(Reading time: 11 - 22 minutes)

அதுவரை லேசாக வீசிக்கொண்டிருந்த காற்று இப்பொழுது பலமாக வீச.. மெல்ல மெல்ல தன் மலர் விழிகளை மலர்த்தினாள் நிஷா..

எதிரே நின்றிருந்த தாரிகையின் முகம் அன்பு அன்பு அன்பை மற்றும் சுமந்திருக்க.. கண்களை கசக்கிப் பார்த்தாள் நிஷா..

நிஷா முழித்ததும் தன்னை மீட்டுக்கொண்ட தாரிகையின் முகத்தில் வழக்கம் போல் முழு அழுத்தம்..

உணர்வுகளை வெளிக்காட்டுக்கொள்ளமாட்டேன் என்பதாய் ஒரு ப்ளான்க் எக்ஸ்ப்ரெஷன்..

குழம்பித்தான் போனாள் நிஷா..

“அக்கா.. நம்மல பாசமா பார்த்த மாதிரி இருந்துச்சே..??”, தன்னைத்தானே கேட்டுக்கொண்டவள் இறுகியிருந்த தாரிகையின் முகம் கண்டு மெல்ல மெல்ல எழுந்து நின்றாள்..

“சாரிக்கா.. கொஞ்சம் அசதி தூங்கிட்டேன்..”, தனது செயலுக்கு அவள் வருந்த..

அதைக் காணாததுபோல் வீட்டிற்குள் நுழைந்தாள் தாரிகை..

“அக்கா.. அக்கா.. சாரிக்கா..”, வால்பிடித்ததுபோல் தன்னை பின்தொடர்ந்தவளைக் கண்டு சிரிப்பு வந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை அவள்..

அதை வெளிக்காட்டிக்கொண்டால் அது செந்தாரிகை அல்லவே..

அத்தனை இறுக்கம் அவள் முகத்தினில்..

தன் மேல் தான் கோபமென்று புரிந்தது நிஷாவிற்கு..

வழக்கம்போல் காரணம்தான் புரியவில்லை..

ரெப்ரெஷ் செய்துகொண்டு சோபாவில் தாரிகை அமர, “அக்கா..”, மீண்டும் அவளிடம் வந்து நின்றாள் நிஷா..

பதில் இல்லை பெண்ணிடம்..

“அக்கா.. சாரிக்கா..”

“எதுக்கு நிஷா சாரி..??”

விழித்தாள் நிஷா.. அவளுக்குத்தான் காரணம் தெரியாதே.. அந்நிமிடம் விழிக்க மட்டுமே முடிந்தது..

“எதுக்கு இப்போ முழிக்கற நீ..??”, அதட்டல் பிறந்தது தாரிகையிடமிருந்து..

“அக்கா.. அது.. வந்து..”

“என்ன வந்து போயி.. உனக்கு எத்தனை தடவை சொல்றது..?? அறிவில்லை உனக்கு..??”

“அ..க்..கா..”, திணறலாக..

“என்ன அக்கா லொக்கான்னு..?? கதவை திறந்து போட்டுட்டு இருக்காதேன்னு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. என் பேச்சைக் கேட்டு நடக்கனும்னு தோணவே தோணாதா உனக்கு..??”

“இல்லக்கா.. அது.. நீ வந்திடுவேன்னுதான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. பட் எப்படி தூங்கினேன்னு தெரியல..”

“நிஷா.. இங்கபாரு.. நான் உன்னோட நல்லதுக்காகத்தான் சொல்றேன்..”

“தெரியும்க்கா.. தெரியும்..”, அவசரமாய் நிஷா இடையிட..

“ப்ச்.. நிஷா.. முதலில் நான் சொல்வதைக் கேள் நீ..”, அவளை அடக்கியவள், “இங்கபாரு.. உன்னை சுத்தி பாதுகாப்பே இருந்தாலும் உன்னை பாதுகாப்பது என்பது உன் பொறுப்பு.. நீ கராத்தேல்ல ப்ளாக் பெல்ட்டாவே இருந்தாலும்.. உன்னால ஒருக்கட்டம் வரைக்கும்தான் மத்தவங்ககிட்ட போராட முடியும்.. நீ சினிமா ஹீரோ எல்லாம் இல்லை.. நூறு பேர் வந்தாலும் தனியா நின்னு போராட..

நிஜம் வேறு.. நிழல் வேறு.. நிழல்ல உன்னால நூறென்ன லட்சம் பேரையும் எதிர்த்துப் போராடி ஜெய்க்க முடியும்.. பட் நிஜத்துல பத்துப் பேர சமாளிக்கறதே பெரிய விஷயம்.. புரிஞ்சுக்கோ..

நீ இப்படி கதவைத் திறந்து வெச்சுட்டு அசால்ட்டா இருக்க.. யாராவது வந்து உன்னைத் தூக்கிட்டுப் போனாக்கூட கேக்கறதுக்கு ஆளில்ல இங்க.. பக்கத்துவீட்டுக்காரன்கூட வரமாட்டான்.. அதுதான் நிஜம்..

இனி நீ கதவைத் திறந்து வெச்சிட்டு இப்படி தூங்கக்கூடாது.. மனசுல ஏத்திக்கோ.. இனி ஒருவாட்டி நீ இப்படி பண்ணுன.. அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..”, அவ்வளவுதான் என்பதுபோல் சோபாவில் சாய்ந்திருந்தாள் தாரிகை..

அவளுக்குள்ளும் அத்தனை சோர்வு..

தாரிகையையே உற்றுப்பார்த்த நிஷாவின் செவிகளில் தாரிகையின் ஒவ்வொரு வார்த்தைகளும் எக்கோ அடிப்பதுபோல்..

எவ்வளவு நேரம்தான் தாரிகையை அவள் பார்த்துக்கொண்டிருந்தாளோ..??

“என்ன வீடு இவ்ளோ அமைதியா இருக்கு..??”, ஒருசேர உள்ளே நுழைந்தனர் சமுவும் மொழியும்..

“ஒன்னுமில்லம்மா..”, என்ற நிஷாவின் குரலில் ஆயிரம் விஷயங்கள் புதையலாய்..

சமுவும் மொழியும் மற்ற இருவரையும் தீர்க்கமாக பார்க்க..

“ஒன்னுமில்லக்கா.. சும்மா பேசிட்டு இருந்தோம்.. நீங்க இரண்டு பேரும் போய் ரெஸ்ட் எடுங்க..”, இருவரின் பார்வையும் புரிந்திவாறு கண்கள் திறக்காமல் தாரிகை பதில் சொல்ல..

எதுவா இருந்தாலும் இரண்டு பேரும் பேசிக்கட்டும் என்று மனதில் எண்ணியபடி தங்களது அறைக்குச் சென்றனர் சமுவும் மொழியும்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.