Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 06 - சாகம்பரி குமார் - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 06 - சாகம்பரி குமார்

Midimaiyum achamum meviya nencham

றுநாள்…

நேற்றைய சந்திப்பிற்குபின் சதா வைபவைபற்றி தெரிந்து கொண்டாள். இது காதல் இல்லை! அவன் ஏதோ ஒரு எண்ணத்தில் அவளிடம் நெருங்க முயற்சிக்கிறான். அவளுக்கு திடுமென விஜயா மேடம் மீதும் சந்தேகம் வந்தது. இந்த விசயத்தில் அவர்களும் உள்கையாக இருக்குமோ எண்று எண்ணினாள்.

ஆனால், சரியான ஆதாரம் இலாமல் ஒருவரை சந்தேகப்படுவது மிகவும் தவறான செயல் என்று அந்த சிந்தனையை அப்படியே நிறுத்தி வைத்தாள். எதிர்காலத்தில் விஜயா மேடம் அவளிடம் பழகும் முறையை வைத்து இந்த விசயத்தை முடிவு செய்யலாம் என்று ஒரு கமா போட்டு வைத்தாள்.

அடுத்து பானுமதி அத்தை… அவர்கள் எவ்வளவு தெளிவானவர்கள் என்று இப்போது புரிந்தது. ஆரம்பத்திலேயே கணித்து விட்டார்களே! என்ன அவள்தான் அவருடைய பேச்சை கேட்காமல் மொக்கை பட்டம் வாங்கி விட்டாள்! அத்தை உங்களுக்கு ஒரு தேங்க்ஸ்!

அப்புறம் அந்த புவன் சார்… திடுக்கென என்ட்ரி தந்து ஓநாயின் நீல சாயத்தை வெளுக்க வைத்து விட்டார். இல்லையென்றால் அவளுடைய கதி மிகவும் மோசமாகி இருக்கும்.! புவன் சார் உங்களுக்கு ஒரு டபுள் தேங்க்ஸ்!

சரி, அடுத்து என்ன செய்வது எண்று யோசித்தாள்!

ம்…. இங்கே ஜெய்பூரில் அவள் தனித்து இருப்பது நல்லதல்ல. வைபவை மீண்டும் சந்திக்க நேரிடலாம்! அவள் சென்னைக்கே திரும்ப வேண்டும்… அந்த வைசாக் பற்றிய மரணம்… அந்த குற்ற உணர்ச்சி…? அதுதான் அத்தை இருக்கிறார்களே… மனோதத்துவ புரபஸர்… அவருடைய வார்த்தைகளை கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டியதுதான்!

கொஞ்சம் இளகிய மனம் இருந்ததால்… எந்த நிலைக்கு கீழிறங்கி விட்டாள்!. நோ சான்ஸ்…! சதா… சியர் அப் யுவர்செல்ஃப்!

இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டு அலுவலகம் வந்து விட்டாள். சிஸ்டமை ஆன் செய்யும்போது…  அலைபேசி ஒலித்தது… வைபவ்!

“சொல்லுங்க வைபவ்!”

“ஏதாவது வழி யோசித்தாயா சதா?” அவன் கேட்டான்.

‘யோசிச்சாச்சு… ரொம்ப நல்லா…. தெளிவா… புரிஞ்சு போச்சு’ என்று சொல்ல விரும்பவில்லை! அப்படியே அமைதியாக  நடிப்பை போட்டு, அவனை விட்டு விலகி விட வேண்டும்!

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இல்லை வைபவ் எனக்கு ஒரு வழியும் கிடைக்கவில்லை!”

“உன் அப்பாவிடம் கேட்கலாமில்லையா?”

“நீ உன் அம்மாவிடம் கேட்கலாமில்லையா?”

“அது…. அம்மாவிற்கு  நம் திருமணத்தில் விருப்பமே இல்லை சதா.”

ஓ… இது ஒன் மே ஷோதானா? விஜயா மேடமிற்கு தொடர்பில்லை போலும்!

“என் அப்பாவுக்கும்தான்” சதா தொடர்ந்தாள்.

“அவரை கன்வின்ஸ் செய்ய நான் எவ்வளவு கஷ்டபட்டேன் வைபவ். ஒருவழியாக திருமணத்திற்கு சம்மதித்து விட்டார். இப்போது போய் பணம்னு கேட்டால் தவறாக நினைப்பார்…”

“இப்போ என்ன செய்யலாம்?”

“ம்… கொஞ்சம் காத்திருக்க வேண்டியதுதான். ரெண்டு மாதம் நோட்டீஸ் பீரியட் முடியனும்”

“ஓகே… சதா… நான் இன்னிக்கு நீலகிரிக்கு ஒரு வேலையா கிளம்பறேன். பிறகு சந்திப்போம்”

“திடீர்னு…” சதா இழுத்தாள். நடிப்பை ஒழுங்காக செய்யனுமே…

“அது அம்மாவிற்கு உடல் நலமில்லை…”

“அய்யோ அத்தைக்கு என்னவாயிற்று.. நானும் உங்களுடன் வரவா?” என்று பதட்டம்போல் குரல் எழுப்பினாள்.

“இல்லை இல்லை சதா… நான் பார்த்துக் கொள்கிறேன்…” வைபவ் அவளைவிட பதட்டமாக பதில் கூறினான். பயப்படறியா வைபவ்… கூடவே தொற்றிக் கொண்டு வந்துடுவேன்னு பயப்படறியா வைபவ்..! அப்படியே கையை விடாம பிடிச்சிட்டு உன்னோட வந்து ஒரு வழி பண்ணலாம்… ஆனால் அதுக்கும் ஒரு வொர்தானவனா நீ இருக்கணும்! அணு அளவிற்குகூட உன்மேல் எனக்கு மதிப்பில்லை… ப்ளடி ச்ச்சீட்! கெட் லாஸ்ட்!

“ஓகே டேக் கேர்” என்று அலைப்பேசியை வைத்தாள்.

ஒரு செல்ஃபி எடுத்து பார்த்தாள். முகம் களையாக தெளிவாக இருந்தது. வைசாக்கின் மரணம் நடந்த நாளிலிருந்து அவளைவிட்டு தொலைந்து போயிருந்த தைரியம், தெளிவு அத்தனையும் திரும்பியிருந்தது.  நீண்ட நாட்கள் கழித்து தன்னை தெளிவாக பார்த்துக் கொண்டவள் புன்சிரிப்புடன் வேலையை தொடர்ந்தாள்.

ஆனால் புவன்தான் குழப்பத்திலிருந்தான். இந்த சதா என்னதான் செய்யப் போகிறாள்? கண்டிப்பாக வைபவ் உதவ மாட்டான்! ஏதாவது காரணம் சொல்லி கழட்டி விட்டிருப்பான். பணத்திற்கு என்ன செய்வாள்… அவனிடம் என்ன பதில் சொல்லப் போகிறாள்?

அவனிடம் அவள் வந்து நின்று கண்கள் கலங்கியபடி ‘என்னால் பணம் கட்ட முடியாது சார்’ என்று சோகமாக நின்றால்தானே அந்த மாபெரும் திட்டத்தை அவளிடம் அவனால் சொல்ல முடியும்! அது ‘ரூட்டை மாத்து’ திட்டம்தான்! வைபவிடம் இருந்து அவளை விலக்கி கொண்டு போகும் மாயமான் திட்டம்தான்!. நோ… நோ.. உதாரணமே தப்பு… வைபவ் என்ன ஸ்ரீராமசந்திர மூர்த்தியா… மாயமானை அனுப்புவதற்கு…

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Sagampari

Completed Stories
On-going Stories

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 06 - சாகம்பரி குமார்saaru 2018-10-19 14:43
Sada baby Ivlo tellliiivu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 06 - சாகம்பரி குமார்SAJU 2018-10-10 18:51
super ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 06 - சாகம்பரி குமார்AdharvJo 2018-10-10 16:02
wow excellent & interestng flow Ms Sagampari :clap: :clap: Unga disclosure at the end of the epi could be vise versa also.... I mean sometimes changing ourselves would lead to a better path isn't :Q: sila samayam adhu thevaiyum kuda.... of course indha epi-la depict seitha mathiri sikalgalum erpadalam :yes: But idhu just sikkal illai Inga idiyappam family-a sikala sikkikittu irukuramathiri irukku ma'am :D :D As always flattered with ur humor filled dialogues :hatsoff: This humor keeps me calm to safely drive along with u :dance: Numerological illai saadha sadha its psychological impact ;-) thank god ur away frm dat erumai :P BB (banu Buvan) mission sodhapalo? now mazhai-il mulatha kalan is Sadha appadi ena plan pottu irukanga :Q: goat thana gate thirandhu vandhu matikitadhu pole irukke :sad: Look forward to know her master plan ;-) pys factor about our second defeat is well expressed :hatsoff: Agreed!.Ingayum oru mun janmam ah :eek: wat is dat??
thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 06 - சாகம்பரி குமார்Chillzee Team 2018-10-10 07:42
nice going Sagampari kumar ji :clap:
Reply | Reply with quote | Quote
# MidimaiyumAruna 2018-10-09 18:18
Oru Velai bhuvan aama we are married nu solliruvaaro.... Nice flow mam, expecting for the next update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் - 06 - சாகம்பரி குமார்mahinagaraj 2018-10-09 17:51
நல்லாயிருந்தது மேம்.... :clap: :clap:
சதா பயங்கரமான பொண்னு தான்.. நல்லா பழிவாங்கராங்க.. ஆனா அது பின்னாடி நல்லாதா அமைஞ்சா சந்தோசம்... :yes: :lol:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-15 12:11
மிக்க நன்றி மகி...
ஆமாம் பழி வாங்குறாங்கதான்... ஹீரோயின்னா சும்மாவா?
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-15 12:12
Thank you Saju
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-15 12:14
:yes: :yes:
கிட்டதட்ட அப்படித்தான்... புவனின்மீது பழிபோட்டால் சும்மா விடுவாங்களா?
கருத்து பதிந்தமைக்கு நன்றி அருணா!
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-15 12:15
Quoting Chillzee Team:
nice going Sagampari kumar ji :clap:

Thank you very much Team!
Reply | Reply with quote | Quote
# சாகம்பரிSagampari 2018-10-15 12:27
Welcome Adharv,
Thank you very much for your comment posting. I have answered your query in next epi's disclosure (appdina aduththaa epiyaiyum padichaaganum :-) ) Eppuudi?
Not single goat... two goats... guess who is holding the cutlass..?
'This humor keeps me calm to safely drive along with u'.. Thank you... the secret is ... I also trust this one...
No mun jenmam story... it is timely delivered dialogue only.. cool!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top