சில் நான் அருகில் இல்லையே. அருகில் இருந்தும் அவருக்கு உதவ  முடியாமல் போயிற்றே “ என்று மேலும் உடைந்து போனான்.. அதற்கப்புறம் எல்லாம் மல மல வென முடிந்து ராம்குமாரின் உடல் தகனம் செய்யபட்டது....அவரின் உடலுக்கு கொல்லி வைத்தவன் இன்னும் நொறுங்கி போனான்.. 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 13 - பத்மினிsaaru 2018-09-19 23:45
Super enga Kannum verthuruchi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 13 - பத்மினிPadmini 2018-09-20 23:19
Thanks saaru!! :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 13 - பத்மினிAR 2018-09-19 16:15
Nice episode madam.Please correct the spelling.mams please bus having different spelling in tamil.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 13 - பத்மினிPadmini 2018-09-19 23:04
Thank you!! Sure. Will take care of spelling.. :-) Thanks for pointing!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 13 - பத்மினிmahinagaraj 2018-09-19 13:03
ரொம்ப அருமையா இருக்கு மேம்.... :clap: :clap:
உண்மை தான் நல்ல தோழி அமைவதும் இறைவன் தந்த வரம் தான்..... :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 13 - பத்மினிPadmini 2018-09-19 23:02
:thnkx: Mahi!!
Reply | Reply with quote | Quote
# EMPMAkila 2018-09-19 12:56
Hi

Iam reading your story updates. But this is my first comment.

Nice story line.
Bharathi:Full of positive energy character.
Adthi: Normal and pityable character.
Suseela: Great doctor as well a care taker
Janaki: Lovable wife as well lovable mother

Now how Bharathi is going to balance with these persons. I think she may have a good relation with Janaki than Adhthi.

How she is going to cover Adathi?
Waiting read more updates.
Reply | Reply with quote | Quote
# RE: EMPMPadmini 2018-09-19 23:02
Thanks Akila!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 13 - பத்மினிmadhumathi9 2018-09-19 12:13
:clap: nice epi sad aaga irunthaalum aadhi janaaki iruvarum seekkiram velivanthathu arumai. :clap: :clap: :thnkx: r this epi. (y) (y) :thnkx: :thnkx: :GL: innum adhiga pakkangal kodukka mudiyuma? Seekkiram padithu mudithathu polirukku. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 13 - பத்மினிPadmini 2018-09-19 23:01
Thanks Madhu!!. Will try to give more pages whenever possible :-)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top