Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 4.20 (5 Votes)
மனம் விரும்புதே உன்னை... - 12 - 4.2 out of 5 based on 5 votes

12. மனம் விரும்புதே உன்னை...

"நீ சரியான லூசுப்பா... இவ்வளவு நாள் என்ன செஞ்சுட்டு இருந்த? இப்போ கடைசி நிமிஷத்தில வந்து இப்படி தொல்லை பண்ற?" என்று நிஜமான கோபத்தோடு கேட்டாள் வீணா.

"சாரி சாரி.... நான் கொஞ்சம் பிஸி....." என்று தோழியிடம் கெஞ்சினாள் இந்து.
மறுநாள் கீதா ராஜீவ் திருமண நாள். அதற்கு சேலைகளுடன், சின்னதாக ஒரு பரிசும் கொடுக்கலாம் என்று வீணாவையும் அழைத்துக் கொண்டு கடைக்கு வந்திருந்தாள் இந்து.

"மண்ணாங்கட்டி... பொய் சொல்லாதே..... தினமும் சஞ்சீவ் கூட வெளியே போக உனக்கு நேரம் இருக்கு இல்லை...."

"அதெல்லாம் ஒன்னும் இல்லை... டெய்லி எல்லாம் போறதில்லை...."

"இந்து என்கிட்டவே ரீல் சுத்த ஆரம்பிச்சிட்டியா? உனக்கு சஞ்சீவ் எவ்வளவோ பரவாயில்லை.... உண்மையை தான் சொல்றார்..."

"ஹே வீணா! சஞ்சீவை நீ எங்கே பார்த்த?"

இந்து கேட்ட தோணியில் திரும்பி இந்துவை பார்த்தவள்,
"ஏன் சஞ்சீவை பார்த்தால் என்ன?" என்றாள்.

"ஒன்னுமில்லை... ஆனால் எங்கே பார்த்த?"

"நேத்து சஞ்சீவ் எல்லோரையும் இன்வைட் பண்ண வீட்டுக்கு வந்திருந்தார்..."

"ஓ!"

"என்ன யோச்சிக்கிற? உன்கிட்ட எதுவும் சொல்லலைன்னு தானே? அதையும் சொன்னார்.... உன்னையும் கூட கூட்டிட்டு வரனும்னு தான் நினைச்சாராம் ஆனால் டைம் கிடைக்கலையாம்...."

"ம்ம்ம்ம்..."

தோழியின் முகத்தை பார்த்து அவள் மனதில் ஓடும் எண்ணத்தை அறிந்தவளாய்,
"இந்து... என்ன இவ்வளவு பொஸசிவ்னஸ்???? நானும் கீதா அக்காவும் இந்த விஷயத்திலே உனக்கு கம்பேர் செய்தால் ஜீரோ தான் போல இருக்கு...சஞ்சீவ் உன்கிட்ட சொல்லாட்டி என்ன... அவர் எதற்க்காக வேலை மெனக்கெட்டு வந்து அவினாஷையும் அத்தையையும் கூப்பிடனும்? உனக்காக தானே????"

"பொஸசிவ்னஸ் எல்லாம் இல்லை வீணா.... ஆனால் சஞ்சீவ் கிட்ட காஞ்சனா ஆன்ட்டி கிட்ட எல்லாம் சீக்கிரமே நேரா பேசினால் பரவாயில்லைன்னு தோணுது..."

"ஹேய்... உன்கிட்ட சொல்ல மறந்துட்டேனே... இன்னும் ஆறு மாசத்தில சஞ்சீவோட பர்த்டே வருது... அது தான் நீ சஞ்சீவ் கிட்ட யெஸ் சொல்ல சரியான டைம்... அதுவரைக்கும் அவர் சஸ்பென்சொடவே இருக்கட்டும்... என்ன சொல்ற?"

"ஆறு மாசமா?"

"அடடா.... நான் கல்யாணமே பண்ணிக்க போறதில்லை... காதல் கத்திரிக்காய் எல்லாம் பொய்... இப்படி எல்லாம் பேசின இந்து தானா நீங்க?" என்றாள் வீணா கேலியாக.

"ப்ச்... வீணா எனக்கு தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு... பேசாமல் கீதா அக்கா கிட்ட சொல்லி சஞ்சீவ் கிட்டயும் ஆன்ட்டி கிட்டேயும் சொல்ல சொல்லிடலாமா?"

"லூசு... லூசு... ஆன்ட்டி கிட்ட சரி... சஞ்சீவ் கிட்ட நீ தான் சொல்லனும் அது தான் சரி.... அது இருக்கட்டும் நாளைக்கு என்ன டிரஸ்ன்னு முடிவு செஞ்சாச்சா?"

"வேற என்ன சுடிதார் தான்...."

"நோ நோ... சாரீ கட்டிட்டு வா...."

"இல்லை வீணா... வந்து... வந்து... சஞ்சீவுக்கும் சாரீ பிடிக்கும்... அதனால கல்யாணத்துக்கு தான் சாரீ கட்டலாம்னு இருக்கேன்..."

"சூப்பர்... நல்ல ஐடியா தான்... ஆனால் இப்போ நீ காஞ்சனா ஆன்ட்டியையும் கவர் பண்ணி ஆகணும் இல்லை... நீ சுடிதார் போட்டாலும், ஜீன்ஸ் போட்டாலும், சாரீ கட்டினாலும், சஞ்சீவ் உன் பின்னாடியே தான் சுத்துவார்... ஆனால் பொதுவா பெரியவங்களுக்கு சாரீ தான் பிடிக்கும்... அதுவும் உனக்கு அங்கே பெரிய லெவல் காம்பெட்டிஷன் இருக்கு... அக்கா சொன்னதை வச்சு பார்த்தால் அந்த கண்மணி கதைல வர வில்லி டைப் இல்லை... ஹீரோயின் டைப்... சோ நீ ஒரு நல்ல சாரீ கட்டிட்டு வா... அது தான் சரி..."

"நீ சொன்னால் சரி... நாளைக்கு சாரீலேயே வரேன்... ரொம்ப தேங்க்ஸ் வீணா... நீ மட்டும் இல்லைனா எனக்கு ரொம்ப கஷ்டம் தான்..."

"இந்த மாதிரி விஷயத்தில அக்காவை விட நான் தான் அனுபவசாலி...உனக்கு மட்டும் ஸ்பெஷல் ப்ரீ கன்சல்டேஷன்..."

"எக்ஸ்குய்ஸ் மீ...." என்ற குரலில் இருவரும் திரும்பினர்.

"ஹலோ எப்படி இருக்கீங்க? என்னை ஞாபகம் இருக்கா?" என்று தன்னை பார்த்து பேசிய பெண்ணை, யோசனையுடன் பார்த்தாள் இந்து.

எங்கோ பார்த்திருப்பதாக தோன்றிய போதும், உடனே நினைவுக்கு வரவில்லை.... அவளின் குழப்பமான முகத்தை பார்த்து விட்டு , அந்த பெண்ணே தொடர்ந்து பேசினாள்.
"மறந்துட்டீங்களா???? அன்னைக்கு அங்கே மால்ல..."

சட்டென்று புரிந்தது.
"சாரி-ங்க டக்குன்னு ஞாபகத்துக்கு வரலை.... எப்படி இருக்கீங்க?" என்றாள் இந்து.

"நான் நல்லா இருக்கேன்... நீங்க எப்படி இருக்கீங்க? அப்புறம் போன் செய்றேன்னு சொல்லிட்டு என்னை மறந்தே போய்டீங்க?"

"நல்லா இருக்கேன்... சாரிங்க... இது என் பிரெண்ட் வீணா..." என்று வீணாவை அறிமுகம் செய்து வைத்தாள் இந்து.

"நீங்க தப்பா எடுத்துக்காதீங்க... இப்போ எல்லாம் இந்துக்கு புது விதமான அம்னீஷியா... ஒரே ஒரு விஷயத்தை தவிர வேற எதுவும் ஞாபகத்தில நிக்கவே நிக்க மாட்டேங்குது...." என்றாள் வீணா கேலியாக.

"ப்ச் வீணா...." என்ற இந்துவின் முகத்தை பார்த்த கண்மணி,

"உங்களுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்கா?" என்றாள்.

"அந்த லெவெலுக்கு எல்லாம் இன்னும் போகவேயில்லை...இது அதுக்கு முன்னாடி ஸ்டேஜ்..." என்று பதில் சொன்னால் வீணா.

"ஓ! லவ்வா?" என்றாள் கண்மணி ஆச்சர்யத்துடன்.

"ம்ம்ம்ம்..." என்று கண் சிமிட்டினாள் வீணா.

சிவந்திருந்த முகத்துடன் புன்னகைத்த இந்துவை பார்த்து, கண்மணிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"கங்கிராட்ஸ் அக்கா... உங்க அவர் ரொம்ப லக்கி..."

"ஆனால் இன்னும் மேடம் அவர் கிட்ட யெஸ் சொல்லலை.. அதை பத்தி தான் பேசிட்டு இருந்தோம்...."

"ஓ! சாரி நான் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?"

"அதெல்லாம் ஒன்னுமில்லை...." என்றாள் இந்து.

"ஆமாம் அக்கா... உங்க பேர் இந்துவா? முழு பேர் என்ன இந்துமதியா?"

"அட ஆமாம் பேரே நாம தெரிஞ்சுக்கலை இல்லை.... யெஸ் என் பேர் இந்து தான்... மதி எல்லாம் இல்லை...உங்க பேர் என்ன?"

"ஆமாம் மதி இல்லை இந்து இவள்...." என்றாள் வீணா கிண்டலாக.

கண்மணி பதில் சொல்லும் முன் அவளின் கைபேசி சிணுங்கியது. அவள் எடுத்து பேசவும், வீணாவும் இந்துவும் பரிசு பொருட்களை பார்வையிட ஆரம்பித்தனர். அப்படியே வீணா இந்துவிற்கு ரொம்ப பெரிதாக மாற்றம் தெரியாமல், காஞ்சனாவிடம் எப்படி நடந்துக் கொள்வது என்று அட்வைஸ் மழை பொழிந்துக் கொண்டிருந்தாள். வீணாவின் பேச்சை கவனித்த படி போனில் பேசி விட்டு வந்த கண்மணி,
"நீங்க ரெண்டு பேரும் கூட கிப்ட் தான் வாங்க வந்தீங்களா அக்கா?" என்றாள்.

"ஆமாம்... எங்க பிரெண்டுக்கு... நீங்க?" என்றாள் வீணா.

"நான் என்னோட அக்கா அத்தான் கல்யாண நாளுக்கு..." என்று கண்மணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

"ஹேய் வீணா இதை பாரேன்... ரொம்ப நல்லா இருக்கு..." என்றாள் இந்து.

அவள் சுட்டி காட்டியது அலங்காரமாக வைக்க படும் ஒரு கிறிஸ்டல் பீஸ். இரண்டு குருவிகள் கூட்டில் இருப்பது போல் வடிவமைக்க பட்டிருந்த அந்த கிறிஸ்டல் மிகவும் அழகாக இருந்தது.

"ரொம்ப நல்லா இருக்கு இந்து... அக்காக்கு கட்டாயம் பிடிக்கும்..." என்றாள் வீணா.

"ஆமாம் அக்கா... நானும் அதையே வாங்கலாம்னு நினைக்கிறேன்.. ரொம்ப சூப்பரா இருக்கு..." என்றாள் கண்மணி.

சொன்னது போல் அந்த இரண்டு குருவிகள் கிறிஸ்டல் செட்டையே இரண்டு எடுத்து தர சொல்லி விட்டு, மூவரும் பில் போட சென்றார்கள்.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# niceKeerthana.K 2014-09-15 11:31
how to download this books in pdf format
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 12Dr.G.Palani 2014-09-01 22:00
12 பாகங்களை படித்து - மன்னிக்கவும் - ரசித்து - முடித்திருக்கிறேன். மனித மனங்களின் மென்மையான உணர்வுகளை - அவை கோபமோ, வெறுப்போ, சலிப்போ அல்லது மனம் சிலிர்க்கும் காதலோ - தெளிந்த நீரோடையாய, தழுவிச் செல்லும் தென்றலாய்............. சுகமான நடை.
பாராட்டுக்கள்.

மரு.கோ.பழநி
Reply | Reply with quote | Quote
# MVUIndhumathi 2013-10-31 22:08
Nice Story :)
Keep posting
Reply | Reply with quote | Quote
# MVUpriya k 2012-07-05 15:37
when will you post the next part...Why late?? awaiting eagerly ... :)
Reply | Reply with quote | Quote
+1 # mvuronnieshanthy.l 2012-07-05 12:46
hi it was a sweet story,please post the next part.am watting :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 12Denisha 2012-07-05 05:58
Hi! When you gonna post the next series ,,,, couldn't wait :sigh:
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 12Admin 2012-06-23 14:39
Sorry for the delay in publishing the next part :-(

The next part will be published on 28th June
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 12priya k 2012-06-23 11:37
when wil u post the next part
Reply | Reply with quote | Quote
-1 # RE: மனம் விரும்புதே உன்னை... - 12Viju 2012-06-01 23:26
Nice Aadhi....

If there's going to be no villain villi, are u going to bring in some tragic incident???? Please don't do that.
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 12Admin 2012-06-01 00:43
Nice Aadhi... Sonna maathiriye, entha periya stunt-m illaamal kanmaniya green signal kodukka vachutteenga...

Unga last line-a podikkum pothu edho periya vishayam vara poguthunnu therituthu... Hmmm...
Reply | Reply with quote | Quote
# RE: மனம் விரும்புதே உன்னை... - 12Anusha Chillzee 2012-06-01 00:32
Aadhi,
No villains / villis... One constraint (Kanmani) gone now...

Can't understand what issue you are going to bring in now...
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top