(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

மிதுனன் கல்லூரி வளாகத்துக்குள் நுழைவதற்கு முன்பு வரை, வழியில் அவன் சந்தித்த அவனின் ஆசான் சத்திய மூர்த்தியுடன் நடந்த தற்போதைய அவர்களின் ஏரியாவில் நிலங்களை சி.என்.ஜி நிறுவனம் கைப்பற்ற முயல்வது பற்றிய சாராம்சத்தை விவாதித்ததே  அவன் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

மிதுனன் தனது அப்பாவின் உடன்பிறந்த அண்ணனும் அவனது ஆசானுமாகிய சத்திய மூர்த்தியின் வளர்ப்பில், அவரைபோன்றே நாட்டு நடப்பில் ஈடுபாடு கொண்டவனாகவும் அநியாயத்தை கண்டால் எதிர்த்துநிற்கும் போர்குணம் உடையவனாகவும் வளர்ந்து நின்றான்.

அவர்கள் விவாதத்தில் மிதுனனுக்குதெளிவான விசயங்கள் இதோ:     “1991 ம் ஆண்டுமுதல் தாராள மயமாக்கல் என்ற கொள்கையில் இந்தியா பல பணக்காரர்களை உருவாகியிருகிறது. இந்தியா போன்ற நாடுகளின் தனியார் மயமாதல் என்ற கொள்கையின் ஏற்றுமதியான கனிமங்கள் பூமியை குடைந்து எடுக்கப்பட்ட வளங்கள் மூலம் கார்பரேட் தங்களது வளங்களை பெருக்கிக்கொண்டன. இதனால் செல்வங்கள் மிகச்சில நபர்களிடம் மட்டுமே குவியத்தொடங்கின.

மேலும் மிதுனனின் பெரியப்பா  Confessions of an Economic Hitman by John Perkins:2004 என்ற புத்தகத்தை படித்ததாகவும் அதில் பொருளாதார அடியாளாகிய ஜான்பெர்கின்ஸ் தனது அடியாள்பணிக்கு கியாட்டோ ஈகுவடாரின் தலைநகருக்கு வரும்போது அந்நாடு இருந்த அழகையும் செழிப்பையும்,  நிலைமையையும் வர்ணித்து கூறியிருந்தார்.  அவர் பணி (ஏற்றுமதியான கனிமங்கள் பூமியை குடைந்து எடுக்கப்பட்ட வளங்கள் மூலம்) நிறைவுற்று அதன் பின் சில வருடங்கள் கழித்து அங்கு வந்தபோது அவர் போட்டுவைத்த புள்ளியில் அரங்கேறியிருந்த கோர தாண்டவத்தால் சிதைக்கப்பட்ட அவலட்ச்சனமான ஈக்குவட்டாரையும் வர்ணித்து கூறியிருந்தார்” என்று கூறியதும் மிதுனனின் நினைவிற்கு வந்தது.

 கார்ப்பரேட்டார்கள் அதுபோன்ற கோர தாண்டவத்தை இங்கு ஆட முயல்கிறார்களோ! என்ற எண்ணமும் அதனை தொடர்ந்து அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது.

இதே யோசனையுடன் கல்லூரிக்கு வந்தவனின் எண்ணம் யாழிசையை கண்டதும் காணாமல் போனது. அவள் தனது  தோழிகளுடன் நாட்டிய பயிற்சி மேற்கொண்டிருந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இயற்கையிலேயே அழகாக இருந்த அவளின் எளிமையான தோற்றத்திலும் தெறிக்கும் அவளின் கம்பீரத்தின் மீதும், ஆண்களை எட்டநின்று பேச வைக்கும் அவளின் கண்ணியமான நடவடிக்கை மேல் அவள் நடன அசைவுகளில் மயக்கும் கனைகளின்மேல் வரவர தான் பித்தாகிவிடுவோமோ! என்று பயந்தான் மிதுனன்.

அவளை மிதுனன் ஆசையாக பார்க்கும்போது தன்னை அவளுக்கு பதில் அவளின் அருகில் இருக்கும் சந்தியா ஆசையாக பார்ப்பதை அவன் அசவுகரியமாக உணர்ந்தான்.

சந்தியா, யாழிசை போன்று இயற்கை அழகி இல்லையென்றாலும் அவளின் வீட்டில் இருந்த செல்வச்செழுமையின் காரணமாக மினுமினுத்த அவள் தேகமும். செல்வ சீமாட்டியாக இருந்தபோதிலும் எல்லோரிடமும் எளிமையாக பழகும் அவள் குணமும் அவளையும் அழகியாகவே காட்டியது .

இருந்தபோதிலும் அவளின் தந்தை பெரிய அரசியல்வாதியாக மக்களிடம் தெரிந்தாலும் அவரின் மறுபக்கம் இருட்டானது என்பதனை உணர்ந்தவன் அவன்.

எனவே அப்படிப்பட்ட அவரின் மகளுக்கும் தனக்கும் சம்மந்தம் இருப்பது தன்னுடைய பொதுச்சேவைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அவளிடம் நட்பைகூட அவன் வளர்க்காமல் ஒதுங்கியே இருந்தான்.

முதல் முதலில் யாழிசை கல்லூரியில் அவள் சேர்ந்த வருடம் பங்குபெற்ற முதல் நடன நிகழ்ச்சியிலேயே அவளின் பால் ஈர்க்கப்பட்டான் மிதுனன்.

யாழிசையுடன் நெருங்கிப்பழக முயன்ற மிதுனன், அவள் தன்னுடைய ஆர்வமான பார்வையை அடையாளம் கண்டு ஒதுங்க நினைத்ததை கண்டுகொண்டான்.

எனவே காலேஜ் ஹீரோவாக தன்னை பார்க்கும் கூட்டத்தில், தன்னை பார்த்து வில்லனாக மருண்டு ஓடும் யாழிசையிடம் நெருங்க அவளின் தோழி சந்தியாவிடம் (அவளிடம் நட்பாக கூட பழகக் கூடாது என்று ஒதுங்கியிருந்ததை மறந்து) நட்பாக நெருக்கி பழக ஆரம்பித்தான்.

மிதுனனின் கண்ணியமான பேச்சும் அவனின் ஹீரோயிசத்திலும் ஈர்க்கப்பட்ட சந்தியா அவனின் மேல் ஆர்வம் கொண்டாள்.

தன்னுடைய யாழிசையின் மீதான காதலை வளர்க்க சந்தியாவுடன் நட்பாக அறிமுகமானதால் முக்கோண காதலாக மாறிப்போன நிலையை எண்ணி தவித்தான் மிதுனன்.

சந்தியாவின் மனதில் தான் நுழைந்ததை யாழிசை அறிந்துகொண்டதை உணர்ந்த மிதுனன், தனது காதலை யாழியிடம் வெளிபடுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டான்.

ஏற்கனவே தன் ஆர்வமான பார்வையை அவாய்டு செய்யும் யாழிசை, அவளின் தோழி சந்தியா தன்னை விரும்பும் விசயம் தெரிந்ததால் கட்டாயம் தன் காதலை ஏற்றுக்கொள்ள  மாட்டாள் என்பதை உணர்ந்து செய்வது அறியாமல் குழம்பி நின்றான்.

மேலும் இந்த வருடத்துடன் தனது கல்லூரி வாழ்க்கை முடிந்துவிடும். எனவே அவளுடன் இந்த ப்ரோகிராம் டைம் நெருங்கி தன் மனதில் யாழிசை மீது தனக்கு இருக்கும் காதலை சொல்லிவிட வேண்டும் என்றும் முடிவெடுத்திருந்தான் மிதுனன். ஆனால் அவன் நினைத்தபடி எதுவும் நடக்கப்போவது இல்லை என்பதை காலம் அவனுக்கு உணர்த்த காத்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.