(Reading time: 21 - 41 minutes)

அதுக்குள்ள போகணும் என்று அவசரப்பட்டால் எப்படி ? இன்னும் நான் உன்னிடம் பேசவந்ததை பேசி முடிக்கவில்லை என்றவன். உனக்கு உன் பழைய போன் வேணும் அவ்வளவுதானே என்றவன் அவளின் முன்னே அவளின் போனை எடுத்தவன் அதில் இருந்த அவளின் சிம் கார்டை எடுத்துவிட்டு அதனை ஒரு ஸ்மால் ஜிப்லாக்கவர் ஒன்றில் போட்டு தன வேலட்டினுள் வைத்து விட்டு அவளின் போனை அவளின் புறம் நாகர்த்தி எடுத்துக்கோ என்றான்.

என் சிம்மை ஏன் எடுத்தீங்க என்று கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் அவள் கையில் இருந்த பர்சை வெடுக்கென பறித்தவன் அந்த ரூபாய் நோட்டுகளையும் இரண்டு மொபைல்களையும் அதனுள் வைக்க முயன்றவன் இடம் பற்றாகுறையால் ரூபாய் தாள்களை அவனின் வேலட்டினுள் அடுக்கியவன் இப்பொழுது கிடைத்த இடைவெளியில் இரண்டு மொபைலையும் அதில் திணித்து ஜிப் போட்டு அவளிடம் நீட்டினான்.

அவள் தன்னிடம் நீட்டிய அவளின் பர்சை யோசனையுடன் வாங்கி அதை திறந்து அதில் இருந்த இரண்டு மொபைல்களையும் வெளியில் எடுத்தவள் தனது மொபைலை எடுத்துபார்த்தவள் அதில் சிம் கார்ட் இல்லாததை கண்டு எதுக்கு என் சிம்மை எடுத்தீங்க? அதை கொடுங்க எனக்கு தெரிந்தவங்க எல்லோரும் என் அந்த நம்பருக்குத்தான் பேசுவாங்க என்றாள்.

அவள் கேட்டதற்கு எந்த பதிலும் கூறாமல் தன்னையே பார்த்துகொண்டிருந்த தீரனை பார்த்ததும் டைம் ஆகுது காலேஜ் விட்டுநான் எப்போதும் போகும் நேரத்திற்கு வீட்டிற்கு போகணும் இல்லாவிட்டால் பாட்டி பயந்துடும் இன்னும் அரை மணி நேரத்தில் நான் பஸ் ஏறிவிடவேண்டும் என்றாள்.

அப்போ நான் உனக்கு கொடுத்தது எதுவும் வேண்டாம் அப்படித்தானே என்றான் தீரன்.

அவன் அவ்வாறு கூறியதும் விடிய விடிய ராமாயணம் கேட்டும் சீதைக்கு ராமன் சித்தப்பான்னு சொன்ன கதையால்ல இருக்கு நீங்க பேசுறது. முதலில் என் சிம் கார்டை கொடுங்க அதில் என் காண்டாக்ட்ஸ் எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணிட்டு நீங்க என் பர்ஸில் வைத்திருக்கும் மொபைலை ரீபுட் செய்து அதனை உங்களிடம் கொடுக்கிறேன் என்றாள்.

அப்போ ஓகே என்றவன் செக்புக்கை எடுத்து அதை நிரப்பி இந்தா இதில் சைன் பண்ணி கொடு என்று அவளிடம் நீட்டினான்.

அதை வாங்கி பார்த்தவள் அதில் டூ குரோர்ஸ்க்கு அவள் செக் கொடுப்பதாக நிரப்பப்பட்டு இருப்பதை பார்த்தவள்

என்ன திரும்பத்திரும்ப என்னிடம் விளையடுறீங்களா? என் அக்கவுன்டில் மொத்தமே சிக்ஸ்தௌசன்ட் எயிட்ஹன்ட்ரெட் ரூபீஸ் தான் இருக்கு என்னிடம் போய் கோடிகணக்கில் செக்கில் சைன் செய்யச்சொல்கிரீர்களே நீங்க என்ன லூசா? என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் என்ன சொன்ன உன் அக்கவுண்டில் வெறும் ஆயிரங்கள் மட்டும்தான் இருக்குதா? அதில் குரோர் கணக்கில் பணம் இருக்குதுன்னு நான் சொல்கிறேன் யார் சொல்றது சரின்னு பார்ப்போமா என்றவன் அவளது போனை எடுத்து அதிலிருந்து தான் எடுத்த சிம்மை திரும்பவும் அதில் போட்டு ஆக்டிவேட் செய்தவன் இயல்பாக அவளின் அக்கவுன்ட் இருக்கும் பேங்கின் பேலன்ஸ் பார்பதற்கு என்று கொடுக்கப்பட்ட நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுத்து, அவளிடம் அதில் வந்த மெசேஜ்ஜை காண்பித்தான்.

அவள் அக்கவுண்டில் பலகோடி ரூபாய் பாலன்ஸ் இருப்பதாக பார்த்ததும் அவளுக்கு தலையே சுற்றியது. இது எப்படி சாத்தியம் என்றவள், இதை நான் நம்ப மாட்டேன். நீங்கள் என்னை ஏமாற்றுவதற்கு ஏதோ செய்து இருக்கிறீர்கள் என்று கூறினாள்.

அவள் அவ்வாறு கூறியதும், லுக் பேபி உன் அக்கவுண்டில் பணத்தை போட்டதே நான்தான். உனக்கு சந்தேகம் இருந்தால் அதை உன் கண் முன்னாலேயே இன்னும் ஒருதடவை புரூப் பண்றேன் என்றவன் அவளின் பர்சை எடுத்து அதில் இருந்த ஏடிஎம் கார்டை எடுத்தவன் ம்...வா என்றவன் நேராக கவுண்டருக்கு போனான்

பில் பே பண்ணனும் கார்ட் அக்சப்ட் செய்வீங்க தானே என்று கேட்டதும் சுயூர்... சார் என்றவர் கார்ட் சுவைப் செய்ய அவனின்புரம் சுவைப் மெசினை திருப்பி வைத்தார் அந்த கவுண்டரில் இருந்தவர்.

அப்பொழுது அவளது கார்டை அவளிடம் கேட்காமலேயே அவளின் கையில் இருந்த பர்சை பிடுங்கி எடுத்து அதன் பாஸ்வேர்டை யூஸ் செய்து சுவைப் செய்தான்.

பின்பு ம்.. வா போகலாம் என்று இரண்டு எட்டு வைத்தான் அவள் அசையாமல் அங்கேயே நின்றுவிட்டதை இரண்டு எட்டு முன் வைத்தவன் உணர்ந்து திரும்பி அவளை பார்த்தான்.

அவள் விழிகளில் ஏன் அங்கேயே நிற்கிறாய் என்ற கேள்வி எழுப்புவதை பார்த்தவள் புரூப் பண்றேன்னு சொனீங்க என்றாள் யாழி.

திரும்பவும் அவளின் அருகில் வந்தவன் உன் அக்கவுண்டில் இருந்து இப்போ நான் பில் பே செய்ததால் அமோவுன்ட் ரெடியூஸ் ஆனதுக்கு உன் அக்கவுண்டில் இருக்கும் பேலன்ஸ் அமோவுண்டும் பற்றிய மெசேஜ் வரும் இல்லையா அதை பார்.

என்னால் ரொம்ப நேரம் இங்கே இருக்க முடியாது என்றவன் அவளின் சம்மதம் இல்லாமலேயே அவளின் தோளில் கை போட்டு தன்னுடன் இழுத்துச்சென்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.