(Reading time: 11 - 22 minutes)

மிதுனன் தனது காலேஜ் பங்சனில் ஆர்கனைசிங் வேலையில் மும்முரமாக இத்தனை நாள் இருந்ததினால் அவன் தனது ஏரியாவில் நடந்த சலசப்புகளை கவனிக்கவில்லை .

இன்று காலையில் சாப்பிட்டுகொண்டிருக்கும் போது அவனின் அருகில் அமர்ந்து இருந்த அவனின் அப்பா, மிதுனா.... நம்ம மேலகாட்டு வயக்காட்டை லீசுக்கு சி.என்.ஜி நிறுவனம் 25 வருஷம் கேட்டு வந்தார்கள் நம்ம நிலத்தை மட்டுமல்ல மிதுனா நம்ம மேலக்காட்டை சுற்றி உள்ள உள்ள 7 கிராமங்களின் உள்ள நிலங்களை அந்த நிறுவனம் அரசாங்க உதவியோடு கை பற்றும் நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது.

என்னமோப்பா நம்ம மக்கள் காலகாலமாக சோறுபோட்ட நிலங்களையெல்லாம் பொத்தல் போட்டு பூமிக்கடியில் இருந்து எண்ணெய் எடுகப்போறாங்களாம். நம்ம ஊரில் இருக்கிறவங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப் போறாங்கலாம், மேலும் நான்குவழிச்சாலை வேறு போடப்போவதாக சொல்லிகிடுறாங்க. விவசாய நிலத்தை மலடாக்காம எதுசெய்தாலும் சரிதான் என்று கூறினார்.

அவர் அவ்வாறு கூறியதும் யோசனையான மிதுனன் நீங்க லீசுக்கு கொடுக்க சம்மதிச்சு எதுலயும் கையெழுத்து போட்டுட்டீங்கலாப்பா என்று அவர் கூறிய செய்தியை கேட்டான்.

அவன் அவ்வாறு கேட்டதும் இல்ல மிதுனா! ஆனா ஊரையே வளச்சுடுவாங்க அரசாகத்தின் ஒத்துளைப்போடு அரசியல்வாதிகளின் துணைகொண்டு அந்த நிறுவனம் செயல்படும்போது நம்மை போன்ற பொது ஜனங்க என்ன செய்யமுடியும்? என்று கூறினார்.

அதற்குமேல் அவரிடம் அதைபற்றிய விசயங்களை ஆழமாக விசாரித்துவிட்டே பேசனும் என்று முடிவெடுத்தவன், அப்பா நீங்க நம்ம ஊர் பொங்கல் சாட்டுறதுக்கு ஊர் பொதுக்கூட்டம் நாளைக்குதானே கூட்டுறதா சொல்லியிருக்கீங்க! அதுக்குள்ள நம்ம நிலத்தை சுத்தி இருக்கிற நிலமெல்லாம் நம்ம அங்காளி பங்க்காளிடம் கூடத்தில் நம்ம ஊர் நிலத்தை கேட்டுவரும் சி.என்.ஜி நிருவனத்துக்கு நிலங்களை கொடுத்தால் நம்மபூமி விவசாயத்துக்கு லாயகிலாததா மாறிடும் என்று கூறி, அதனால் கொடுக்க முடியாது என்று ஒட்டுமொத்தமா பேசச்சொல்லி கூட்டத்தில் முடிவெடுக்க சொல்லுங்க.

அதற்குமேல் பிரசர்கொடுத்தால் இதைப்பற்றி வரும் சாதக பாதகத்தை நல்லா விசாரித்து நாங்கள் தெளிவடைந்தபின் கொடுப்பதை பற்றி யோசிப்பதாக பேசச் சொல்லுங்க இன்னும் ஒருநாளில் என் கல்லூரியில் உள்ள பங்சன் முடிந்ததும் நானே அதைபற்றிய தகவலை திரட்டி முழுவிவரத்தையும் எல்லோருக்கும் சொல்கிறேன் என்றான். .

அப்பொழுது அவனின் அப்பா மிதுனா எதுனாலும் பார்த்து செய்யணும் நீ கடைசிவருஷ படிப்பில் இருக்க, வாழ்கையில் நீ செட்டில் அகிர இந்த நேரத்தில் பொதுக் காரியத்தில் ஊருக்காக இறங்குனா உன் எதிர்காலம் பாதிக்கப்படுமோனு கவலையா இருக்கு என்றார்.

அப்பா நான் படித்து வேலைக்குபோகனும் என்று நினைப்பதே கொஞ்சம் காசுசேர்த்து நம்ம விவசாய நிலத்தை இன்னும் விரிவுபடுத்தி இயற்கை முறையில் விவசாயம் செய்யனும் என்ற ஆசையால்தான்..

நம்ம வானவராயர் அய்யாமாதிரி நானும் இயற்கை விவசாயத்தில் சாதிக்கனும் என்று நினைக்கிறேன். அந்த நிலமே மலடாகிடுமோ என்ற உங்களின் கவலை இப்பொழுது என்னையும் தொத்திகிடுச்சு அப்படி ஆகிடக்கூடாது.

சரிப்பா காலேஜ் நேரமாகிவிட்டது நன் புறப்படுகிறேன் என்றபடி வெளியில் வந்தான்.

காலேஜ் பஸ் ஸ்டாப்பில் தனது தந்தையின் துணையுடன் நின்றுகொண்டிருந்தாள் யாழிசை. அவள் கிளம்பும் முன் அவர் பாட்டி ருக்மணி உனக்கு தனியாக போக என்ன பயம் என்று கேட்டதும் அலார்ட் ஆகிவிட்டால் யாழிசை, விஷயம் தெரிந்தால் தன்னை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்துவிடுவாள் காலேஜுக்கு படிக்க கூட விடமாட்டாள் என்பதை உணர்ந்திருந்தவள் மனதிற்குள் ரூட்டை மாத்து யாழி என்று கூறிவிட்டு.

யாரப்பார்த்து பயப்படுகிறாயா? என்று கேள்வி கேட்டுட்ட என்னை பார்த்து என் காலேஜே கிடுகிடுத்து போயிருக்கு நானாவது இன்னொருத்தரை பார்த்தாவது பயப்படுறதாவது.

உனக்கென்ன உங்க மகனை நான் கஸ்ட்டப்படுத்தக் கூடாது அவ்வளவு தானே! எனக்கு கால்வலிச்சாலும் பரவாயில்லை நானே நடந்தே போய்கிடுறேன் இப்போ உனக்கு திருப்தியா பாட்டி! என்று சிலிர்த்துக்கொண்டு பேசினாள்.

யாழிசை அவ்வாரு கூறியதும் கணேசபிள்ளை, அம்மா.. புள்ள கால்வலின்றதால்தான் என்னை கூட்டிக்கொண்டு போகச்சொல்கிறாள். இதுக்குபோய் ஏன் அவகூட நீங்க மல்லுகட்டிகிட்டு இருக்கீங்க! வா...மா நான் உன்னை ஸ்டாப்பில் விடுறேன் என்றபடி வெளியேறினார்.

ஆனால் ருக்கு பாட்டியோ மேலும் கூர்மையாக அவளை பார்த்தபடி சரிப்பா கூட்டிட்டுபோ சாயங்காலம் எப்போ வருவான்னு கேட்டுக்கோ! உன் மகளிடம் அப்போதானே நீ ஸ்டாப்பில் ரெடியா அவளுக்கு வரும் நேரம் காத்திருக்கமுடியும் என்று கூறினார்.

யாழிசையோ அவள் அப்பா கூப்பிட்டதும் தனது பாட்டியின் துளைக்கும் பார்வையைக் கண்டும் காணாதவாறு தப்பித்தால் போதும் என்று தனது காலேஜ் செல்லும் பேக்கை எடுத்துகொண்டு, அப்பா சாயந்தரம் நான் இன்று லேட்டாகத்தான் வருவேன். நாளைக்கு ப்ரோகிராமுக்கு இன்று ரிகர்சல் முடிந்ததும் உங்களுக்கு போன் செய்கிறேன் என்று கூறியபடி ருக்குவின் அருகில் வந்தவள் அவளின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டுவிட்டு, பை... கிழவி என்று பின் வரும் அவளது வசவுகளில் இருந்து தப்பிக்க வேகமாக வெளியேறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.