Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 05 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 05 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

தாக்ஷியிடம் இனி வாதிடுவதில் பயனில்லை என்று புரிந்து கொண்ட பானுமதி மாற்று வழியை யோசிக்க ஆரம்பித்தார். சதாவிடம் அலைப்பேசி அழைப்பு வந்தபோது,

“அத்தை, நான் சொன்னதை அப்பா ஒப்புக் கொண்டாரா?” என்றாள். அதாவது அவரை சம்மதிக்க வைத்து விட்டீர்களா என்று பொருள். ‘தைரியம் இருந்தால் உன் அப்பாவிடமே  நேரடியாக கேட்டுக் கொள்வதுதானே…’ என்று மனதிற்குள் பொருமியவர்,

“ம்… அவரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து விட்டேன். நீ உடனே கிளம்பி சென்னைக்கு வா“ என்றார்.

“சரி அத்தை…” என்றவள், சற்று தயக்கத்துடன்,

“அத்தை, நான் அலுவலகத்தில் இருந்து ரிலீவ் ஆக வேண்டும். நான் வரும்போது வைபவுடன் வருகிறேன்” என்றாள்.

என்ன ஒரு தெளிவு! எல்லா விசயத்திலும் மண்ணாங்கட்டியாக இருந்தாலும் கல்யாணம் என்று வரும்போது பளிக்சென்று பதில் வருகிறதே! வைபவுடன்தான் வருவாளாமே…! அவ்வளவு முன்னெச்சரிக்கை! இவள் தனியாக வந்தாள் என்றால் ஏதாவது செய்து ஆட்டத்தை கலைத்து விடுவார்கள் என்று சொல்லி தந்திருப்பான் போல!

“சரிம்மா. உன் விருப்பம்போல் கிளம்பி வா. நான் மற்ற ஏற்பாட்டை கவனிக்கிறேன்.”

பானுமதிக்கு வைபவின் திடீர் காதலில் நம்பிக்கையே இல்லை. வைசாக்கின் மரணத்திற்காக அவன் சதாவை பழி வாங்கவே இதையெல்லாம் செய்கிறானோ என்று தோன்றியது. அவனை பற்றிய இந்த சந்தேகத்தை எடுத்து கூறினாலும் அவள் இன்னும் வைபவிடம் நெருங்க வாய்ப்புள்ளது. கொஞ்சம் ஏமாந்தாலும், இந்த பெண் அவனுடன் ஓடி விடுவாள் போலிருக்கிறதே. இப்போதைக்கு நின்ஜா மோடில் செல்வது என்று முடிவு செய்து கொண்டார். அடுத்த கட்ட நடவடிக்கையை ஆலோசித்து முடிவு செய்தார். அது….?

புவன்நிருபேஷ் உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தான். அவனுடைய தேங்க்ஸ்கிவிங் மீட்டிங்க் இனிதே  நடந்து முடிந்திருந்தது. அவனுடைய பிஸினஸ் தொடர்புகள் இன்னும் கொஞ்சம் வலிமையாகின. அப்புறம் அவனுடைய உடல்நிலைகூட கொஞ்சம் முன்னேறி இருந்தது. முதுகுவடத்தில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டதில், அவ்வப்போது அவனால் எழுந்து நடக்க முடிந்தது –எல்போ க்ளட்சின் உதவியுடன்தான். இனி பிஸியோதெரபி செய்ய வேண்டும் என்று மருத்துவர் ஆலோசனை கூறியுள்ளார். அதற்கு உதவியாளர் வேண்டும்… சுப்புவால் இதை தனித்து செய்ய முடியாது! அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அலைபேசி ஒலித்தது.

“வணக்கம் நான் புவன்நிருபேஷ்!”

“ஹா… ஹா…. புவனுடைய அலைப்பேசியை புவன்தானே எடுப்பான்….”

“யாரு?… வாவ்… பானு மேடம்!. ம்… கரெக்டாதான் சொல்றீங்க! ஆனால் பழக்கம் விடமாட்டேங்குதே! சொல்லாதேன்னு தலைக்குள்ளே இன்ஸ்ட்ரக்ஸன் வந்தாலும் ஆட்டோமேடிக்காக தொலைப்பேசியை பயன்படுத்துவதுபோல் என் பெயரை சொல்லிவிடுகிறேன். சாரி…”

“சரிப்பா… எப்படி இருக்க?”

“ஆச்சு கல்யாணம் முடிச்சு ரெண்டு குழந்தையும் ஆயிடுச்சு. இன்னும் அப்படியேதான் இருக்கேன்….”

“கல்யாணம்…. குழந்தை… ஹௌ!…” பானுமேடமின் அலறல் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

“பின்னே திடீர்னு போன் பண்ணி எப்படியிருக்கேன்னு கேட்டால்..என்ன சொல்றது? என் பையன் மாதிரின்னு சொன்னீங்க… அவன் இருக்கானா இல்லையான்னுகூட திங்க் பண்ணாம…”

“போதும்பா… ரொம்பவும் புலம்பாதே! ஒரு வருஷம் இடையில கேப் ஆயிடுச்சு. அதுக்கு இந்த குற்றச்சாட்டா? உன்னுடைய போன் நம்பரை தொலைச்சிட்டேன்பா. இந்த ஏர்செல்… ரிலையன்ஸ் எல்லாம் திடீர்னு க்ளோஸ் பண்ணதுல என்னோட செல்போன்ல இருந்த நம்பர்லாம் மிஸ் ஆயிடுச்சு. நான் சரியா அப்லோட் பண்ணாம விட்டுட்டேன். போன வாரம் உன் அஸிஸ்டெண்ட ஃபோரம் ஹால்ல வச்சு பாத்தேன். அவங்கிட்டதான் வாங்கினேன்”

“போன வாரம் வாங்கிட்டு இப்ப கால் பண்றீங்க!”

“இப்படி மூக்சு விடாம கேள்வியா கேட்டா என்ன பண்றது… பெரியவங்கள தேவை ஏற்படும்போதுதான் காண்டாக்ட் பண்ணனும். சும்மா சும்மா பேசிகிட்டே இருந்தால் நல்லதில்லை…”

“பெரியவங்கன்னா… என்னையா சொல்றீங்க? மேடம்…. சரி விடுங்க. ஏதோ தேவையிருக்குன்னு சொன்னீங்கல்ல அது என்ன விசயம் சொல்லுங்க. கண்டிப்பா நான் சால்வ் பண்ண பார்க்கறேன்”

“நேர்ல பேசணும் புவன்.”

“ம்… ஓகே மேடம். நான் இப்போது சென்னைலதான் இருக்கேன்.” ஒரு தனியார் மருத்துவமனையின் பெயரை சொல்லி அங்கே வர சொன்னான்.

“உடனேயே வர்றேன் புவன்” என்று ஒப்புக் கொண்ட பானுமதி அவனை நேரில் சென்று பார்த்தார்.

வழக்கமான விசாரிப்புகள் முடிந்தவுடன், பானுமதி தன்னுடைய பிரச்சினையை விவரித்தார். முழுவதும் கேட்டபின்,

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 05 - சாகம்பரி குமார்saaru 2018-10-03 14:48
Nice update sagambari ha ha neengale pachapuloaye kothu vititu avanukaka kavalapadrengala super
Ha ha avala ivlo seekram teliya vachitenga
Ana yuva enna senju avala teror ah mathunan
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 05 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-10-03 11:50
சூப்பர் மேம்..... :clap: :clap:
ஒரு தெளிவு தன்மை வந்திருக்கு நல்லது... :yes: :-)
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 05 - சாகம்பரி குமார்Thenmozhi 2018-10-02 20:47
vithiyasamaga arambithu kathai interesting track-l poguthu Sagampari (y)

Satha guilty conscience-leye irunpangalonu yosikum pothu oru hint koduthu Vaibav pathi avangalai yosika vachutinga. Cool (y)

Buvan aapasaitha xyz nu solitinga :-) so avar enavaga porarnu terinjuka waiting.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 05 - சாகம்பரி குமார்madhumathi9 2018-10-02 18:33
wow nice epi.banumathi mam :clap: super idea kodukkareenga.buvan seivathu peria udhavi thaan.but sadha kobappada enna kaaranam endru therinthu kolla miga aavala kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi.waiting to read more. (y) :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-04 18:10
Thank you Madhumathi. Why bhuvan get into the eye of the tropical storm.... ஒன்பது கிரகமும் உச்சத்தில் இருந்தால் இப்படித்தான் வாண்டட் ஆக சிக்குவாங்க! :grin:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-04 18:14
Dear Thenmozhi,
Yes... Yes... Please follow the forth coming episodes... Bhuvan and Sadha will going to learn a lesson.
Thank you very much
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-04 18:15
மிக்க நன்றி மகி!
சதாவுக்குதாணே.... ரொம்ப தெளிவுதான்! அடுத்த எபியில் பார்க்கலாம்
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-04 18:19
Dear saaru,
Thank you very much!
yaaru... bhuvan pacha pullaiyaa...? sadhavukku kovam vandhidum!
I am also waiting to see the terrorist actions! :yes:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top