(Reading time: 21 - 41 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 10 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

ற்கனவே அவளை காரில் இழுத்துபோட்டு தீரன் சென்ற விதத்தை அவளால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

அவன் அய்யாவின் மகன், தன்னை மீடியேட்டராக வைத்து அவனின் தந்தையை சந்திப்பதற்காக பேசவந்ததை பார்த்து... தவறுதலாக நான் புரிந்துகொண்டேன். அதனால் பயந்து ஊரை கூட்ட முனைந்ததனால் தன்னை அவன் காரினுள் இழுத்துகொண்டு போனான் என்ற எண்ணத்தை ஞாபக்கத்திற்கு கொண்டுவந்து நடந்ததை சகித்துக்கொள்ள முயன்றாள்.

இருப்பினும் அதனை தொடர்ந்து அவன் தன் வாயை அடைக்க கொடுத்த முத்தத்தால் உணர்ந்த முதல் ஆண் ஸ்பரிசத்தை நினைத்து வெட்கம் உண்டானது. தனது வெட்கத்தை நினைத்து அவளின் மேலேயே கோபமும் உண்டானது.

மேலும் அவளின் தொலைந்த பர்சினுள் இருந்த புது மொபைலையும் ஆயிரக்கணக்கில் பணத்தையும் பார்த்து மேலும் மிரண்டுபோயிருந்த யாழிசை “மீட் சூன்” என்ற வார்த்தையில் உடலெல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.

அவளின் படபடப்பை பார்த்த சந்தியா ஏய் என்னடி ஆச்சு உனக்கு என்று கேட்டாள்.

அவள் கேட்டதும், யாழிசை தன்னை இயல்பு போல காட்ட முயன்று அதில் தோற்றாள். ஆனால் உண்மையை அவளிடம் கூற தீரனின் வார்த்தையினால் பயந்தாள்.

எனவே கொஞ்சம் வயிற்றுவலி. இத்துடன் டான்ஸ் பிராக்டீஸ் செய்ததுவேறு மேலும் வலி அதிகரித்துவிட்டது. மதியம் என்னால் ப்ராக்டீஸ் செய்ய முடியாது. நான் லாபியில் உங்களோடு பிராக்டீஸ் செய்ய வருகிறேன் என்று கூறிவிட்டு வந்து ஓரமாக அமர்ந்து ரெஸ்ட் எடுக்கிறேன். அப்போதான் நாளைகழித்து என்னால் புரோகிராமில் நல்லா பெர்பார்ம் செய்யமுடியும். இப்போ கிளாசில் உட்கார்ந்து பாடமும் என்னால் படிக்க முடியாது என்று கூறினாள்.

யாழி ரொம்ப முடியாவிட்டால், நீ ஆப்டர்நூன் லீவ் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி போய் நல்லா ரெஸ்ட் எடுடி. நீ இல்லாட்டி நம்ம டான்ஸ் ப்ரோகிராமே சொதப்பிடும் எங்களுக்குத்தான் ப்ராக்டீஸ்தேவை, நீ டைரக்டா இனி ஸ்டேஜில் பெர்பார்ம் செய்தால் போதும். முதலில் உன் இந்த மூன்றுநாள் பிரச்சனை நீ ரெஸ்டில் இருந்தாலே முடிவுக்கு வந்துடும் என்று கூறினாள்

சந்தியா அவளை இப்போ வீட்டிற்கு கிளம்பிப்போ என்று கூறியதுமே வீட்டுக்கு இப்போ போனால் தனியா அவுட்பஸ்ஸில் போகணுமே.... காலேஜ் பஸ் என்றாள் தீரமிகுந்தனை தவிர்த்துவிடலாம் , என்று மனதினுள் நினைத்தவள், இல்ல சந்தியா நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவினிங் காலேஜ் பஸ்லயே போய்கொள்கிறேன் என்று கூறிவிட்டு லஞ்ச் பாக்சை எடுத்துகொண்டு சாப்பிட சென்றாள் சந்தியாவுடன்.

என்றும் இல்லாதவகையில் யாழிசை மிகவும் அமைதியாக யோசனையுடனே இருப்பதை பார்த்துகொண்டிருந்த சந்தியாவிற்கு யாழிசை ரொம்ப டிஸ்டப்டாக இருப்பதாக மனதில் பட்டது, என்னவாக இருக்கும்.... ஒருவேளை அந்த தீரமிகுந்தன் அவளிடம் வேறுஎதுவும் பிரச்சனை செய்திருப்பானோ? என்ற நினைத்தாள்

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஆனால் சே...சே... வயிறு வலி ரொம்ப இருக்குதுபோல என்னிடம் வேறு எதுவும் பிரச்சனை என்றாள் சொல்லியிருப்பாளே!, என்னிடம் எதையும் மறைக்கமாட்டாள் என்று எண்ணியபடி சாப்பிட்டுமுடித்துவிட்டாள்.

யாழியிடம், என்னடி இன்னும் சாப்பிடாமல் அப்படியே வச்சுகிட்டிருக்க... ரொம்ப வயிறுவலிக்கா? நீ சாப்பிட்டுகொண்டு இரு, நான் போய் உனக்கு ஒரு செவனப் வாங்கிகொண்டு வருகிறேன். அதை குடித்தாள் கொஞ்சம் வலிகேட்கும் என்று எழுந்து சென்றாள்.

அப்பொழுது யாழிசை வைத்திருந்த மொபைல் மீண்டும் அழைத்தது. புது எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும் பயத்துடனே அதனை அட்டன் செய்தால் அவள்.

அவளிடம் மிஸ் யாழினி..? என்று அறிமுகமில்லாத குரலில் யோசனையுடன், ம்...நான்தான் நீங்க என்று கேட்டாள் யாழிசை.

நான் மிஸ்டர் தீரமிகுந்தனின் செக்ரட்ரி பேசுகிறேன் என்ற மாதவன் உங்க பர்ஸ் உங்களிடம் கிடைத்துவிட்டது அல்லவா. சாரிமேடம் அதில் இருந்த உங்க போனையும் ஏ.டி.எம் கார்டையும் உள்ள வைக்காம விட்டாச்சு. நீங்க காலேஜ் முடிந்ததும் உங்க காலேஜுக்கு அருகில் இருக்கும் காபிஷாப்புக்கு வரமுடியுமா? அப்படிவந்தால் அதை நான் உங்களிடம் ஒப்படைத்துவிடுவேன் என்று கூறினான்.

அவன் அவ்வாறு கூறியதும் முதலில் தயங்கிய யாழிசை, சார் என் பர்ஸில் புதுசா ஒரு போனும் ஆயிரகணக்கில் ரூபாய்களும் இருக்கு அந்த போனில் என்னுடைய போன் மெமரியில் உள்ள அனைத்து காண்டாக்டுகளும் பதியப்பட்டு இருக்கு இதற்கு என்ன அர்த்தம்.

எனக்கு இது எதுவும் தேவையில்லை. என்னுடையதை என்னிடம் தந்துவிடுங்கள். இந்த மொபைலில் உள்ள காண்டாக்டு நம்பர்ஸ் எல்லாத்தையும் உங்களின் கண் முன்னேயே டெலிட் செய்துவிட்டு அத்துடன் இதில் இருக்கும் அமவுன்டையும் உங்களிடம் கொடுத்துவிடுகிறேன் என்றாள் யாழிசை.

மிஸ் யாழிசை! அந்த போனை எங்க பாஸ் உங்களுக்கு பிரசன்ட் பண்ணியிருகிறார். அதை நீங்க யூஸ் பண்ணனும் என்று அவர் விரும்பியதால்தான் உங்க பழைய போன் காண்டாக்ட்ஸ் எல்லாத்தையும் உங்களின் நியூ போனில் பதிந்துவிட்டு பர்சினுள் பழையதை வைக்காமல் விட்டுவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.