Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 04 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 04 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

தாக்ஷிக்கு விஜயா மேடமை ரொம்பவும் பிடித்து போனது.  தன்னுடைய துயரத்தை ஒதுக்கி வைத்து விட்டு அவர்கள் ஆறுதலாக பேசியது விரும்பத் தக்க குணமாக தோன்றியது. விஜயா சதாவை பார்த்து விட்டு சென்ற ஒரு வாரம் கழித்து அத்தையுடன் அவர்களை சந்தித்தாள்.

திருவல்லிக்கேணியில் வீட்டில் இருந்த விஜயாவிற்கு சதாவை பார்க்கவும் ஆச்சரியமாகியது.

“சதா… என்னவொரு சர்ப்ரைஸ். நானே உன்னை பார்க்கலாமான்னு யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றார்.

“நீங்கள் என்னை வந்து பார்த்து விட்டீர்கள் மேடம். நான் உங்களை வந்து சந்திப்பதுதான் முறை” என்றாள்.

“எதுவானால் என்ன? இரண்டு பேரும் சந்தித்தாகி விட்டது. நல்லாயிருக்கியா?” என்றவர், அருகில் இருந்த பானுமதியை பார்த்து  வணக்கம் சொன்னார்.

“இப்படி உட்காருங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.” என்று கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்றார்.

சதா அங்கு இருந்த சூழலை கவனித்தாள். கூடத்தின் ஒரு மூலையில் வைசாக்கின் புகைப்படம் டேபிளில் வைக்கப்பட்டு மாலை சூட்டியிருந்தது. அவளுக்கு மனது கலங்கியது.

“ஏதாவது சடங்கு செய்திருப்பார்கள் போல” என்று அத்தை அவளிடம் கிசுகிசுத்தார்.

அதற்குள் அங்கு வந்த விஜயா “ஒரு போன் செய்ய வேண்டியிருந்தது.. பேசிவிட்டேன். ம்…. சொல் சதா…. காலேஜிற்கு போகிறாயா?”

“இல்லை… மேடம். இனியும் போக மாட்டேன். அப்பாவிடம் காலேஜிலிருந்து விசாரித்தார்களாம். என்னால் காலேஜிற்கு கெட்ட பெயராகிவிட்டது… ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்களாம்.”

“உன் அப்பா சொன்னால் கேட்க மாட்டார்களா?”

“எனக்கு வேண்டாம் என்று தோன்றி விட்டது மேடம். அங்கு சென்று யாரையும் ஃபேஸ் செய்ய முடியாது என்று தோன்றுகிறது.”

“அப்படி செய்யக் கூடாது. உன்மீது எந்த தவறும் இல்லையே?”

“ஆனால் அப்படித்தான் பேசுகிறார்கள்…”

“அவள் இப்படி சொல்வதால் எங்க அண்ணன் இவளை எங்கேயாவது வடஇந்தியா பக்கம் அனுப்பிவிடலாமா என்று ப்ளான் செய்கிறார். அங்கே ஜெய்பூரில் என் கணவரின் தங்கை இருக்கிறார்.”

“இடம் மாறுவது நல்லதுதான். ஆனால் எப்போதாவது இங்கு வந்துதானே ஆக வேண்டும்”

“அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோம். உங்களிடம் சொல்லிவிட்டு போகலாம் என்றுதான் வந்தோம்” என்று பானுமதி சொல்ல, சதா கரம் குவித்து,

“மேடம், உங்களுக்கு என்னால் ஏற்பட்ட பாதிப்பிற்கு வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். நாங்கள் கிளம்புகிறோம்” என்று விடைபெற்றாள்.

“எப்போது ஜெய்பூர் போகப்போகிறீர்கள்?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“நாளை மாலை கிளம்புகிறோம்”

சதாக்ஷிக்கு ஜெய்பூர் புதிய ஊர் அல்ல. பிங்க் சிட்டி என்று அழைக்கப்படும் அந்த ஊர் ஒரு யுனீக்கான தோற்றமுடையது. அந்த ஊரில் உள்ள அனைத்து கட்டிடங்களும் பிங்க் வண்ண கற்களால் கட்டப்பட்டது. பிங்க் விருந்தோம்பலை குறிப்பதால்,  ராணி விக்டோரியாவும், வேல்ஸ் இளவரசரும் இங்கு வந்தபோது அவர்களை வரவேற்கும் விதமாக மஹாராஜா ராம்சிங்கின் கட்டளைப்படி இந்த வண்ணம் பூசப்பட்டது. இன்றுவரை அந்த கொள்கை நீடித்திருக்கிறது.

அங்கிருக்கும் புராதன கட்டிட வடிவமைப்பு அவளுக்கு மிகவும் பிடிக்கும். பல விழாக்கள் அங்கு நடக்கும்போது  சென்றிருக்கிறாள். ஆம்பர் கோட்டை, பேலஸ்… போன்றவற்றை கண்டு களித்திருக்கிறாள்.

இப்போது ஒளிந்து கொள்ள இடம் தேடி வந்ததுபோல அங்கு செல்வதுதான் தயக்கமாக இருக்கிறது. அடுத்த வருடம்தான் புதிதாக ஒரு படிப்பில் சேர முடியும் என்பதால் அங்கு சென்று அவளுக்கு ஒரு வேலையை தேடிக் கொள்ள வேண்டும்.

இங்கே அத்தையின் உறவினர்கள் நல்லவர்கள் என்றாலும் அவளுக்கு தனித்து இருக்கவே விரும்பம். அவளை கவலைப்படுத்திய இன்னொரு விசயம் அவளுடைய அப்பா அவளிடம் பேசவேயில்லை. அவரும் அவளை வெறுத்து ஒதுக்குகிறாரா?

அவள் இதுபற்றி பானுமதி அத்தையிடம் கேட்டபோது,

“அப்பாவிற்கு கோபம் எல்லாம் இல்லை செல்லம். உன்னை விட்டு பிரிய  நேரிட்டதே என்ற கவலைதான். “

“அதற்காக பேசாமல் அனுப்பி வைப்பார்களா அத்தை? அவர்தானே இந்த முடிவை எடுத்தார்”

“அது வந்து… உன்னை பெண் கேட்டு வந்தார்கள். இந்த சூழலில் இப்போதைக்கு உனக்கு திருமணம் வேண்டாம் என்றுதான் உன்னை வெளியூருக்கு அனுப்பி வைத்துவிட்டார்.”

“அத்தை யார் அப்படி கேட்டார்கள்?”

“உனக்கு எதற்கு அதெல்லாம்… அவருக்கு அந்த சம்பந்தம் பிடிக்கவில்லை. உனக்கும் காலேஜிற்கு செல்ல விருப்பம் இல்லை. அதனால்தான் இப்படி செய்ய வேண்டியதாகி விட்டது”

“நான்தானே தப்பு செய்தேன்… அப்பா எதற்கு பயப்பட வேண்டும்”

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 04 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-09-26 10:48
ரொம்ப நல்ல எபி மேம்.... :clap: :clap:
தாவரவியல் மனிதர்கள் சதாவை போன்றவர்கள்....
விலங்கயல் மனிதர்கள் வைபவ் போன்றவர்கள்.. எனக்கு வைசாவ் மேல நம்பிக்கையே இல்லை மேம்...
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 04 - சாகம்பரி குமார்saaru 2018-09-26 10:43
Nice sagambari
Ishu Sadha serum irandavadu tavaru
Kutraunarchikaga life sacrifice panna porara
Vibav oru vela palivaanga???
Ha ha hero va Idula vittu avanuku Ella carousing vara vaika poreengala
Intresting
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 04 - சாகம்பரி குமார்Srivi 2018-09-25 18:58
Sadha Voda kutra unarchi ippide oru twist agiruche.. vaibhav Kalyanam pannikaren sonnadhu sadhava pazhi vangava? So eppo hero heroine meeting vara pogudhu.. ungaloda character Analysis good one sis..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 04 - சாகம்பரி குமார்madhumathi9 2018-09-25 18:29
wow nice epi.sadhaashi ean ippadi oru mudivu edukka vendum.idhi kaadhal illai. Bayam,antha veettirkku eathaavathu parikaaram pannum ennam thaan irukku. Paarppom enna nadakja poguthunnu.waiting to read more. :thnkx: :clap: :GL: (y)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top