மேலும் உன்னை வைத்து, என் அம்மா என்னிடம் கொடுத்த என் டாட் அதுதான் உங்க வானவராயர் அய்யாவிடம் அவங்க குடும்ப பாரம்பரியமான மிகவும் மதிப்புவாய்ந்த ஆண்டிக் டைமன்ட் நகையை உன் மூலமே அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
சோ! உன்னை நான் இதன் மூலம் தரம் பார்க்க நினைத்தேன். நீ அடுத்தவர்களின் பணத்தை தொடக்கூட மாட்டாய் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
இனி உன் மூலம் நான் அதனை அவர்களிடம் சேர்க்கும் நடவடிக்கையை தைரியமாக செய்யலாம் என்றான்.
அவன் அவ்வாறு சொல்லியதும், அப்போ உங்களுக்கு என்னை பார்த்ததும் அடுத்தவங்க பொருளை அபகரிக்க முயல்பவள் போல் தெரிந்ததா? என்று கோபமாக கேட்டாள்.
அவள் அவ்வாறு கேட்டதும், தீரன் சொன்னான் எனக்கு உன்னை பார்த்ததும் அப்படியெல்லாம் தோனவில்லைதான். இருந்த போதிலும் வெளித்தோற்றம் வைத்து ஒருவரை கணிக்க முடியாது என்று எனக்கு வாழ்க்கை கத்துகொடுத்துள்ளது. அதனாலேயே உன்னை எனக்கு சோதிக்க விருப்பம் இல்லாவிட்டாலும் அவ்வாறு செய்தேன்.
உன்னை முதல் முதலில் பார்த்தபோதே நீ என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டாய் என்பது மறுக்கமுடியாத உண்மை என்றவன் , அவள் அறைந்த கன்னத்தை தடவியபடி அவளிடம் கூறினான். மேலும் நீ பரதம் ஆடுவாய் என்று தெரிந்ததும் எனக்குள் உன் மேல் உள்ள ஆர்வம் இன்னும் அதிகமானது ஏனெனில் என் மாம் ஒரு ப்ரோபாசனல் கிளாசிகல் டான்ஸர்.
அதையெல்லாம் வெறும் அட்ராக்ஸன்தான் என்று உதறித்தள்ளிய நேரத்தில் மீண்டும் என் அப்பாவை நான் தேடிவந்த இடத்தில் அவரின் குடும்பத்தில் நீயும் ஒருத்தியாக இருப்பதை கண்டதும் ஏனோ என்னுள் உன்மேல் உள்ள ஈர்ப்பு அதிகமாகியது.
கடைசியாக நீ கனவிலும் நினைத்துபார்த்திராத பணத்தை உன் கைகளில் நான் கொடுத்தேன். அதற்கு துளியும் ஆசையாக பார்க்காமல் இதோ என்னிடமே திருப்பி கொடுத்துவிட்டாய் என்று தம்கையில் வைத்திருந்த செக்கை காண்பித்தான். அதிலிருந்து உன் குணம் என்னை மொத்தமாக உன்னிடம் வீழ்ந்துவிட்டது,
யாழிபேபி ஐ.லவ்.யூ .கூடிய விரைவில் உன் பதிலை நான் எதிர்பார்த்கிறேன் என்று கூறினான் தீரன்.
யாழிசைக்கு அவன் அவ்வாறு கூறியதும் படபடப்பாக ஆகிவிட்டது அவள் டெண்சனவதை பார்த்த தீரன் ரிலாக்ஸ் பேபி... என்றவன் அவளின் கரம் பிடித்து அழுத்திவிடன்.
அபொழுது அவளை காலையில் காரில் ஏற்றிய இடத்திலேயே இறகிவிட கார் இப்பொழுது நின்றது .
கார் நின்றதும் வேகமாக கதவைதிறந்து இறங்கியவள், அவளின் மொபைலை இன்னும் வாங்கவில்லை என்பதனை உணர்ந்து திரும்பி அதை கேட்க நினைக்கும் போது கார் இருந்தபக்கம் யாரோ வரும் அரவம் தெரிந்ததும் வாங்கமலேயே ஓடிவிட்டாள்.
தீரன் வேண்டுமென்றேதான் அவளின் மொபைலை அவளிடம் கொடுக்கவில்லை அவளின் கையெழுத்து அவனுக்கு தேவையாக இருந்தது. இதோ அதனை வாங்கவிட்டான். அதனை வைத்து அதேபோன்ற பல கையெழுத்தை அவனே இட்டு அவளுக்கு தெரியாமலேயே அவளை பலகோடிகளின் அதிபதியாக்கப் போகிறான் அதனால் அவள் சந்திக்கப் போகும் பல அதிர்ச்சிகளை யாழிசை அறியவில்லை.
வீட்டிற்கு வந்த யாழிசைக்கு தூக்கம் தொலைந்து போனது. தீரன் அவளின் மனதினுள் சலனத்தை விதைத்திருந்தான். அதனை உணர்ந்த யாழிசை நானா இப்படி தடுமாறுவது ம்...கூம் நான் ஒன்றும் அவ்வளவு பலவீனமானவள் கிடையாது. அவனை இனி சந்திக்காமல் அவனிடம் இனி மாட்டாமல் இருந்துவிட்டால் நான் அவனை மறந்துவிடுவேன் என்று அவளுக்குள்ளேயே அவள் கூறிக்கொண்டாள்.
எனவே இனி தனியாக எங்கும் செல்லகூடாது என்றும் தெரியாத நம்பரிலிருந்து போன் வந்தால் அட்டன் செய்யகூடாது என்றும் அவனின் நினைவு வரும்போதெல்லாம் மனதினுள் சஸ்டிகவசத்தை கூறி அவனின் நினைவுகளை விரட்டவேண்டும் என்று முடிவெடுத்தாள் யாழிசை.
மறுநாள் காலை, யாழிசை தனது காலேஜ் பஸ் ஸ்டாபிற்கு தன்னை சைக்கிளில் கூட்டிக்கொண்டு போய் இறக்கிவிடச் சொல்லி தன் அப்பாவை கூப்பிட்டதும் அவரும் சட்டையை மாற்றி கொண்டு கிளம்புவதை பார்த்த ருக்குமணிபாட்டி,
தனது மகன் கணேசப்பிள்ளயிடம் உனக்கு என்ன வயசு திரும்புதா? அவ சொல்றான்னு சைக்கிளில் பின்னால் வச்சுகிட்டு பஸ் ஏத்திவிடவா போற? .
இத்தனை நாள் அவ ஆடாத ஆட்டத்தையா புதுசா நேத்து உன் மகள் ஆடிட்டா? அதுதான் அவ எட்டுவயசில இருந்து ஆடிட்டுத்தானே இருக்கா. இப்போ என்னமோ புதுசா ஆடி கால் வலிக்குற மாதிரி பம்மாத்து பண்ணிக்கிட்டு பஸ் ஸ்டாண்டில் மகாராணிய சைக்கிளில் ஏத்திட்டுபோய் இறக்கனும் என்று கொஞ்சம் கூட இறக்கம் இல்லாம வயசான காலத்துல உன்னை டபிள்ஸ் ஏத்தி சைகிள்ள விடச்சொல்கிறாள். நீயும் சட்டைய மாத்திட்டு கிளம்புற என்று தன் மகனையும் பேத்தியையும் வசைபாடினாள்.