Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 4.75 (8 Votes)
கம்பன் ஏமாந்தான் - 02 - 4.8 out of 5 based on 8 votes
Pin It

02. கம்பன் ஏமாந்தான்

"ண்ணி... என்னோட மன்த்லி டெஸ்ட் ரிசல்ட்ஸ் பார்க்குறீங்களா? அசந்து போக போறீங்க.... நான் 95 மார்க்ஸ் வாங்கி இருக்கேன்...."

தன் கைக்குழந்தை நித்யாவை தூங்க வைத்துக் கொண்டிருந்த உமா, மதுமதியின் உற்சாக குரலில் நிமிர்ந்து பார்த்தாள். பின் குழந்தை தூங்குவதை சைகையால் காட்டி அமைதியாக இருக்க சொன்னாள். சிறிது நிமிடம் கழித்து குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்து தட்டி கொடுத்து விட்டு எழுந்து, மதுமதி அருகில் வந்தாள்.

"சாரி மது.. இப்போ சொல்லு... "

"என்ன அண்ணி சாரி பூரின்னு எல்லாம் பேசிட்டு... இங்கே பாருங்க..." என்று சில காகிதங்களை உமா பக்கம் நீட்டினாள் மதுமதி.

அவள் நீட்டிய தேர்வு தாள்களை பார்த்த உமா, மதுமதி மற்ற பாடங்களில் 60-80 மதிப்பெண் வாங்கி இருப்பதையும் ஒரே ஒரு பாடத்தில் மட்டும் 95 வாங்கி இருப்பதையும் பார்த்தாள்.

"சூப்பர் மது... 95 வாங்கி இருக்கிறது உங்க பாரதி மேடம் சப்ஜெக்ட் தானே?"

"ஆமாம் அண்ணி... மேடம் என்னை பாராட்டினாங்க... அடுத்து 100 வாங்கனும்ன்னு சொன்னாங்க... நெக்ஸ்ட் டைம் எப்படியும் 100% வாங்கியே தீருவேன்...."

சந்தோஷமாக பேசியவளை பார்த்த படி இருந்தாள் உமா. இரண்டு வருடத்திற்கு முன் அவள் திருமணமாகி இங்கே வந்த போது, கணவன் நிரஞ்சன் சொன்னது மனதில் ஓடியது..
"உண்மையா சொல்லனும்னா உமா, எனக்கு கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு எல்லாம் மனசில எண்ணமே இல்லை... ஆனால் உன்னை பார்த்த பிறகு என் மனசே மாறி போச்சு... ஆனால் இந்த கல்யாணம் முக்கியமா என் தங்கை மதுவுக்காக தான்... அவளுக்கு நீ ஒரு நல்ல கைடா இருந்து ஹெல்ப் செய்யனும்...."

"என்ன அண்ணி? தூங்குறீங்களா என்ன?"

மதுமதியின் குரலில் சிந்தனையில் இருந்து விடு பட்டவள்,
"அதெல்லாம் இல்லை மது..."

"சாரி அண்ணி... நித்யாவை கவனிச்சு நீங்களே டையர்டா இருப்பீங்க...."

"அடடா... அப்படி எல்லாம் எதுவும் இல்லை... சரி அது என்ன ஒரு சப்ஜெக்ட்ல மட்டும் 95 மத்த எல்லாத்துலேயும் 60ஸ் 70ஸ் ல வாங்கி இருக்க?"

"என்ன செய்ய அண்ணி... பாரதி மேடம் ஒரு சப்ஜெக்ட் தானே எடுக்குறாங்க? ஆனாலும் பாருங்க circuitsல கூட 83 வாங்கி இருக்கேன்... ஏன் தெரியுமா? அது பாரதி மேடம் பிரெண்ட் பவித்ரா மேடம் சப்ஜெக்ட்..."

"நீ சொல்றதை பார்த்தால், ஒன்னு உங்க பாரதி மேடமே எல்லா சப்ஜெக்டையும் எடுக்கனும் இல்லை அவங்க பிரெண்ட்ஸ் தான் எடுக்கனும் போல இருக்கே...."

"ஹி ஹி ஹி... அப்படி இருந்தால் நல்லா தான் இருக்கும்...."

"அதெல்லாம் சரி அது என்ன உனக்கு உங்க பாரதி மேடம் மேல இப்படி ஒரு ஈர்ப்பு? உங்க அண்ணன் கிட்ட அப்படி பேசினதுக்காகவா?"

"தெரியலை அண்ணி... அண்ணன் கிட்ட நான் செஞ்சது தப்பு இல்லைன்னு அன்னைக்கு அவங்க அடிச்சு பேசினது மட்டும் இல்லை... அதற்கு அப்புறம் கூட அப்படி ஒன்னு நடக்காத மாதிரி நடந்துக்கிட்டாங்க பாருங்க அது தான் சூப்பர்... வேற யாராவதா இருந்தா ஒன்னு அண்ணா கிட்ட சரின்னு சொல்லிட்டு மனசுக்குள்ள இப்படி வீட்டில சொல்லி கூப்பிட்டுட்டு வந்துட்டாளேன்னு புழுங்குவாங்க.. இல்லை ஏதாவது விதத்தில என் மேல கோபத்தை காட்டுவாங்க... பாரதி மேடம் எதையுமே செய்யலை... அண்ணன் பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணியதை கூட அவங்க பெரிசா எடுத்துக்கலை..."

கண்கள் மின்ன சொன்னவளை ஆச்சர்யமாக பார்த்தாள் உமா. இந்த இரண்டு ஆண்டுகளாக அவள் அறிந்திருந்த மதுமதிக்கும் இந்த மதுவிற்கும் சில வேறுபாடுகள் இருந்தன. கணவன் மூலம் முழு விபரமும் அறிந்துக் கொண்ட போதும், அதை வெளி காட்டாமல் உமா மதுவிடம் பழக தொடங்கிய போது, மது நத்தை போல் தன்னை சுருக்கி கொண்டு இருந்தாள். பொதுவாக ஒன்றிரண்டு வார்த்தை தான் பேசுவாள். உமா அவளோடு தோழி போல் பழகவும், மெதுவாக மதுவும் உமாவுடன் நன்கு ஒட்டிக் கொண்டாள். அண்ணியுடன் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டாள். ஆனால் இப்படி உற்சாகம் கொப்பளிக்கும் மதுமதியை உமா இப்போது சில நாட்களாக தான் பார்க்கிறாள்.

"லோ விவேக்..."

நடந்து முடிந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை மனதில் எண்ணியபடி நடந்துக் கொண்டிருந்த விவேக், தன்னை யாரோ அழைப்பது உணர்ந்து திரும்பினான். சற்று தள்ளி அவன் நண்பன் பார்த்திபன் நிற்பதைக் கண்டான்.

"ஹலோ பார்த்தி... எப்படிடா இருக்க?" என்றபடி நண்பனின் அருகில் சென்று கை குலுக்கினான் விவேக்.

"எனக்கு என்னடா குறைச்சல் நான் நல்லா தான் இருக்கேன்... வா அந்த பக்கம் காபி ஷாப்ல உட்கார்ந்து பேசுவோம்..."

பேசியபடி இருவரும் அருகில் இருந்த காபி ஷாப் சென்று அமர்ந்தனர். பல நாள் கழித்து சந்திக்கும் நண்பர்கள் பேசிக் கொள்ளும் பொதுவான விஷயங்களை பேச ஆரம்பித்தனர்... பின்,
"சரி டா விவேக் உன் தங்கச்சி நம்ம காலேஜில தானே படிக்குறா... எப்படி இருக்காம் காலேஜ் லைப்?"

"நல்லா என்ஜாய் பண்ற மாதிரி தான் இருக்கு...." என்ற விவேக்கின் மனதில் சட்டென்று அந்த எண்ணம் தோன்றியது. பாரதியும் அவனும் சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியிருந்த போதும், அன்று நடந்த விஷயம் நீரு பூத்த நெருப்பாக அவன் நெஞ்சில் கனன்று கொண்டே தான் இருந்தது. பார்த்திபன் அந்த ஆர் ஆர் பொறியில் கல்லூரியின் நிர்வாகியின் மகன்... அவனுக்கு நெருங்கிய நண்பனும் கூட...

"ஏன் பார்த்தி... உங்க காலேஜ் பக்கம் எல்லாம் போறதே இல்லையா? பேரெண்ட்ஸ் கூட எல்லாம் மீட்டிங் எல்லாம் வைக்கிற மாதிரியே தெரியலை..."

"என்னடா இவ்வளவு சீரியஸா பேசுற...என்ன விஷயம்?"

"போடா.. உன்கிட்ட சொன்னா மட்டும் என்ன நடக்க போகுது..."

"ஹே விவேக்... என்னடா இப்படி அலுத்துக்குற? அது நம்ம காலேஜ் டா.... நீ ஏன் நண்பன்டா...."

"ம்ம்ம்... நீ தான் இதை சொல்ற.. அங்கே அந்த காலேஜில எல்லாம் யார் நம்மளை மதிக்குறது?""

"என்ன விஷயம் விவேக்? ஏதாவது பிரச்சனையா?" என்றான் பார்த்திபன் சற்று தீவிரமாக.

விவேக் பாரதியுடனான சந்திப்பு பற்றியும், பின் ப்ரின்சிபாலுடன் தான் பேசியது பற்றிய விபரங்களையும் கூறினான்.

"என்னடா விவேக் இவ்வளவு நடந்து இருக்கு நீ என்கிட்டே ஒன்னும் சொல்லவே இல்லை...."

"நீ மட்டும் என்னடா செய்வ? காலேஜுக்கு ரிசல்ட்ஸ் தானே முக்கியம்... வேறென்ன வேணும்?"

"ஏன்டா... விவேக் இப்படி பேசுற? இப்போ உனக்கு என்ன வேணும்? அந்த பாரதிய வேற கிளாசுக்கு மாத்தனுமா? இல்லை கூப்பிட்டு கண்டிக்கனுமா? சொல்லு..."

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# RE: கம்பன் ஏமாந்தான் - 02varun 2013-02-26 09:46
please update
Reply | Reply with quote | Quote
# kamban yemandhanpriya.k 2012-07-09 13:27
When will you post the 3rd part ??awaiting eagerly...pls post soon :)
Reply | Reply with quote | Quote
# RE: kamban yemandhanAdmin 2012-07-11 09:41
Will post the next episode in a day or two :-)
Reply | Reply with quote | Quote
# RE: கம்பன் ஏமாந்தான் - 02Admin 2012-06-23 14:40
Sorry for the delay in publishing the next part :-(

The next part will be published on 29th June
Reply | Reply with quote | Quote
# RE: கம்பன் ஏமாந்தான் - 02Admin 2012-06-13 20:49
Really nice Vinodha... Please don't compromise Bharathi's character for any reason...
Reply | Reply with quote | Quote
+1 # RE: கம்பன் ஏமாந்தான் - 02Thenmozhi 2012-06-06 03:49
enna vinodha jet vegathila katahiya ottureenga? sema super...
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top