(Reading time: 21 - 41 minutes)

மேலும் அந்த போனின் பவுச்சில் உங்களின் ஏடிம் கார்ட் இருப்பதை இப்போதுதான் பாஸ் பார்த்தார் அதனால்தான் அதை உங்களிடம் ஒப்படைக்கசொல்லி என்னிடம் கொடுத்தார்.

பர்சை வாட்ச்மேனிடம் கொடுத்து உங்களிடம் கொடுக்க வந்தபோது சந்தேகத்தில் ஆயிரம் கேள்விகளில் என்னை கேட்டு திக்குமுக்காட வைத்துவிட்டார் அதனால் மறுபடியும் அவர்மூலம் உங்களிடம் உங்க ஏ டி எம் கார்ட் மற்றும் போனை கொடுக்க முடியது. ப்ளீஸ்... நீங்களே வந்து வாங்கிக் கொள்ளுங்களேன் என்றான் மாதவன்.

யாழிசைக்கு கையில் இருந்த அந்த விலைவுயர்ந்த போனும் அதில் இருந்த ஆயிரக்கணக்கான பணத்தையும் எப்படியாவது அவனிடமே திருப்பி கொடுத்துவிடவேண்டும் என்ற உந்துதலிலும் தனது ஏடிம் கார்டையும் மற்றும் மொபைலையும் வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்திலும் சரி நான் காபி ஷாப்பிற்கு வருகிறேன் என்று கூறினாள்.

அவள் காபி ஷாப்பிற்கு நுழைந்தயும் போதே அவளுடன் வந்து இணைந்து உள்நுழைந்தான் தீரன். சட்டென்று அவன் முகத்தை பார்த்ததும் அடையாளம் தெரியாதவகையில் அவன் அணிந்திருந்த புளூ ஜீன்ஸிற்கு பொருத்தமாக அதே கலர் கேப் கொண்டு முகத்தை மறைப்பது போன்றும், பெரிய சை கூலிங் கிளாஸ் கொண்டு மீதியாக தெரியும் முகத்தையும் மறைக்கும் விதமாக அணிந்திருந்தான். புல்சிலீவ் வொயிட் பனியனுடன் காலில் விலை உயர்ந்த கேன்வாஸில் அரவம் எழுப்பாமல் தன்னை நெருங்கிவந்த தீரனை அந்த நிலையிலும் யாழிசை உணர்ந்துகொண்டாள்.

வந்தவன் இயல்பாக ஹாய் யாழிபேபி... அந்த கார்னர் டேபிளுக்கு போயிடலாம் என்றபடி அவளின் கையோடு தனது கையை பிணைக்க முயன்றான்.

அவன் அவ்வளவு உரிமையாக தன்னுடன் நெருங்கி நடக்க முயன்றதுமே மிரண்டுபோனவள் தன் கையேடு கை கோர்க்க அவன் முயன்றதும் என்னசெய்றீங்க நீங்க... என்று வெடுக்கென்று தனது கையை அவனிடம் இருந்து பறித்தவள் வேகமாக அவன் கூறிய டேபிளுக்கு போய் அமர்ந்தாள்.

அவளின் அந்த செயல் தீரனின் முகத்தில் புன்னகையை விதைத்தது அவளின் பின்னாலேயே வந்தவன் அவளின் எதிரில் அமர்ந்தபடி என்ன சாப்பிடுற என்று கேட்டதும்

நான் ஒன்றும் உங்க கூட சாப்பிட வரல.... இந்தாங்க நீங்க என் பர்ஸில் வைத்த போன் என்றவள் கத்தையாக ரூபாய் நோட்டுகளை எடுத்து இதையும் வாங்கிகோங்க... என்று அவனிடம் நீட்டினாள்.

அவன் அவள் நீட்டிய ரூபாய் நோட்டுக்களை வாங்கியவன். போனை அவளின் புறம் நகர்த்தி எடுத்து பர்சினுள் வைத்துகொள் பேபி என்றான். அப்பொழுது அவர்களிடம் வந்து நின்ற செர்வரிடம் டூ கோல்ட் காபி என்று ஆர்டர் கொடுத்தான்.

அவனின் நிதானமான அச்செயல் அவளை ஆத்திரம் கொள்ளச் செய்தது. என்ன நெனச்சுகிட்டு இருக்கீங்க உங்க மனசுக்குள்ள..! நான் இந்தளவு நீங்க என்னிடம் மிஸ்பீகேவ் செய்தும் எதுவும் உங்களை ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பதை கண்டு என்னை இளப்பமாக நினைத்துவிடீர்களா?.

நீங்க வானவராயர் அய்யாவின் மகன் என்று காட்டிய ஆதாரத்தை என்னால் அலட்ச்சியபடுத்த முடியாததும், ஏதோ ஒரு கரணத்தினால் உங்களால் அய்யாவை நேராக பார்க்க இயலவில்லை அப்படி பார்த்தாள் அய்யாவுக்கு பிரச்சனை வரும் என்று சொல்லிஇருகிறீர்கள் என்ற காரணத்தால்.

நான் அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் ஏதாவது செய்து, அது என்னை என் குடும்பத்தை இத்தனை காலமாக ஆதரித்துவரும் அய்யாவிற்கு ஏதேனும் பாதகமாக மாறிவிடுமோ என்ற காரணத்திற்க்காக பல்லை கடித்துக்கொண்டு பொறுமையாய் இருக்கிறேன்.

இப்படி ரூபாய் கொடுத்து போன் வாங்கிகொடுத்து என்னை விலைக்கு வாங்கிவிடலாம் என்றும். என்னை வேறுமாதிரி எண்ணத்துடன் நெருங்கலாம் என்றும் நீங்கள் மீண்டும் இதுபோல் செய்தீர்களானால் நான் பொல்லாதவளாக ஆகிவிடுவேன் என்று படபடவென பொரிந்தாள்.

அவளின் கோபம் கண்டு ம்...கூம் நோ பேபி, என்னிடம் இப்படி கோபமாக பேசக்கூடாது என்றவன், அவனின் வேலட்டினுள் இருந்து அவளின் ஏ.டி.எம் கார்டை எடுத்து அவளிடம் நீட்டினான்.

என்ன இதை மட்டும் கொடுக்குறீங்க என் போன் எங்க?என்று கேட்டபடி அதனை எடுத்து தன பர்சினுள் வைத்தபடி கேட்டாள் யாழிசை .

அவளின் முன் அவன் நகட்டி வைத்த அந்த கேலக்சி s9 ஐ காட்டி இதோ உன் போன் என்றான்.

அவள் உடனே இது ஒன்றும் என் போன் இல்லை என்று கூறியவள் ப்ளீஸ் விளையாடாம என் போனை கொடுங்க . நான் இங்க உங்களோடு உட்கார்ந்து இருப்பதை தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிட்டால் என்னை தப்பா நினைப்பாங்க என்று அவன் அவளை ரசித்துக்கொண்டு பேசுவதை கண்டு தான் வந்த நோக்கம் நிறைவேராமல் எழுந்து போக முடியாததால் அசவுகரியமாக அமர்ந்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.