(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 31 - சித்ரா. வெ

Nenchodu kalanthidu uravale

ருள்மொழி முன்பு சொன்னது போலவே 20 நாட்களுக்குள்ளேயே தனது ப்ராஜக்ட்டை முடித்த அமுதன் லண்டன் கிளம்ப தயாரானான். அவனது தந்தையும் தாயும் ஆசிரியர் துறையில் இருக்க, அவனுக்கோ கணினி துறையில் தான் அதிக ஆர்வம் உண்டு. அதை பாடமாக எடுத்து பொறியயல் படிப்பை முடித்தவன், தனது வேலையை ஈடுபாட்டோடு செய்யக் கூடியவன், அதனாலேயே அவன் எடுக்கும் ப்ராஜக்ட்டை வெற்றிகரமாக முடித்து விடுவான். அவன் எப்போது இந்தியா  வந்தாலும் எடுத்த நேரத்தை விட குறைவான நேரத்தில் ப்ராஜக்ட்டை முடித்துவிட்டு, தன் நண்பர்களுடன் ஆரம்பித்திருக்கும் தனது சொந்த நிறுவனத்தின் வேலையையும் பார்த்துவிட்டு தான் லண்டன் செல்வான். ஆனால் இப்போது அங்கே லண்டனில் உள்ள அவர்களது கம்பெனியின் முக்கியமான வேலைக்கு அழைத்திருப்பதால், உடனேயே அவன் கிளம்ப வேண்டியிருந்தது.

நாளை இரவு அவன் விமானம் ஏற வேண்டும், இன்றோடு அவனது அலுவலக வேலைகள் முடிந்துவிடும், முன்பே அவன் லண்டன் செல்லவிருக்கும் செய்தியை அருள்மொழியிடமும் இலக்கியாவிடமும் தெரிவித்திருந்தான். அவனோடு பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவம் என்று இருவருமே அவனிடம் அடிக்கடி கூறிக் கொண்டிருந்தனர். ஏற்கனவே அவர்களுக்கு பயிற்சி கொடுக்க இருந்தவர் விடுமுறை முடிந்து திரும்ப வேலைக்கு வந்திருந்தார். ஆனாலும் இத்தனை நாள் அமுதனோடு பணி புரிந்ததால், அப்படியே இருக்கட்டும் என்று அவன் கூறியிருந்தான்.

ஆனால் இப்போது அவன் லண்டன் செல்ல வேண்டியிருந்ததால், மீதியுள்ள பத்து நாட்கள் ஏற்கனவே நியமித்திருந்தவரே  அவர்களுக்கு பயிற்சி கொடுக்கட்டும் என்று அமுதன் பேசி வைத்திருந்தான். இத்தனை நாள் அவனோடு பணிபுரிந்துவிட்டு இப்போது வேறொருவருடன் பணி புரிய இருவருக்குமே பிடிக்கவில்லை. இருந்தும் பத்து நாட்கள் தானே என்று எதையும் இருவரும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.

அன்று அருள் தெளிவாக சொல்லிவிட்ட பின்பும், அருள் அமுதனை வைத்து  கேலி செய்துக் கொண்டிருந்த இலக்கியா, பின் அமுதன் லண்டன் புறப்பட போவது அறிந்து, பிறகு இருவரையும் சேர்த்து  கேலி செய்வதை நிறுத்திக் கொண்டாள்.

அன்று இருவரும் வேலை முடிந்து வீடு திரும்ப தயாராகிக் கொண்டிருந்த போது அமுதன் அவர்கள் அருகில் வந்தான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“இந்த 20 நாள் உங்கக் கூட வொர்க் பண்ணதுல எனக்கு  ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எத்தனையோ பேருக்கு நான் ட்ரெயினிங் கொடுத்திருக்கேன், ஆனா  நீங்க சீக்கிரமே எல்லாம் கத்துக்கிட்டு என்னோட ப்ராஜக்ட் முடிக்க ரொம்ப உதவியா இருந்தீங்க, இந்த ப்ராஜக்ட்டால லாபம் கிடைச்சதுன்னா அதுக்கு காரணம் நீங்க ரெண்டுப்பேரும் தான்..” என்று புகழவும்,

“அய்யோ சார்லஸ்.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல”  என்று இலக்கியா கூற,

“இதுல கொஞ்சமே கொஞ்சம் தான் எங்க பங்கு அமுதன்..” என்று அருள்மொழி கூறினாள்.

“ஒரு ஸ்டூடண்ட்டா  நீங்க இப்படி சொல்றது உங்க அடக்கத்தை காட்டுது.. ஆனா உங்கக்கூட வேலை செஞ்ச எனக்கு தெரியும், அதிலும் மொழி நீ இதுல நிறையவே உன்னோட உழைப்பை கொடுத்திருக்க..” என்று சொல்லிவிட்டு,         

“அதுக்காக நீ எதுவும் செய்யலன்னு அர்த்தமில்ல இலக்கியா.. ஆனாலும் உன்னை விட மொழி  கொஞ்சம் ஹார்ட்வொர்க் செஞ்சிருக்கா..” என்று அவள் தவறாக நினைத்து கொள்வாளோ என்று இலக்கியாவிற்கு விளக்கமாக கூறினான்.

“இதை நீங்க சொல்லணுமா சார்லஸ்.. எனக்கே நான் எந்த அளவுக்கு இந்த ப்ராஜக்ட்ல வொர்க் பண்ணியிருக்கேன்ன்னு தெரியும்.. அதனால நிங்க சொன்னதை நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்..” என்று கூறினாள்.

“அமுதன் நாங்க இவ்வளவு அளவுக்கு சிறப்பா செஞ்சிருக்கோம்னா கண்டிப்பா அதுக்கு நீங்க தான் காரணம், இவங்க ஸ்டூடண்ட்ஸ் தானேன்னு பேருக்கு சிம்பிளா எங்களுக்கு ட்ரெயினிங் கொடுக்காம,

உங்க ப்ராஜக்ட்ல எங்களையும் சேர்த்து, இந்த 3 வருஷத்துல நாங்க படிச்சு தெரிஞ்சிக்கிட்டத விட எங்களுக்கு நிறையவே சொல்லிக் கொடுத்திருக்கீங்க, எங்களோட எதிர்காலத்துக்கு இது எங்களுக்கு எவ்வளவு உபயோகமா இருக்கும் தெரியுமா? அதனால நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்” என்று அருள் சொன்னதை இலக்கியாவும் ஆமோதித்தாள்.

“அப்படின்னு பார்த்தா சும்மா இந்த ஒரு மாசம் கடமைக்குன்னு  உங்க இண்டர்ன்ஷிப் முடிக்கணும்னு நினைக்காம, ரொம்ப ஆர்வத்தோடு ரெண்டுப்பேரும் கத்துக்கிட்டதுக்கு உங்களை பாராட்டணும்.. சரி அதைவிடுங்க,

இந்த 20 நாள் நாம சேர்ந்து வேலை பார்த்திருக்கோம், இப்போ நான் லண்டன் போயிடுவேன், நீங்க இதுக்குப்பிறகு உங்க ஸ்டடீஸ்ல பிஸி ஆகிடுவீங்க, இந்த காலக்கட்டத்துல எங்கிருந்தாலும் நம்ம நட்பை தொடருவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.. என்னோட ஆசையும் அதுதான், உங்களோட ப்ரண்ட்ஷிப்பை நான் தொடர நினைக்கிறேன்,

நான் வருஷத்துல ஆறு மாசம் இந்தியாக்கு வந்துட்டு தான் போயிட்ருக்கேன், அப்படி வரப்போ உங்களை திரும்ப சந்திக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு,

ஆனாலும் எதையும் இப்பவே முடிவு செய்ய முடியாதில்லையா, ஒருவேளை இது நாம சந்திக்கிற கடைசி சந்திப்பா கூட அமையலாம், இந்த 20 நாளில் நம்ம வேலையை தவிர வேற நாம பர்சனலா பேசிக்கிட்டதில்லன்னு சொல்லலாம், நாளைக்கு நான் கிளம்பிடுவேன், அதான் இன்னும் கொஞ்ச நேரம் உங்கக்கூட செலவழிக்க நான் விருப்பப்பட்றேன், இன்னிக்கு என் கூட தான் நீங்க டின்னர் சாப்பிடணும், என்ன ஓகே வா..” என்று அவன் கேட்டதும், அருளும் இலக்கியாவும்  ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.