(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 11 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

வணக்கம் நட்பூக்களே.
எனது பசங்களுக்கு முதல் பருவத்தேர்வு ஆரம்பித்ததில் இருந்து விடுமறை முடியும் வரை என்னால் கதை எழுதுவதில் கவனத்தை செலுத்தமுடியவில்லை. மூன்றாம்தேதி ஸ்கூல் தொடங்கியபின்பே என்னால் முழு கவனத்துடன் கதையை உங்களுக்கு கொடுக்க முடியும் எனவே ஏதேனும் குற்றம் குறை இருந்தால் பொருத்தருள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு உங்கள் தீபாஸ்.

தீரன் நேற்று இரவு தங்கியிருந்த ரடிசியன் புளூ ஹோட்டல் அறையில் அமைச்சர் ரங்கராஜன் உடன் அமர்ந்திருந்தான்.

தம்பி நீங்க சொன்னமாதிரி தலைவரிடம் பேசிட்டேன் முதலில் யோசிச்ச தலைவர் இன்னும் ஆறு மாசத்தில் தேர்தல் வரப்போகுது இந்த நேரத்தில் பிரச்சனையில் மாட்டிகிடவானு யோசித்தார்.

நான் தான் தேர்தல் செலவுக்கு கணிசமான தொகையை இந்த ப்ராஜெக்ட் அப்ரூவல் செய்தால் சி.என்.ஜி நிறுவனம் வழங்குவதற்கு ரெடியாக இருப்பதாக கூறியிருக்கிறேன்.

தேர்தல் உறுதிமொழிகளில் இலவசமாக லக்சூரியஸ் பொருட்களை கொடுப்பதாக அறிக்கை கொடுத்துவிட்டால் மக்களின் கவனம் இலவசங்களின் பின் திரும்பிவிடும். உங்களின் சி.என்.ஜி நிறுவனத்தினுடன் ஒத்துழைத்தால் தேர்தல் செலவுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்று கூறினேன் எனவே தலைவர் ஒத்துகொண்டார்.

அதனால்தான் உங்ககிட்ட பேசவந்தேன். எத்தனை சி தருவீங்க என்று தலைவர் உங்களிடம் கேட்டு கன்பார்ம் செய்யச் சொன்னர் அதனால்தான் உடனே உங்களை பார்க்கவும் வந்துட்டேன். இங்க வருவதற்கு முன்னால் நீங்க வேலை ஆரம்பிக்க ஆக்ரமிக்க சொன்ன நிலங்களை அதற்கு இடைஞ்சல் தருவார்கள் என்று சந்தேகப்படக் கூடியவர்களை லிஸ்ட் எடுக்க ஆட்களை அனுப்பியிருகிறேன் என்றார் .

ரங்கராஜன் டீல் பேசியதற்கும் மேலேயே பணத்தை தருவதாக தீரன் சொன்னதும் ரொம்ப சந்தோசம் தம்பி சக்ஸஸ்புல்லா முடிச்சுடலாம் அப்படியே எனக்கும் தனியா கமிசன் தந்துட்டா நல்லது என்றார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அப்பொழுது ரங்கராஜனின் மொபைல் ஒலி எழுப்பியது. அதனை அட்டன் செய்த ரங்கராஜன் ம்..ஆமா இங்கயே வந்துட்டயா.. இந்த வேகம்தான் மாரியப்பா உன்கிட்ட எனக்கு பிடிச்சது ஒருநிமிஷம் லைன்ல இரு என்றவர்,

தம்பி நான் விசாரிக்க அனுப்புன ஆள் விவரத்தோட இங்கேயே வந்துட்டான்போல போனில எதையும் பேசவேண்டாம் என்று சொல்லிட்டேன்.

உங்க முன்னாடியே அவன வச்சு பேசிட்டோம் என்றால். பிறகு செலவபத்தி நமக்குள்ள பிரச்சனை வராது. மேலும் உங்களுக்கும் திருப்தியா போகிடுமில்லையா என்றார்.

ஓ ஸ்யூர்.... இருங்க செகயூரிட்டி கைஸ்கிட்ட சொல்லனும் வந்திருப்பவரின் பேர் என்ன என்று கேட்டான் தீரன்.

என்னோட வலதுகை என்று சொல்லுவான் அவன் பேரு மாரியப்பன் என்றான் ரங்கராஜன்.

அவர் கூறியதை செக்யூரிட்டியிடம் இன்பார்ம் செய்த பத்துநிமிடத்திலேயே ரூமின் கதவை தட்டினான் மாரியப்பன். அவன் வருவதற்கு ரங்கராஜனே சென்று கதவை திறந்துவிட்டார்.

உள்ளேவந்த மாரியப்பன் கைகட்டி அமைச்சரின் அருகில் நின்று கொண்டு அண்ணே நீங்க சொன்னபடி பக்கத்து ஏழு ஊரில் நம்ம கச்சி பொறுப்பாளர்களை வைத்து நிலத்தை தொழிலுக்கு லீசுக்கு எடுக்க சி.என்.ஜி நிறுவனம் வருகிறது நிலத்துகாரங்ககிட்ட பேசி கொடுக்கச் சொல்லனும் என்று சொன்னேன்.

அப்பதான், மேட்டுபாளயத்தில் இருக்கும் வானவராயர் அய்யாகிட்ட கேட்டுட்டுத்தான் அங்கிருக்கும் விவசாய கூட்டமைப்பு மொத்தமாக நிலத்தை கொடுகிறதை பத்தி எதுவும் முடிவெடுக்க முடியும் என்று சொல்வார்கள் என்கிறார்கள்.

மேலும் இப்போ காலேஜ் பசங்க கொஞ்ச பேர் சேர்ந்து மாணவர் படைன்னு ஒன்று ஆரம்பிச்சிருக்காங்க

ஊரில் எந்த காரியம் நடந்தாலும் முன்னாடிவந்து நின்னு அவங்கதொந்தரவு செய்வாங்க. அவங்களையும் விசயம் ஆரம்பிக்கிறதுக்கு முன்ன சரிகட்டனும் என்று சொல்கிறார்கள் என்றான்.

அவன் அவ்வாறு சொன்னது அந்த பெருசு வானவராயரை சமாளிக்க காசுபணம் உதவாது வேற வழியில்தான் ஏதாவது செய்யணும் நீ எதோ மாணவர் படைன்னு சொல்றேயே அது மிதுனனு ஒரு பையன் இப்போ எதுனாலும் முன்னால நிக்கிறானே அவனா? என்று கேட்டான் ரங்கராஜன்.

ஆமாங்க அந்த பையன்தான் என்றான் மாரியப்பன். அந்த பையன் என்ன செய்றான் என்றதும், படிச்சுட்டு இருக்கிறான் என்று காலேஜின் பெயரை கூறினான் அந்த மாரியப்பன்.

பெயரை கேட்டதுமே அடடே நம்ம பொண்ணு படிக்கிற காலேஜிலையா படிக்கிறான் என்றவர் ஒரு முடிவு எடுத்ததுபோல்

தம்பி நாளைகழித்து என் பொண்ணு காலேஜ் நியூ பில்டிங் ஓபனிங் செய்துவைக்க நான் போகிறேன்.

அங்கதான் இந்த மிதுனன் படிக்கிறான். நான் என்ன நினைகிறேனா நீங்களும் என்னுடன் அந்த பங்சனில் கலந்துகொண்டு உங்க ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்தால் நாடு எந்த அளவு வளர்ச்சி பெரும் என்று உங்க புள்ளிவிவரத்தை பேஸ் செய்து ஒரு ஸ்பீச் கொடுங்க

அவ்வாறு நம்ம ஸ்டூடன்ஸ் கிட்ட முந்திக்கொண்டு பேசிவிட்டால் அதன் பின் அந்த பையனால் பசங்களை அவன் பின் திரட்ட கொஞ்சம் தினற ஆரம்பித்துவிடுவான். அந்த கேப்பில் அவனை என்ன செய்யலாம் என்றும், எப்படி மடக்கலாம் என்றும் யோசித்து செய்துவிடலாம் என்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.