(Reading time: 21 - 41 minutes)

பார்பதற்கு அவளை அவன் சாதாரணமாக பிடித்து கூப்பிட்டு போவதாக இருப்பதுபோல் இருந்தாலும் அவன் பிடியோ இரும்பாக இருந்தது. இவ்வளவு அருகாமையில் அவனின் கைவளைவில் பொதுஇடத்தில் அவன் தன்னை நடத்தும் விதத்திலும் மேலும் அவன் தன் அக்கவுண்டில் இருப்பதாக கூறிய பெரும் தொகையும் நினைத்து இது எதில் கொண்டுபோய் முடியுமோ! என்று பெரிதும் யாழியை கலவரப்படடு இருந்தாள். யாழிசைக்கு மூளை என்ன செய்வது என்று தெரியாமல் வேலை நிறுத்தம் செய்துவிட்டது .

படிக்கு வந்தவன் அவளுடன் இறங்கவும் வாசலில் ரெடியாக இருந்த காரில் பின் கதவை திறந்தவன் அவளை அதில் ஏற்றி பின் தானும் அவளுடன் ஏறி அமர்ந்தான் தீரன்.

என்னோட காரை ஏன் எடுத்து வரல என்று கேட்டான் தீரன், பாஸ் உங்களை இங்கே தேடி வந்துட்டாங்க... உங்க காரை அடையாளம் வைத்து தேடி வந்திருக்காங்கனு நினைக்கிறேன். அதனால் தான் நான் என் காரை எடுத்துகொண்டு உங்களை உடனே வரச்சொல்லி அவசரப்படுத்தினேன் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும். யாழிசையுடன் நான் இருப்பதை யாரும் பார்கவில்லைதானே! யாழி பேபி அவங்க கண்ணில் பட்டுவிடக் கூடாது என்றான்.

அப்பொழுது யாழி முதல்ல எனக்கு பதில் சொல்லுங்க என்னை சுற்றி என்னதான் நடக்குது என்று கேட்டாள்.

தீரன் அவளின் புறம் திரும்பி டோன்ட் பியர் பேபி... என்றவன் திரும்பவும் அவளிடம் அந்த செக்கை நீட்டி இதில் சைன் போட்டுடு என்றான்.

யாழிசை கலவரமாக தீரனை பார்த்ததும் அப்படி பார்க்காதே .நான் உன் அக்கௌண்டில் போட்ட அமௌவுண்டை நீ எனக்கு செக் போட்டு கொடுத்தாய் என்றால் பிரச்ச்சனை சால்வ் ஆகிடும் இதோ பார் உன் அக்கவுண்டில் இன்று காலையில் தான் நான் அமௌவுண்டை டிரான்சர் செய்தேன். காபி ஷாப்பில் பில் பே பண்ணியதற்கு அமோவுன்ட் ரெடியூஸ் ஆனதிற்கும் மீதம் உன் அக்கவுண்டில் உள்ள பாலன்ஸ் அமோவுன்ட் பற்றிய மெசேஜ் வந்திருக்கு பார், பார்த்திட்டு நான் கூறுவதை அக்சப்ட் செய்வதா? வேண்டாமா? என யோசி என்றான் தீரன்.

தீரனிடமிருந்த தனது மொபைலை வேகமாக வாங்கியவள் அதில் இருந்த மெசேஜ்ஜை ஓபன் செய்து பார்த்தாள் அதன் இருப்புத்தொகை இரண்டு கோடியே ஆறாயிரத்து ஐநூறு என்று இருந்தது யாழிசையால் இன்னும் நம்ப முடியவில்லை அப்பொழுது ஒரு நிமிடம் காரை நிறுத்துங்கள் என்று கத்தினாள்

மாதவன், கிரீச்.... என்று காரை நிறுத்தியதும் யாழிசை அவள் அமர்ந்திருந்த பக்கத்தில் இருந்த டோரினை திறக்க முயன்றாள் ஆனால் அது லாக் ஆகி இருந்ததால் ஓபன் ஆகவில்லை.

நான் நினைத்தால்தான் நீ காரைவிட்டு இறங்கமுடியும் என்று அவளின் தவிப்பை சுவாரஸ்யத்துடன் வேடிக்கை பார்த்தபடி கூறினான் தீரன்.

அவன் அவ்வாறு கூறியதும், கார் நின்றிருந்த இடத்தின் அருகில் இருந்த ஏடிம் மெசின் இருக்கும் இடத்தை சுட்டிகாட்டிய யாழிசை நீங்க வேண்டுமானால் என்னுடன் அங்கே கூட வாங்க நான் என் கார்டை யூஸ் செய்து அதில் பேலன்ஸ் செக் செய்யணும் என்றாள் .

ஓகே என்ற தீரன் அவன் அமர்ந்திருந்த பக்கம் உள்ள கதவை ஓபன் செய்து இறங்கியவன் அவள் இறங்க கை நீட்டினான் ஆனால் அவள் அதனை அலட்ச்சியபடுத்தி இறங்க முயன்றாள்.

தீரனோ அவள் இறங்கிய மறுநிமிடம் அவள் தோளில் கைபோட போகவும், முறைத்து பார்த்து விலகி நடந்தவளின் பின்னாலே சென்ற தீரனின் உதட்டில் புன்னகை அரும்பியது.

உள்ளே சென்றதும் தீரன் கார்டை அவளிடம் கொடுத்தான் அவள் கார்ட் யூஸ் செய்து பேலன்ஸ் பார்த்த மறுநிமிடம் அரண்டே போனால் ஏனெனில் அதிலும் பாலன்ஸ் இரண்டு கோடியே ஆறாயிரத்து ஐநூறு இருபதாக காட்டியது.

நடுக்கத்துடன் தீனை ஏறிட்டு பார்த்த யாழிசையின் கையோடு கை கோர்த்த தீரன் அவளை காருக்கு கூட்டிகொண்டு வந்தான் இயந்தரமாக அவனுடன் வந்தவளை முன்பு போலவே காரின் பின் டோரை திறந்து உள்ளே தள்ளி அமரச்செய்தவன் அருகில் அவனும் அமர்ந்ததும் கார் விரைந்து செல்ல ஆரம்பித்தது.

யாழிசை கொடுங்க அந்த செக்கை என்று அவனிடம் இருந்து வாங்கியவள் வேகமாக தனது கையெழுத்தை அதில் போட்டு இந்தாங்க... நீங்க என் அக்கவுண்டில் போட்ட பணத்திற்கான செக் இனி இதேபோல் என்னிடம் பணத்தை காட்டி விளையாட நினைக்காதீர்கள் என்றாள்.

அவள் கனவிலும் நினைத்துபார்த்திராத பணத்தை அவளின் கைகளில் கொடுத்தால் ஆசையாக பார்க்காமல் அதிலிருந்து விலகவே நினைக்கும் அவளின் குணம் அவனை கவர்ந்தது.

இருந்தாலும் அவளின் அச்சத்தை கண்டு இனி அவளை விட்டுவிட முடியாதபடி அவளையும் தன் ஆட்டத்திற்குள் இழுத்துவிட்டாகிவிட்டது. இனி அவளை என்னுள் வைத்து காப்பதுதான் இதற்கு தீர்வு என்று நினைத்தான் தீரன்.

மேலும் தன்னை அவள் நெருங்க வேண்டுமானால் இதுபோன்ற அதிரடியான செயல்கள் உதவாது. அது அவளை என்னிடம் இருந்து அச்சப்பட்டு தள்ளியே நிறுத்தும். இனி அவளை வைத்து தான் ஆடும் ஆட்டத்தை அவள் அறியாமலே செய்யவேண்டும் என முடிவெடுத்தான்.

எனவே தீரன் சாரி...பேபி உன் பேங்க்அக்கவுண்டில் நான் மிஸ் பீகேவ் செய்தது என் தவறுதான் சாரி.... நீ உன் பர்சை என் காரில் விட்டுச் சென்றதும் அதில் உள்ள உன் மொபைலை பாத்தேன் அதென்ன ஏ.டி.எம் பாஸ்வேர்டை கூட உன் காட்டில் உரையில் எழுதி வைத்திருகிறாய் அதெல்லாம் எவ்வளவு கான்பிடன்சியளாக வைத்திருக்கனும் என்பதை உனக்கு புரியவைக்கவே இவ்வாறு செய்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.