(Reading time: 11 - 22 minutes)

தொடர்கதை - தாரிகை - 13 - மதி நிலா

series1/thaarigai

வருடம் : 2017..

“நிலவே நிழலாய்

உன் பின்னே நான்..”

டடா.. இன்னும் என்னை அவன் பின் தொடர்கிறானோ..??”, மெல்லிய மழைச்சாரல் அவளுக்குள்..

கவனம் வேலையில் சுத்தமாக லயிக்கவில்லை..

நொடிக்கொருமுறை அவள் கண்கள் தாமாக அந்த மஞ்சள் நிறப் பூங்கொத்தையும் அதில் ஒட்டப்பட்டிருந்த சிறுகுறிப்பையும் வருடிச்சென்றது..

இவ்வளவு நாள் நீ எங்கியிருந்தாய் என்ற கேள்வி எழாமல் இல்லை.. இருந்தும் அதற்கான விடை தேடவில்லை அவள்..

அந்தப் பூங்கோத்திலே சிக்கிக்கொண்டது அவள் மனம்.. சிக்கிக்கொள்ள வைத்திருந்தான் அதற்கு சொந்தக்காரன்..

இந்த உணர்வுதான் காதலோ..??

அதுவும் முகம் அறியா ஒருவனுடன்..

ச்சே.. இது எப்படி சாத்தியம்..??

சாத்தியமாகி இருக்கிறதே இங்கே..

அவனுக்கும் என் மேல் காதலா..??

தெரியவில்லை..

இருந்தும் மனம் அவனையே நாடுவதேனோ..??

பெருமூச்சொன்று பிறந்தது தாரிகையிடமிருந்து..

“ஒதுக்கித்தள் தாரிகை இதை.. உனக்கு வேலைகள் குவிந்து கிடக்கின்றன..”, தனக்குத் தானே பெசிக்கொண்டவள் அன்றைய ஷெட்யூலைப் பார்க்க..

மணி ஐந்தைத் தொட்டுவிட்டதால் இனி இன்று நீ கிழிக்க பெரிதாக வேலை ஒன்றும் இல்லை என்பதாய் பழிப்புக் காட்டியது அது..

அடுத்து என்ன செய்வதென்று யோசித்தவளுக்கு வினோதனின் நியாபகம்..

அவன் மனதில் வந்த அடுத்தநொடி அவனது அன்னைக்கு அழைத்திருந்தாள் தாரிகை..

“ஹலோ.. நான் செந்தாரிகை பேசறேன்ம்மா..”

“சொல்லுங்க மேடம்.. நான் வினோ..த்தோட அம்மா..தான்..”, தடுமாறியது அவள் குரல்..

“எப்படி இருக்கீங்கம்மா..??”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ஏதோ இருக்கொம்மா.. சொல்லுங்க..”

“வினோத் ஏதாவது சொன்னான்னாம்மா..??”

விசும்பல் சத்தம் மறுமுனையில்..

“எதுக்கும்மா அழறீங்க..?? ஏதாவது பிரச்சனையா..??”

“அ..தெல்..லாம் இல்..ல.. மே..டம்.. எல்லாம் என் பையன நெனச்சுத்தான்..”

அவரே பேசட்டுமென அமைதிகாத்தாள் தாரிகை..

“எல்லாம் அந்தப்பாவி ரமேஷால வந்ததும்மா..”, என்றவரது குரல் முற்றிலும் உடைந்திருந்தது இப்பொழுது..

“ரமேஷ்..?? யாரும்மா அது..??”

“ரமேஷ்.. என் பக்கத்து வீட்டு பையன்.. அவனும் வினோத்தோட ஸ்கூல்தான்.. பதினொன்னாவது.. அவன் பழக்கிவிட்டதாம்.. இப்போ இவன் இரண்டு பேருக்கு பழக்கிவிட்டிருக்கான்.. என்னத்த சொல்ல..”, என்றவரின் குரலில் அத்தனை ஆதங்கம்..

“ஓ.. வேற ஏதாவது தெரியும்னு சொன்னானாம்மா வினோத்..??”

“வேற ஏதாவதுன்னா..??”

“வேறன்னா.. அந்த ட்ரக்ஸ் அவன் யார்கிட்டயிருந்து வாங்கறான்.. அப்படிங்கற மாதிரி ஏதாவது சொன்னான்னா..??”

“அது பெறுநூர்க்கு சொந்தமான கோவில் ஒன்னு ஆத்தைத் தாண்டி ஒன்னு இருக்கே.. அங்க தினமும் ஒருத்தன் வருவானாம்.. அவன்கிட்ட இருந்துதான் எல்லாரும் ட்ரக்ஸ் வாங்கறாங்க போல.. வினோத்தையும் சேர்த்து.. ஆனா அவனோட பேரெல்லாம் இவனுக்குத் தெரியல மேடம்.. அவன் தினமும் வேற வேற பேர் சொல்வானாம்..”

சிந்தனைக்கோடுகள் தாரிகையின் முகத்தினில்..

“அந்தப் பையன் ரமேஷ்.. அவனோட நம்பர்.. அட்ரெஸ் கெடைக்கும்மாம்மா..??”

“மே..டம்..”, சிறு தயக்கம் அவரது குரலில்..

“நீங்க கொடுத்ததா யாருக்கும் வெளியே தெரியாது..”, அவரது தயக்கம் புரிந்து இவள் சொல்ல..

ரமேஷின் முகவரியையும் அவனது வீட்டு எண்ணையும் தந்திருந்தார் வினோத்தின் தாயார்..

“தாங்க்ஸ்ம்மா..”, என்றபடி போன் வைக்கப் போன தாரிகையை இடைமறித்து, “எங்களுக்கு இதனால எந்தப் பிரச்சனையும் வராதே..??”, வினோத்தின் தாய் கேட்க..

“கண்டிப்பா வராதும்மா.. நாங்க எங்கயும் உங்கப் பேரையோ உங்க மகன் பேரையோ யூஸ் பண்ணமாட்டோம்.. டோன்ட் வரி..”, என்றபடி அவள் போனை அணைக்க..

அவளைப் பார்த்து அழகாய் சிரித்தது அந்த மஞ்சள் பூங்கொத்து..   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.