அவ்வளவு நேரம் யாழிசையின் கலக்கத்தை அவளின் செயல்களின் மூலமே உணர்ந்து எதையோ தன் பேத்தி தன்னிடம் மறைக்கிறாள் என்று புரிந்து, என் பேத்தியை எந்த ஆபத்தும் நெருங்காமல் பார்த்துக்கோ கடவுளே... என்று வேண்டியபடி அவளை யோசனையுடன் பார்த்துக்கொண்டே அவளை பாதுகாக்கும் கடமையை செவ்வனே செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் தன் மகனை இப்போ மட்டும் கூட்டிபோவதுடன் நிறுத்திவிடாதே சாயங்காலமும் அவள் பஸ் இறங்கும் நேரம் பஸ்ஸ்டாபிற்கு போய் கூட்டிவா! என்று கூறினார்.
இருந்தபோதிலும் தன் அருகே வந்த யாழிசை தனது கவலையை மறக்கடிப்பதற்கு, வேண்டுமென்றே தன்னை திசை திருப்புவதற்காக. தன் கன்னத்தை அழுத்தி முத்தம் கொடுக்கிறாள் என்பதனை ஒருநிமிடம் மறந்து
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
பாப்பா எத்தனைதடவை சொல்வது வயசுபிள்ளை போல நடந்துக்கிடணும் இப்படி கட்டிபிடித்து முத்தமிடுவது எல்லாம் என்ன பழக்கம் பாப்பா என்று வசவுரித்தது காற்றுவாக்கில் அவளின் காதில் விழுந்த சத்தத்தை சட்டைசெய்யாமல் “எஸ்” ஆனதை நினைத்துகொண்டு நின்றாள் யாழிசை.
தூரத்தில் அவ போகும் பஸ் வருவதை பார்த்த யாழிசை அப்பா பஸ் வந்துவிட்டது நான் போய்கொள்வேன். சாயந்தரம் காலேஜில் பஸ் கிளம்பும் முன் போன் செய்கிறேன். நான் போன்செய்த அரை மணி நேரத்துக்குள் பஸ் ஸ்டாபிற்கு வந்துவிடுங்கள் இன்று நான் வர இருட்டிடும் என்று நினைக்கிறேன் என்று கூறிக்கொண்டிருகும் போதே பஸ் அவர்களின் அருகில் வந்துவிட்டது.
கணேசப்பிள்ளை யாழியிடம், சரிமா அப்பா உன்னை கூப்பிட வருகிறேன் பத்திரமா போயிட்டுவாமா என்று மகளிடம் கூறிவிட்டு அவள் பஸ் ஏறி செல்வதை பார்த்தபின்பே அந்த இடத்தை விட்டு அகன்றார்.
யாழிசை தான் பஸ் ஸ்டாப் வரும் வழியிலும் ஸ்டாப்பில் நிற்கும் போதும் எங்கேனும் தீரனின் கார் நிற்குதோ என்று நோட்டம் இட்டுக் கொண்டேதான் இருந்தால் ஆனால் அப்படி எங்கேயும் இருப்பதுபோல் தெரியவில்லை என்றதும், கொஞ்சம் நிம்மதியும் கொஞ்சம் ஏமாற்றமும் ஒருங்கே அவள் மனதினுள் எழுந்து. ஏதோ கலவையான ஒரு மனநிலைக்கு ஆளாகியிருந்தாள்.
ஆனால் அவள் அறியாத விஷயம் ஒன்று அவளை சுற்றி அரங்கேறிக் கொண்டிருந்தது.
அவள் பஸ் ஸ்டாப்பில் புதிதாக ஒரு பழக்கடைதோன்றியிருந்தது. அவள் காலேஜ் கேண்டீனில் வேலைக்கென தடியாக இரண்டுபேர் புதிதாக சேர்ந்திருந்தனர். மேலும் அவளின் காலேஜ் பஸ் டிரைவர் புதியவனாக மாற்றபட்டிருந்தது இவையாவும் தீரனின் செயல் என்பதையும் அவள் ஓர் கண்காணிப்பு வலயத்துக்குள் வந்துவிட்டதையும் அவள் உணரவில்லை .
மேலும் நாளை ஸ்டாக் மார்கெட்டில் ஓர் பெரும் தொகை அவளின் பேரில் இன்வெஸ்ட் செய்யபட்டு அதன் மூலம் முக்கிய பங்குகள் பெரும் ஏற்றத்தை அடையப்போவதையும், அதன் காரணம் தேடப்பட்டு, அதில் அவளின் பெயர் ஸ்டாக் மார்கெட்டில் கேள்வியாக உச்சரிக்கபடுவதை அவள் அறிய வாய்ப்பில்லை. இதெல்லாம் அவள் எதிர்கொள்ளும்போது அவள் நிலை..........?.
தொடரும்
{kunena_discuss:1212}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.